(Reading time: 29 - 57 minutes)

வள் உடல் நலம் பற்றி விசாரிக்கிறானே……இன்று அவன் பட்டபாடு ஞாபகம் வருகிறது. அதற்கு காரணம்  போதிய ஓய்வின்மை என்றாரே மருத்துவர்.

“உள்ள வா முதல்ல….இன்நேரத்துல வெளியே நிக்க வேண்டாம்…” இவள் உள்ளே நுழைய தானும் உள்ளே வந்து கதவைப் பூட்டினான். எப்பொழுதும் இவளைப் பற்றிதான் அக்கரையா?

“எனக்காக ஸ்ட்ரெய்ன் எடுக்காதீங்க……உங்க ஹெல்த்த பார்த்துக்கோங்க...நீங்க போய் படுங்க…..நான் ஹயாவ பார்த்துகிறேன்…..அவ தூங்க இன்னும் டைம் ஆகும்” உள்ளே செல்ல துவங்கினாள். அவள் பின் வந்தான் அரண்.

இப்பொழுது அவன் படுத்திருந்த அறையை இவள் தாண்ட வேண்டும். “போய் படுங்க அரண்….குட் நைட்…”

அவளை ஒரு நொடி நின்று பார்த்தவன் “குட் நைட்….குட் நைட் ஹயாமா “ என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனைத் தாண்டி ஒரு எட்டு வைக்கவும்தான் வெளியே கேட்ட பேச்சுக் குரலும் செடியில் மறைந்த ஏதோ ஒன்றும் ஞாபகம் வருகிறது சுகவிக்கு. “அது வந்து..” அவனிடம் விசாரிக்க இவள் திரும்ப அதற்குள் அவன் அறையிலிருந்து அவசரமாக ஒருவித பதற்றத்துடன் வெளியே வந்திருந்தான் அரண். “என்ன சுகவிமா….?”

இவளை சற்று முன் காணாமல் வெளியே போய் தேடும் போது எவ்வளவு பதறி இருப்பான்? ஆனால் இவளைக் கண்டதும் இவளிடம் துளி கடுமை காண்பிக்கவில்லையே….உணர்ச்சிப் பூர்வமான மனிதனாக இருந்தாலும் உணர்ச்சியின் அடிப்படையில் நடந்து கொள்பது இவன் சுபாவமில்லை போலும்.

சுகவிதாவுக்கு வேறு ஒன்றும் புரிந்தது எந்த காரணத்தை முன்னிட்டும் இவள் அடுத்த அறையில் இருக்கும் வரை அவனுக்கு போதிய ஓய்வு கிடைக்கப் போவது இல்லை எனபதுதான் அது. இப்படி இவளது  ஒரு ஒரு சலனத்துக்கும் சத்தத்திற்கும் தூங்காமல் எழுந்தால் அவன் உடல் நிலை என்னாவதாம்?

இப்பொழுது இவளுக்கு அவன் பற்றி வரும் நினைவுகளையா கனவுகளையா உணர்வுகளையா எதை வைத்து  இவர்கள் உறவை முடிவு செய்ய வேண்டும் என்று தெரியவில்லைதான். ஆனால் சக மனுஷியாக அவன் இன்று பட்ட பாட்டை பார்த்தபின்பும், எக்கேடும் கெடட்டும் என்று அவன் உடல் நிலையை  விட முடியாதே..

“உங்கட்ட ஒன்னு கேட்பேன்….தப்பா எடுத்துக்க கூடாது….”.

“சொல்லுமா…”

“ நானும் ஹயாவும் உங்க கூட….ஐ மீன் இந்த ரூம்ல இருக்கலாமா…….? பெட் ரூம்னு சொன்னீங்களே அது வேண்டாம்….” அதற்குள் செல்ல பலவித தயக்கம் அவளுக்குள்.

பதிலின்றி பார்த்தான் அவன். இதை என்ட்ட கேட்கனுமா? என்றது அவன் கண்கள்.

அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஒரே ஒரு படுக்கைதான் இருந்தது. ஓரளவு சின்னதும் கூட.

“இது சரியா வராது என் ரூம்க்கு வாங்க….அங்க பெட் பெருசா இருக்கும்…”

அடுத்த சில நிமிடங்களில் அவள் அறை படுக்கையில் அவன்.

“இங்க தான் இருக்கோம்…ஹயா தூங்கவும் நானும் படுத்துடுவேன்…..நீங்க எங்களைப் பத்தி யோசிக்காம தூங்குங்க…..”

இரண்டாம் நிமிடம் தூங்கி இருந்தான் அரண். ஹயாவின் ங்கா….ஆ….ங்காம்மா….வோ அவளை கொஞ்சிய சுகவியின் சத்தமோ அவனை எழுப்பவே இல்லை. இப்படி தன் மனைவி மகள் சந்தோஷ சத்தத்தில் தூங்கி அவர்களது சிறு கஷ்டத்திலும் தூக்கம் கலைந்து அலைந்து இருப்பவன்  தனக்கு கெடுதல் செய்திருக்கவே மாட்டான் என்று தோன்றியது அந்த நொடி அவளுக்கு.

ஆனால் மறுநாள்தான் கதை காட்சி அமைப்பு என எல்லாம் மாறிப் போனது.

நொடி நேரத்திற்குள் ப்ரபாத்தின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியை தாண்டி எகிறி ஏறியது சங்கல்யாவின் கோபம்.. அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தவள் எப்பொழுது எழுந்தாள் என அவளுக்கே தெரியவில்லை. ஆனால் எழுந்திருந்தாள்.

அவள் கண்ணில் தெரிந்தது முன்னிருந்த டேபிள். அதன் மீதிருந்த இரும்பாலான சிறு கிரிகெட் பேட். அலங்காரத்திற்காக வைக்கப் பட்டிருந்தது போலும். இப்போதைக்கு இது உதவும்….சட்டென உருவி கையில் எடுத்தாள். ஓங்கி அவனை நோக்கி….அடுத்த நொடி அதை தடுத்துப் பிடித்திருந்தான் ப்ரபாத்.

“வாய்ட்ட பேசிட்டு இருக்கப்ப கைக்கு என்ன வேலை….?” சற்று கடுத்திருந்தது அவன் குரல். வெப்ப மூச்சுகளாய் கோபம் மூச்சிரைக்க தன் முழு பலம் கொண்ட மட்டும் அந்த பேட்டை அவன் கைபிடியிலிருந்து உருவப் போராடினாள் சங்கல்யா. இப்பொழுது அதன் மீதான தன் கைப் பிடியை ப்ரபாத் ஒரு சுழற்று சுழற்ற அவன் கையோடு போனது அந்த இரும்பு பேட்.

“சம்மதம்னா சரின்னு சொல்லு….இல்லைனா இல்லைனு சொல்லு….இது என்ன கை நீட்ற பழக்கம்….?”

“என்னைப் பார்த்தா எப்டி தெரியுது….?” கர்ஜித்தாள் அவள்.

“ம்….பணத்துக்காக என்ன வேனாலும் செய்றவன்னு தெரியுது…..”

“வாட்…?”

“பிறகு…..இப்ப பணத்துக்காகதான இவ்ளவு தூரம் என்னை தேடி வந்திருக்க?”

இருந்த கோபத்தில் இதற்கு என்ன பதில் சொல்லவென்றே தெரியவில்லை சங்கல்யாவுக்கு. அறைக் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள் அவள். அவள் சென்ற பின்பும் ஆடிக் கொண்டிருந்த கதவைப் பார்த்தான் ப்ரபாத்.

ண்மண் தெரியா கோபத்தோடு வேக வேகமாக நடந்து கொண்டிருந்தாள் சங்கு. பக்கத்தில் ஆட்டோ எதுவும் தட்டுபடுதா? என்ன இந்த அனவரதன் இவ்வளவு கேவலாமா இப்டி ஒரு பொறுக்கிட்டப் போய் மாட்டிவிட்டுட்டு போய்டாரே…?

அதே நேரம் அவளது மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். வல்லராஜன் ….அவளது சேனல் ஓனர். இணைப்பை ஏற்றாள்.

“குட்….” இவள் தொடங்கும் முன் வெடித்தார் அவர்.

“என்ன குட்…ஒன்னும் குட் இல்ல….எல்லாம் நாசமா போச்சு…. நல்லா வருது வாய்ல….உன்னை என்ன சொன்னா நீ என்ன செய்து வச்சிருக்க….?”

“சார்…”

“என்ன சாரு…மோர்லாம்….என்னை நடுத்தெருவுல நிப்பாட்ட எத்ன நாளா திட்டம் போட்ட…?”

“அப்டில்லாம் இல்ல சார்…”

“ஓ அப்டினா அதோட நிறுத்தாம கொன்னு குழிலயே இறக்கிடலாம்னு திட்டமோ…?”

“சார் என்ன விஷயம்னு சொல்லுங்க…இல்லனா லைன கட் பண்ணிடுவேன்….” இவ்ளவுதான் சங்கல்யாவின் பொறுமை.

“ஏய் என்ன நீ….ஒரு மரியாதை…”

“சார் விஷயத்துக்கு வாங்க…”

“என்ன விஷயம்னு சொன்னாத்தான் தெரியுமோ…சின்னதாவா செய்து வச்சிருக்க…..?”

“சார்…”

“அந்த அனவரதன்ட்ட போய் வல்லமை சேனல்ல இருந்து அவர் மகளோட வீட்டை உளவு பார்க்கப் போறதா சொல்லி வச்சிருக்க….அவருக்குத் தெரியாம செய்யுன்னு சொன்னா…அவர்ட்டயே சொல்லிருக்க….”

“அது சும்மா…அப்டின்னா …” இவளை பேச விடவில்லை அவர்.

“சும்மாவா…..அதுவும் நீ பேசுறதை வீடியோ ரெக்கார்ட் வேற செய்யவிட்டுறுக்க”

“வாட்…?” இது நிச்சயம் சங்கல்யா எதிர்பாராதது. அவள் தான் யார் என சொல்லாமல்தான் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாள் அனவரதனைப் பார்க்க. அப்படி இருக்க இவ்வளவு முன்னேற்பாடாய் அவர் எப்படி..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.