(Reading time: 29 - 57 minutes)

ன்ன சத்தம் மூச்சை காணோம்…? அவர் அதை வச்சுகிட்டு இப்போ நம்ம சேனல் மேல கேஸ் போட போறாராம்….300 கோடி நஷ்ட ஈடு கேட்க்றார்….”

“என்னது…?”

“ஆங்…இப்ப கேளு நொன்னது…? இது அவர் மகள் மருமகனோட மன நிம்மதியை கெடுக்குமாம்…அதனால அவங்க விளையாட்டு திறமை பாதிக்கப் படுமாம்….அதனால அவங்க ரெண்டு பேரோட வின்னிங் ரேட் குறையுமாம்…ப்ரைஃஸ் மணி குறையுமாம்….அதனால அவங்களுக்கு கிடைக்கிற கமர்சியல்ஸ் குறையுமாம்…இது அவங்களுக்கான நஷ்டமாம்…அதோட நம்ம இன்டியன் ஃபேன்ஸ் டிசப்பாய்ண்ட் ஆவாங்களாம்…அது இவங்க ஸ்பான்ஸர்சை பாதிக்குமாம்….இப்டி என்னலாமோ சொல்லி முன்னூறு கோடி கேட்கிறாங்க….”

“அதுக்கு நீங்க என்ன சார் சொன்னீங்க…?”

“ம்…வீட்டுக்கு வாங்க செக்கோட வெய்ட் செய்றேன்னு சொல்லிருக்கேன்….”

“சார்…”

“அட என்னமா நீ…? 300 கோடிக்கு நான் எங்க போக? இப்போதான் வளர்ந்து வர்ற சேனல் நம்மளோடது……ஊழலை துப்பறிய போனோம்னு இருந்தால் கூட பிரவாயில்லை….இப்டி காசிப்க்காக போனோம்னு தெரிஞ்சா…ஆடியன்ஸ் மத்தியிலயும்தான் நமக்கு என்ன நேம் இருக்கும்….இதோட என் சேனல் காலி…”

“என்ன சார் செய்யலாம்…?”

“என்ன செய்யலாமா…? ஒழுங்கா போய் அந்த அனவரதன்ட்ட இருந்து நீ அந்த விடியோவை காலிசெய்துட்டு வா…அத அவர் கால்ல விழுந்து செய்வியோ இல்லை கழுத்த பிடிச்சு செய்வியோ….ஆனா அவர் இனிமே என்னை தொந்தரவு செய்யக் கூடாது. அவர் எதோ உனக்குன்னு ஒரு வேலை கொடுத்தாராமே அதை மட்டும் முடிச்சு கொடுத்துட்டன்னா கேஸ் போட மாட்டேன்னு சொன்னார்….அத வேணும்னாலும் செய்……அதுக்கு உனக்கு சம்பளத்தோட லீவ் வேணும்னாலும் தாரேன்…”

“இல்ல…அது என்னால முடியாது….”

“ஓ அப்டியா….அப்படினா உன்னையும் அந்த அனவரதனையும் சேர்த்து தப்பு தப்பா நம்ம சேனல்ல நானே நியூஸ் போடுவேன்….அதுல உங்களுக்குள்ள வந்த சண்டைல தேவை இல்லாம சேனலை இழுக்கீங்கன்னு ரீசன் சொல்வேன்….எது வசதின்னு நீயே டிசைட் செய்துக்கோ…”

விக்கித்துப் போய் நின்றாள் சங்கல்யா. இந்த வல்லராஜன் ஒரு ஓநாய் என அவளுக்குத் தெரியும். அது தன் கோரப் பற்களை இப்பொழுது இவளிடமே காண்பிக்கிறது. இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

கெஞ்சுவதால் இரக்கப்பட அனவரதனோ வல்லராஜனோ பெண் இல்லையே….ஆனால்…? இரண்டு  பெரிய ஜந்துகளிடமிருந்து இவள் தப்ப வேண்டுமானால் ஒரே வழி…அந்த ஜந்துகளை தங்களுக்குள் மோதவிடுவதுதான்….

மீண்டுமாய் அனவரதன் அலுவலகம் நோக்கி ஆட்டோ எடுத்தாள். அவரிடம் இந்த வல்லராஜன் மிரட்டலை சொல்லலாம். அப்படி ஒரு செய்தி ஒளிபரப்பாகினால் இவளுக்கு மட்டுமா அவமானம்? அவருக்கு ஒன்றும் இல்லையாமா?

 ஆனால் மான அவமானத்தைப் பத்தி பயப்பட அவர் என்ன பெண்ணா? அவர் அலுவலகத்தை சென்றடையும் போது நம்பிக்கை காணாமல் போயிருந்தது சங்கல்யாவுக்கு. நிச்சயமாய் வழி தெரியவில்லை. ஆனாலும் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது பேசிப் பார்க்கலாம். குறைஞ்ச பட்ச்சம் நல்லா திட்டவாவது செய்யலாம்….

அனுமதியின்றி அவர் அறைக் கதவை பட்டென்று திறந்துகொண்டு நுழைந்தாள். “உங்க பொண்ணு நியூஸ் மட்டும் மீடியாவுக்குப் போய்ட கூடாது….ஆனா என்னைப் பத்தி யார்னாலும் என்ன வேணாலும் நியூஸ் போடலாம் என்ன?” வெடித்துக் கொண்டே கதவை தன் பின் அறைந்து சாத்தினாள்.

அந்த கதவு தாழ்போடும் சத்தம். தூக்கிவாரிப் போட அவள் திரும்பிப் பார்த்தால் தாழிட்ட கதவின் மீது சாய்ந்தபடி மார்புக்கு குறுக்காக கட்டிய கைகளுடன் நின்றிருந்தான் ப்ரபாத். எதிரில் இருந்த அனவரதன் இருக்கையோ காலியாய்…கண்மண் தெரியா கோபத்தில் இதை இவள் கவனிக்கக் கூட இல்லை. இப்படி வந்து மாட்டிக் கொண்டாளே…

“டேய்…..கதவ திறடா….நான் சத்தம் போடுவேன்….” உள்ளுக்குள் உதற ஆரம்பித்திருந்தது சங்கல்யாவுக்கு. ஆனால் மகா தைரியமாய் காண்பித்துக் கொண்டாள்.

“உனக்கு எப்டியோ……?என்னோடவள தவிர யாரையும் என் மனசால கூட நான் தொடமாட்டேன்…..”

வாய் பேசியதே தவிர சிறு அசைவு கூட அவனிடம் இல்லை.

என்ன சொல்லிவிட்டான் இவன்? முதலில் பணத்திற்காக எதையும் செய்பவள் என்று சொன்னவன் இப்பொழுது????

“ ஆமா…நான் கண்டிப்பா உங்கள மாதிரி கிடையாது…..இப்டி உள்ளவிட்டு பின்னால பூட்டிட்டு…. உத்தமி நான்னு டயலாக் அடிக்க……”

“ம்…பேசிகிட்டு இருக்கப்பவே ஓடிப் போறவங்கட்ட பேசனும்னா கதவை பூட்டதானே  வேண்டி இருக்குது”

“ம்…ஓட வைக்றமாதிரியான விஷயத்த பேசாம இருந்தா கூட போதும்….ஏன் ஓடுறாங்களாம்?”

“நான் உன்ட்ட என்ன சொன்னேன்…..?” மிக மிக அமைதியாய் கேட்டான் அவன்.

கோபம் அக்னியாய் சங்கல்யாவிற்குள் கொழுந்துவிட்டு எரிந்தாலும் கவனம் அவன் கேள்வியில் சென்றது. அதை அவன் கேட்டவிதம் காரணமாயிருக்கலாம்.

என்ன சொன்னான் இவன்? அவன் சொன்ன எங்கேஜ்மென்ட் கதை ஞாபகம் வரும்போதே இங்கு அவன்  பேசத்தொடங்கிவிட்டான்.

“என் ஃபியான்சிங்க்றத தவிர வேற என்ன காரணத்தை சொல்லி உன்னை நான் என் ஃப்ரெண்ட் வீட்ல தங்க வைக்க முடியும்? அதுவும் சுகா பிறந்ததுல இருந்தே எனக்கு பழக்கம்ங்கிறப்ப….” அதே அமைதியான பேச்சு.

சங்கல்யாவின் மூளை கொஞ்சமாய் இவன் சொல்லிய கோணத்தில் யோசிக்கத் தொடங்கியது. ஆமால்ல….இல்லைனா எப்டி இவளை அரண் உள்ள சேர்க்கிறதாம்…?

“ஸோ நீங்க கேட்டது ஆக்டிங்க் தானா…?” பல்ப் பாவத்துடன் லுக்விட்டாள் சங்கல்யா.

அவனோ அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.

தேவையில்லாம இவன்ட்ட சண்டைபோட்டு இப்போ ரெண்டு ஜந்துங்கட்ட போய் மாட்டிகிட்டேனா…? சங்கல்யா மனதிற்குள் மாநாடு.

இது கோர்ட்ஷிப் மைடியர்..…இதெல்லாம் உன்ட்ட சொல்ல முடியுமா ஸ்வீட்ஹார்ட் மனதிற்குள் சிரிப்போடு நினைத்துக் கொண்டான் அவன். வெளியே அதே அழுத்தமான லுக்.

இவள் மனதில் வல்லமை ராஜன் சொன்னது ஞாபகம் வந்தது. ஆக அந்த வல்லமை ராஜன் அனவரதன் இருவரிடம் இருந்தும் தப்பிக்க இதுதான் வழி. அனவரதன் சொல்வதை செய்து கொடுத்துவிடலாம். அதேநேரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவள் பற்றிய வீடியோ வைத்து அவர் மிரட்ட முடியாயாதவாறு அவர்வீட்டு காரியங்கள் குறித்து இவள் எதாவது விடியோ செய்து வைத்துக் கொள்ள வேண்டும்…பின்னால் இவள் இந்த வேலையை செய்து கொடுத்த பின்பும் அவர் இவளை மிரட்டாமல் இருக்க அது உதவும். ஆம்பிளைங்கள மட்டும் நம்பவே கூடாது

“அரண்ட்டயும் சுகவிதா மேடத்திட்டயும் மட்டும் அப்டி சொல்லப் போறீங்களா?” டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் தெரிந்தாக வேண்டுமே இவளுக்கு.

“சுகாவை விட அரண் மூத்தவன்..”

ஓ அவனை பேர் சொல்லகூடாதாமா? புரிந்துவிட்டது சங்கல்யாவுக்கு.

“அரண் சார்ட்டயும் சுகவிதா மேடத்திட்டயும்…மட்டும் சொ…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.