(Reading time: 29 - 57 minutes)

ன் ஃபியான்சி அரணை அண்ணானு சொல்ல வேண்டி இருக்கும்…” சொல்லிக் கொண்டே போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ப்ரபாத். மேஜைக்கு எதிரிலிருந்த நாற்காலியைக் காண்பித்தான் இவளுக்கு.

‘ஆங்…..அண்ணாவா…..? ஹூம்….நாய் வேஷம் போட்டா குரைக்கத்தான செய்யனும்…?’ உள்ளுக்குள் நொந்து கொண்டாள் சங்கல்யா.

“அதோட இன்னொரு விஷயம்” இவள் போய் உட்காரவும் ஆரம்பித்தான் அவன்.

“அவங்க என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஃஸ்…..அவங்க நம்பனும்னா…. நீ  அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும்…”

கிட்டதட்ட முறைத்தாள். “தப்பா எதுவும் சொல்லலை….மத்தவங்க என்னை கூப்ட்ற அதே நேம்ல நீயும் கூப்டாதே….கொஞ்சம் ஸ்பெஷலா எதாவது நேம் வச்சுக்கோ….அங்க நான் இருக்கிறப்ப முடிஞ்சவரை நான் இருக்கிற இடத்துல நீயும் இரு…..அவங்க முன்னால என்ட்ட ஒழுங்கா பேசு….”

“ம்….”

“ஸோ இப்ப கிளம்பலாமா?”

குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். “இப்பவேவா….?”

சின்னதாய் புன்னகைத்தான் ப்ரபாத். “நீட்டாதான் இருக்க….கிளம்பலாம்……” அழகா இருக்கன்னு சொன்னா ஆடிற மட்டியா?

இப்பொழுதும் முறைத்தாள்.

“என்ன?“

“அங்க போய் ஸ்டே பண்றதுன்னா நான் ஒன்னுமே எடுத்துட்டு வரலையே…..”

“அப்டி எதையும் எடுத்துட்டு வரக் கூடாதுன்னுதான் இப்பவே கிளம்புறதே….”

பல்லைக் கடித்தாள் அவள்.

“நோ கேமிரா…..நோ மொபைல்…..நோ கன்….நோ…” அவன் சொல்லிக் கொண்டு போக

“ஷட் அப்….நான் சொன்னது என் ட்ரெஸ்….”

“அதுக்கு நான் பொறுப்பு….”

“வாட்…?”

“ஆன் த வே ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்…யு ஷுட் பி இன் மை ஐ சைட் அதுதான் கண்டிஷன்….எந்த ஷாப் போகனும்…?”

“உங்க கூடயா…? நோ நோ….” இன்னர்கார்மென்ட்லாம் இவனை வச்சுகிட்டு எப்டி வாங்றதாம்? மனதிற்குள் தவிப்பு.

“அப்ப அரண் வீட்டுக்கு கிளம்பு….”

“எனக்கு ட்ரெஸ்?”

“ம்….அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…நீ தான் வரமாட்டேன்றியே… ?”

மாத்த ட்ரெஸ்ஸே இல்லைனு சொன்னா இவன் ஃப்ரெண்ட்ஸ்லாம் சந்தேகமே படமாட்டாங்களாமா? அந்த அனவரதன் ப்ளான் இவனால சொதப்புனா இவளுக்கென்னவாம்?

கடுகடு முகத்துடன் அவன் பின் நடந்தாள். அவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

 “உன் மொபைல மட்டும் என்ட்ட குடுத்று….” நூல் அவன் கையில். இவள் பொம்மை. பொம்மலாட்டம் ஆடித்தானே ஆக வேண்டும்.

மௌனமாக அவனிடம் நீட்டினாள். அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து தன் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான்.

அங்கே போய் இவன் என்ன சொல்லப் போகிறான்? என்னதையும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்கள் இவனைப் பற்றி இவளிடம் பேசுவார்கள் தானே அப்பொழுது இவள் எப்படி முழிக்கப் போகிறாளாம்?

“அங்க உங்களப் பத்தி கேட்டாங்கன்னா நான் என்ன சொல்றதாம்….?”

“என்ன பத்தி அவங்களுக்கு தெரியாத விஷயம்ன்னு எதுவுமே கிடையாது…..அதனால அவங்க உன்ட்ட வந்துதான் என்ன பத்தி கேட்கனும்னு அவசியம் இல்லை…”

“ப்ச்….நீங்க சொல்லப் போற கதைக்கு…”

“கதையா….?”

“உங்க ஃபியான்சின்னு சொன்னா…..நமக்கு எப்டி பழக்கம்….என்ன ஏன்ன்னு எவ்ளவு கேட்பாங்க…..அதுவும் உங்கள பத்தி அவங்களுக்கு தெரியாத எதுவுமே கிடையாதுன்றப்ப…..எப்டி திடீர்னு லவ் அப்டின்னு….…”

திரும்பி அவளைப் பார்த்தான்.

“நம்ம ரெண்டு பேரும் ஓரளவாவது ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கனும்….மாத்தி மாத்தி உளரக் கூடாதே….”

வாவ்…..இதத்தான் இதையேத்தான் எதிர்பார்த்தேன் என் செல்ல சிக்ஸர்…..நானா என்னைப் பத்தி சொன்னா காதுகுடுத்து கேப்பியா நீ….

“நான் பிறந்தது நியூயார்க்ல…..” இயல்பாய் தன்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான் ப்ரபாத். முதன் முறையாக ஒரு ஆணிடம் அவன் சொந்த வாழ்க்கை பற்றி பேசினாள் சங்கல்யா.

“ அப்பா அங்க ஒரு  இண்டியன் ரெஸ்ட்டரண்ட் வச்சுருந்தாங்க…சின்னது….சுகா ஃபாமிலியும் நாங்களும் ஒரே அப்பார்ட்மென்ட்ல தான் இருந்தோம்….எனக்கு இளையவ அவ…ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம்…தென் நான் ஃபிஃப்த் க்ரேட்ல இருக்றப்ப அப்பா தவறிட்டாங்க….. அப்புறம் அம்மா அங்க ரெஸ்ட்டரண்டை சேல் செய்துட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க….அதுவரைக்கும் அம்மா ஹவ்ஸ் வைஃப்….அம்மாவால அங்க தனியா சமாளிக்க முடியலை….இங்க வந்து டீச்சரா ஜாய்ன் செய்தாங்க…அதே ஸ்கூல்ல நானும் படிச்சேன்….அங்க அரண் எனக்கு க்ளாஸ்மேட்…..6த்ல  இருந்து அவன் எனக்கு ஃப்ரெண்ட். தென் ஃப்யூ இயர்ஸ்ல சுகா அப்பாவும் இங்க மாறிவந்துட்டாங்க..”

“ஏன்…?”

இதற்குள் அவன் கார் அருகில் வந்திருந்தனர். தன் கார் கதவை திறந்து விட்டான் அவளுக்கு.

“ அவங்களுக்கு இங்க பிஸினஸ் எஸ்டாப்ளிஷ் செய்யனும்னு ஆசை…..அதுவரைக்கும் அவங்க ஒரு கம்பெனில எம்ளாயீதான்…அதோட அவங்களுக்கு யு எஸ் ல செட்லாகிறது பிடிக்கலை….”

“ஓ…” காரில் ஏறி அமர்ந்தாள் சங்கல்யா.

“அப்போ சுகா சிக்ஸ்த்  எங்க ஸ்கூல்ல ஜாய்ன் செய்தா….” அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவாறு சொன்னான்.

“சிக்‌ஸ்த்ல இருந்தே அரணுக்கும் சுகாக்கும் பழக்கமா….?”

“ம்….” சிரித்தான் ப்ரபாத். “அது ஒரு பெரிய கதை. அதை அப்புறமா பேசுவோம்……”

கார் சாலையில் ஓடத்தொடங்கியது.

ப்ரபாத் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனான். அவன் கிரிகெட் இன்ட்ரெஸ்ட், அவன் ரசனைகள், குழந்தைகால குறும்புகள், அவன் படிப்பு….முக்கிய நிகழ்ச்சிகள் என என்னவெல்லாமோ….

“உன்னைப் பத்தி சொல்லு….” இப்பொழுது இவளைப் பற்றி விசாரித்தான்.

“ம்…என்னப் பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்லை…..எனக்கு அம்மா அப்பா கிடையாது….பாட்டி மட்டும்தான்…கொஞ்சம் முன்னால அவங்களும் போயாச்சு…இப்ப நான் அக்மார்க் ஆர்ஃபன்….”

திரும்பி அவளைப் பார்த்தான். “இப்டித்தான் உன்னைப் பத்தி இன்ட்ரோ குடுப்பியா…?”

பதிலின்றிப் பார்த்தாள் அவள். “அங்க போய் பாசிடிவா பேசு…அப்பதான் நீ சந்தோஷமா இருக்றமாதிரி தோணும்….”

இது எல்லாமே ஒத்திகை என்பதே மெல்ல அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வருகிறது.

“சாரி….இது ரிகர்சல்னு மறந்துட்டேன்…”

ப்ரபாத் தன் ஆர்வத்தை அவளுக்கு காட்டாமல் மறைப்பதில் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றான் என அவனுக்கே புரியவில்லை. ஆனால் முடிந்தவரை அதை காட்டாமல் அடக்கிக் கொண்டு மீண்டுமாய் அவளைப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.