(Reading time: 19 - 37 minutes)

"ண்மை என்னிக்கும் தூங்காது மாஹீ! நிலா தன் அங்கீகாரத்தை அடைந்தே தீரணும்! அவ அவளோட குடும்பத்தோட போய் சேரணும்!"

"இல்லை...என்னால முடியாது!எனக்கு அவ வேணும்!நான் அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!"

-அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே வெளியே கார் ஹாரன் சப்தம் கேட்டது.நிலாவின் பெற்றோரும்,தமையனும் இறங்கினர்.யுகேந்திரன முகம் எதோ சிந்தனையிலே காணப்பட்டது.

"அவங்க வந்துட்டாங்க!நீ அவங்க பொருளை அவங்கக்கிட்ட ஒப்படைத்தே ஆகணும்!"-மகேந்திரன் கண்ணீரோடு வாசலை பார்க்க விதி புதிய கணக்கினை கொண்டு வந்தது.

கண்ட இந்த பிரபஞ்சத்தில் மனிதனின் தேவையை பூர்த்தி செய்யவே சகலமும் படைக்கப்பட்டுள்ளது. படைக்கப்பட்ட பொருள் இறைவனுக்கே உரியது!ஆனால்,மனிதனோ அதை தனக்கு அடிமையாக்க எண்ணம் கொள்கிறான்.காலத்தின் ஆஸ்தியை மனிதன் தனது ஆஸ்தி என்று எண்ணி மனிதன் தவறிழைக்க தொடங்குகிறான்!உண்மையில்,இந்த சரீரம் கூட மனிதனுக்கு சொந்தமானது இல்லை.அதுவும்,மண்ணுக்கு சொந்தமான ஒன்றே!!!இப்போது கூறுங்கள்,கர்ம வினைப்படி பிறக்கும் இவ்வாழ்க்கையில்,ஆத்மாவிற்கு பாவ புண்ணியங்களை தவிர வேறு எது சொந்தம் என்ன எண்ணுகிறீர்கள்??

"வணக்கம் சார்!என் பெயர் பிரசாத்!"-மிக இதமாக பேச்சை தொடங்கினார்.

"வாங்க! உட்காருங்க!"-மகேந்திரன் முகத்திலும்,மீனாட்சியின் முகத்திலும் கலக்கம் வியாபித்தது.வைஷ்ணவி ஏதும் புரியாமல் நின்றாள்.

"இவங்களைப்பற்றி உனக்கு சொல்ல தேவையே இல்லையே மாஹீ!இவங்க தான் நீ இத்தனை நாளா வளர்த்த வெண்ணிலாவோட அம்மா அப்பா!இவன் அவ அண்ணன்!"-சூர்ய நாராயணன் அதிரடியாக கூற,வைஷ்ணவி அதிர்ந்து போனாள்.

"அவங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்காங்க!" -மகேந்திரன் சரலென்று நிமிர்ந்தார்.அவர் கண்கள் கண்ணீரை தேக்கின.

"வைஷ்ணவி! நிலாவை கூட்டிட்டு வாம்மா!"-சூர்ய நாராயணனே கூறினார்.அவள் கலக்கத்தோடு சென்றாள். நிலையை சமாளிக்க விஷ்வாவும் உடன் இல்லை!!!

நிலாவின் அறை கதவு தாழிடப்படவில்லை. கதவை திறந்தாள்.அவள் ஜன்னல் வழியாக எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.

"அக்கா!"-கண்களை துடைத்துக் கொணடாள் நிலா.

"உள்ளே வா!"

"அக்கா!உங்களை தேடி உங்க அப்பான்னு யாரோ வந்திருக்காரு!"-அவள் திகைத்து போனாள்.

"என்ன நடக்குதுக்கா?யார் அவங்க?நீங்க அவங்கப் பொண்ணுன்னு சொல்றாங்க?"

"பெயர் என்ன சொன்னாங்க?"

"பிரசாத்!"-அவள் நொறுங்கி போனாள்.அடுத்து நடக்க போவது புரிந்து போனது!!!!

"நீ போ!எல்லாம் கை மீறி போயிடுச்சு!நானே கீழே வரேன்!" -அவளின் பதில் புரியாமல் தலையசைத்துவிட்டு போனாள் வைஷ்ணவி!!

கீழே அவள் வரும் மீனாட்சியை மகேந்திரன் தேற்றிக் கொண்டிருந்தார்.வைஷ்ணவியின் கண்கள் கரைந்து கொண்டிருந்தன,நிலா கல்லாய் அங்கே வந்தாள்!!! கீழே வந்தவளின் கண்கள் சுவரையே பார்த்தது!!!

"நிலா! இவங்க..."-மகேந்திரன் வாயெடுக்க, அவரை பேச வேண்டாம் என்று வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.இதுவே,அவள் அவரை மீறிய முதல் நிகழ்வாகும்!

"எதையும் சொல்லி சமாதானம் செய்யாதீங்க!எனக்கு எல்லாம் தெரியும்!என்ன சொல்ல போறீங்கப்பா?நான் உங்க பொண்ணு இல்லை!இவங்க தான் என்னை பெற்றவங்க!இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.அதானே!!!"-மகேந்திரன் தலைகுனிந்து நின்றார்.யுகேனின் பார்வை கூர்மையானது.

"இது என் வாழ்க்கையில நான் அனுபவித்த வேதனைகளோட உச்சக்கட்டம்!!!"-அவளின் இந்த வார்த்தை மகேந்திரனை நொறுக்கியது.

"ஸ்வீட்டி!நான் சொல்றதை!"

"போதும் அங்கிள்!"-அவள் கண்கள் உருகின.

"என்னால இதுக்கு மேல முடியாது!எந்த நியாய,அநியாயத்தை கேட்கிற மனப்பக்குவம் எனக்கில்லை."-அவர் அமைதியானார்.

"நான் யாரை சத்தியத்தோட திருவுரும்னு நினைத்தேனோ!அவர் நடக்கிற எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துட்டு தலை குனிந்து நிற்கிறார்!ஏன் என்கிட்ட இதை மறைத்தீங்க?"

"..............."

"ஒருவார்த்தை என்கிட்ட இந்த உண்மையை சொல்லி வளர்த்திருந்தா...நானும் ஏமாந்து இருக்க மாட்டேனே!"

"நிலா!"

"இன்னிக்கு என்னோட நம்பிக்கை என்னை ஏமாற்றிவிட்டது!என் நிழலே எனக்கு துரோகம் பண்ணியது!"-அவர் வாயடைத்து போனார்.

"நான் என்னப்பா பாவம் பண்ணேன்?எதுக்காக இந்த நிலைக்கு என்னை தள்ளுனீங்க?இந்த விளையாட்டுல என்னை ஏன் பணயமாக்குனீங்க?"

"என்னை மன்னிச்சிடும்மா!நான் இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கலை!"

"எதிர்ப்பார்க்கலையா?அப்படின்னா,உங்க மேல எந்த தப்பும் இல்லை!இங்கிருக்கிறவங்க யாரும் தப்பு பண்ணலை!"

"அம்மா நிலா!"-பிரசாத்தின் குரலில் அமைதியானாள் நிலா.

"எனக்கு உன் வேதனை புரியுது!நாங்க இவங்கக்கிட்ட இருந்து உன்னை பிரிக்க வரலை.உனக்கான அங்கீகாரத்தை கொடுக்க வந்தோம்!"-அவள் கசப்பான புன்னகையை தந்தாள்.

"அங்கீகாரம்...!!எனக்கு மட்டும் எல்லா நல்லா விஷயமும் வேதனையை தருது! உங்களை யார்ன்னு இதுக்கு முன்னாடி எனக்கு தெரியாது!ஆனா விதி உங்களையும் என்னையும் பிணைத்திருக்கு!உங்களை கெஞ்சி கேட்கிறேன்!எனக்கு எந்த அங்கீகாரமும் வேண்டாம்!"-இதுவரை அவளின் பேச்சை கேட்ட தாய்மார்கள் இருவரும் கலங்கினர்.இரு துருவங்களின் இடையே இக்கன்னிகை கண்ணீரோடு நிற்கிறாள்!!!

"உனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்!கொஞ்சம் டைம் எடுத்துக்கோ!ஒரு மாசம் வெறும் ஒரு மாசம் எங்க கூட எங்க பொண்ணா வந்து இரு!அதுக்கு அப்பறம் உனக்கு பிடிக்கலைன்னா நீ இங்கே வந்துடு!ஆனாலும்,நீ என் பொண்ணா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!"-நிலா மௌனம் காத்தாள்.

"நாங்க வரோம்!"-மூவரும் கிளம்ப யுகேன் சற்று கேள்வியோடு நகர்ந்தான்!!! புருவத்திற்கு நடுவே சிந்தனையை கொண்டு போய் எதையோ சிந்தித்தப்படி இருந்தான்

ஞ்சித்!!!ஏதோ சரியில்லை!!!மனம் உறுத்தியது!!! என்னவளை ஏதேனும் துன்பம் அச்சுறுத்துகிறதா??தெரியவில்லை... மனம் பதைபதைக்க யோசித்தான் ரஞ்சித்!!! இருப்பினும் நிலை சரியாகும் வரையில் அவளை காண தயங்கினான். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மனம் வென்றது!!! வாக்கை மூட்டைக்கட்டிவிட்டு காதலுக்காக புறப்பட்டான்!!! அவளுக்கு அழைப்பு விடுத்து பூங்காவிற்கு வர சொன்னான்.

"ரஞ்சித்!எங்கே கிளம்பிட்ட?"

"நிலாவை பார்க்க போறேன்ணா!"

"அவ அப்பா உங்களை ஏத்துக்கிற வரை அவளை பார்க்க மாட்டேன்னு சொன்ன?"

"எனக்கு இப்போ அவர் முடிவைவிட என் காதல் முக்கியம்!"-அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.(ஒரு முடிவோடு தான் கிளம்பி இருக்கிறான்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.