(Reading time: 19 - 37 minutes)

"நீங்க இவளை பெற்றவங்க!நீங்க வளர்த்தவங்க!சரி...ஆனாலும்,எப்படி சார் நீங்க இரண்டுப் பேரும் வாழ்க்கை முழுசும் இவளை சொந்தம் கொண்டாட முடியும்?"-பிரசாத் நிலாவை பார்த்தார்.

"இவ உங்க யார் பொண்ணோ!அது எனக்கு தேவையில்லை.அவ என் மனைவி!! மகேந்திரன் சார்!நான் இவளை உங்களை நம்பி தான் ஒப்படைத்தேன்!அவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வர கூடாதுன்னு சொன்னேன்.ஆனா,இன்னிக்கு அவ வாழ்க்கையே வெறுத்தா மாதிரி என்கிட்ட அழுதா!என்ன பதில் சொல்ல போறீங்க?"

"தம்பி!நீ பேசுறது நிலாவோட அப்பாக்கிட்ட!"

"நான் அவர் பொண்ணை பற்றி பேசலை!என் மனைவியை பற்றி பேசுறேன்!இன்னும் நான் கட்டின தாலி அவ கழுத்துல இருக்கு!"-சூர்ய நாராணனே வாயடைத்து போனார்!!

"போதும்!உங்க சம்மதுக்காக காத்திருந்தது போதும்!ஒரே மாசம்!அதுக்குள்ள நீங்க நிலைமையை ஈடு செய்யாம போனீங்கன்னா...நான் அவளை கூட்டிட்டு போவேன்!யாரும் என்னை தடுக்க முடியாது!அவளுக்கே என்னை தடுத்து நிறுத்துற உரிமை இந்த ஒரு விஷயத்துல கிடையாது!! நான் வரேன்!இப்போ இவ என் மனைவி!அதை ஞாபகம் வச்சிக்கோங்க!"-நான் தனது உரிமையை கூறிவிட்டு நடந்தான்!!!

டந்தவற்றை யோசித்த பிரசாத்தின் கண்கள் மிளிர்ந்தன.

"என்னங்க?"

"ம்.."

"என்னாச்சு?"

"இன்னிக்கு ஒரு பையனை பார்த்தேன்!என்ன தைரியமா பேசுறான் தெரியுமா?"

"யாருங்க?"

"நம்ம மருமகன்!"

"புரியலை.."

"நிலாவுக்கு லைப் பார்ட்னரா வர போறவன்! அவன் பேசுறான்!எங்க யாராலும் எதிர்த்து கேள்வி கேட்கவே முடியலை!அவன் நம்ம நிலா மேல  எவ்வளவு காதல் வச்சிருக்கான் தெரியுமா?"

"காதலா?"

"என்ன காதலா?சான்சே இல்லை!அவன் எவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டான்!அவன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"

"னக்கென்னமோ அவ மேல தப்பு இருக்கும்னு தோணலைம்மா!அவ வார்த்தை,அவ கண்ணீர் எல்லாமே உண்மைன்னு தோணுது!"

"அவ உங்க தங்கச்சின்னு தெரிந்த உடனே,உங்களுக்கு நல்லவளாயிட்டாளா?அவ ப்ரியாவோட வாழ்க்கையை தட்டி பறிச்சிருக்கா!"

"எனக்கு அது உண்மைன்னு தோணலை!"

"நல்லா இருக்குங்க!தங்கச்சி மேல பாசம் வழியுதோ!என்னமோ போங்க!எனக்கு அவ இங்கே வருவது பிடிக்கலை!"-விடாப்படியான தனது மனைவி பேச்சில் தடுமாறி போனான் யுகேந்திரன்.

னித மனமானது கண்கள் பார்க்கும்,செவிகள் கேட்கும்,மூளை ஆராயும் சில விஷயங்களை மெய் என நம்பி ஏமாறுகிறது!! கல்வி மணம் வீசும் அவையில்,சான்றோர்கள் அமர்ந்திருக்க..நடுவிலே ஒருவன் இறைவனையே பார்த்தேன் என்று கூறினாலும்,சூரியனை போன்று மதிநுட்பம் நிறைந்த சான்றோர்கள்...தன் இருதயத்தால் ஆராய்ந்து அன்னமானது நீரிலிருந்து பாலை தெளிந்து பிரித்தெடுப்பது போல உண்மையை மட்டும் பிரித்தெடுப்பர்!!இதுவே,சான்றாண்மையின் முக்கிய குணமாகும்!எனில்,நம்மில் எத்தனை பேர் இம்மதிநுட்பத்தை வளர்த்துள்ளோம்?? தெரியவில்லை...

வெண்ணிலாவின் சிந்தனையை கலைத்து சிணுங்கியது அவளது கைப்பேசி!! யாரென்றும் கவனியாமல் எடுத்து பேசினாள்.

"ஹலோ!"

"சாப்பிட்டியா இல்லையா?"

"ரஞ்சு?"

"என்ன ரஞ்சு?யாருன்னே பார்க்காம போனை காதுல வச்சிக்கறதா?"

".............."

"சாப்பிட்டியா லூசு?"

"இல்லை..."

"ஏன்?மாமா வந்து ஊட்டி விட்டா தான் சாப்பிடுவியா?"

"............."

"பதில் பேசுடி!"

"எனக்கு பயமா இருக்கு ரஞ்சு!"

"என்னாச்சு?"

"தெரியலை..."

"இதோப்பாரு...நான் இருக்கேன்!பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை!"

"ம்.."

"வெளியே போகலாமா?"

"இப்போவா?"

"ம்.."

"இல்லை...ராத்திரி ஆயிடுச்சு!"

"உன்னை ஒண்ணும் பண்ணிட மாட்டேன்!பயப்படாம வா!"

"மாட்டேன்!"

"கோவிலுக்கு போகலாமா?"

"கோவிலுக்குன்னா வரேன்!"

"திருத்த முடியாது!இத்தனை வருஷத்துல எங்கேயாவது ஒரு ரொமான்டிக்கான இடத்துக்கு என்கூட வந்திருப்பியா?எப்போ பார்த்தாலும் கோவிலுக்கு!இந்த முறை என்ன வேண்டிக்க போற?எனக்கு பிரச்சனைகளை எதிர்க்கிற தைரியத்தை கொடுன்னா?"

"இல்லை!"

"வேற?"

"என் ரஞ்சு கூட என்னை சேர்த்து வைத்துவிடுன்னு!"-இவ்வாக்கியத்தை கேட்டவனிடமிருந்து நீண்ட நேரமாய் பதில் இல்லை.

"எனக்கு தெரிந்து நீ உனக்காக வேண்டின முதல் வேண்டுதல் இது அம்மூ!"

".............."

"ஐ லவ் யூ!"

"..............."

"நிஜமா நீ கூட இருந்திருந்தா உன்னை ஹக் பண்ணிப்பேன்!நீ தான் இல்லையே!அதான் இந்த ஐ லவ் யூ!"-நிலாவிடமிருந்து கண்ணீர் சத்தமில்லாமல் வந்தது.

"அழாதே!உன் கண்ணீர் கூட இனி எனக்கு தான் சொந்தம்!!!இனி,நீ அழக்கூடாது!"

"............."

"புரியுதா?"

"ம்.."

"சாப்பிட்டு தூங்கு!கனவுல நான் மட்டும் தான் வரணும்!வேற எந்த விஷயமும் ஞாபகம் வரக்கூடாது!புரியுதா?"

"ம்.."

"குட்நைட்!"

"குட்நைட்!"-இணைப்பை துண்டித்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு இவன் குழப்பத்தில் உழன்றான்!!!

அடுத்து என்ன நடக்க போகிறது?ஏன் இவளுக்கு மட்டும் இதுபோன்ற சோதனை?எங்கும் அன்பினை நிரந்தரமாக இவளால் தக்க வைக்க இயலவில்லை.யாரோ வருகிறார்கள் என்னவளை உரிமை கொண்டாடுகிறார்கள்!! கேட்டவுடன் தானம் அளிப்பதற்கு என் காதல் என்ன நாடகமா?? எக்காரணம் கொண்டும் என்னால் அவளை யாருக்காகவும் விட்டுவிட இயலாது!!அவள் நம்பிக்கை தற்சமயம் என் மீதே!!நான் அதை நொடி பொழுதும் உடைக்க மாட்டேன்!! அவள் எனக்கே சொந்தம்!!!தீர்க்கமான முடிவினை எடுத்தான் ரஞ்சித்!!!

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.