(Reading time: 19 - 37 minutes)

தேதோ சிந்தனைகள் மனதை கொடுமைப்படுத்தின!!!இனி,அவன் மனம் எதையோ தானம் அளிக்கவோ!பொறுத்திருக்கவோ!தயாராய் இல்லை! மழை லேசாக பன்னீர் தூவி அவன் முடிவை வரவேற்றது!!!! கார் பார்க்கை அடைந்தது!! அங்கு யாருமில்லை.ஆங்காங்கே பறவைகள் மட்டுமே இருந்தன!!! நிலாவை தேடினான்.அவள் வரவில்லை.அவள் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டான் எடுக்கவில்லை. மனம் துணுக்குற்றது!!! சிறிது நேரம் அமைதியாக அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அங்கே ஒரு கார் வந்தது. நிலா கவலை தோய்ந்த முகத்தோடு இறங்கினாள். அவன் கேள்வியோடு எழுந்தான்!!! அவனை பார்த்த கண்களில் கண்ணீர்!!ஓடிவந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்!அவளின் நடவடிக்கையின் காரணம் விளங்காதவன் குழம்பினான்.

"அம்மூ! என்னடி ஆச்சு? ஏன் அழுகிற?"

அவள் பதில் பேசவில்லை.

"இதோப் பார்!அழுகையை நிறுத்து!என்னாச்சு?பதில் சொல்லு!"-அவள் மொத்த விவரத்தை கூறினாள்.அவன் மனம் உடைந்து போனது.

'எவ்வளவு பெரிய தவறிழைத்தேன்?எந்த நிலையில் இவளை தனியாய் விட பார்த்தேன்!'தன்னையே நொந்துக் கொண்டான்.

"இதோப் பார் ஒண்ணுமில்லை!அழக்கூடாது!நான் இருக்கேன்!"-அவன் எவ்வளவோ தேற்றிப் பார்த்தான்!கேட்கவில்லை.பொறுமை இழந்தவன்,

"ஏ..சொல்லிட்டே இருக்கேன்!அழுதுட்டே இருக்க?வாயை மூடு!"-அவள் அமைதியானாள்.

"மிரட்டினா தான் வேலை நடக்குது!"அவள் கண்ணை துடைத்துவிட்டான்.

"நீ எதையும் முன்னாடியே சொல்ல மாட்ட!கடைசி நேரத்துல வந்து சங்கரா சங்கரான்னு அழுவ!மனசுல பெரிய தியாகின்னு நினைப்பு!"-அவளையே திட்ட ஆரம்பித்தான்.

அவள் தலைக்குனிந்தப்படி நின்றாள்.ரஞ்சித் அவளது முகத்தை நிமிர்த்தினான்.

"உனக்கு யார் சொந்தமோ பந்தமோ!அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.நீ எனக்கு சொந்தம்!!அதை மறந்துவிடாதே!!புரியுதா??"-அவள் கண்களில் இருந்த அனைத்து வேதனையும் தொலைந்தன.ரஞ்சித் காதலோடு அவள் இதழை தனதாக்கினான்.

எந்த உறவோ!எப்படியோ!காதலுக்கு மட்டும் தனது அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாய் நிலைநாட்டும் அதிகாரத்தை இறைவன் அதிகாரப்பூர்வமாய் அளித்திருக்கிறான்.காரணம்,நமது பந்தங்களை எண்ணுங்கள்!!ஏதேனும் ஓர் ரத்த சம்பந்தத்தினாலோ!வளர்ப்பினாலோ!அது நம் மீது அன்பு பாராட்டுகிறது.ஆனால் காதல்??எங்கிருந்தோ வருகிறது!வாழ்வனைத்தும் நம்மை தாங்கிறது!(நான் நட்பைக் குறித்து எந்த எண்ணத்தையும் பதிவு செய்யவில்லை.அதன் நிலையே வேறு!!!அதை நான் இங்கு கொணரவில்லை)

இப்போது யோசித்தால் காதலானது தனித்துவம் மிகுந்திருக்கும்!!சரியா?? மனதில் இருந்த அனைத்து வேதனையும் தீர்ந்து போனது அவளுக்கு!!இன்னும் தனக்கென ஒருவன் இருக்கிறான்!!மனம் சற்றே இயல்பானது!! அவனது தோள் மீது சாய்ந்து பலம் உள்ளவரை அழுது தீர்த்தாள்.அவனது கைகள் அவளுக்கு ஆறுதலை கொடுக்க தான் செய்தது!! நீண்ட நேரம் கழித்து அவளிடம் விசும்பல் மட்டும் கேட்க சற்றே இயல்பானான் ரஞ்சித்!!

"முடிச்சிட்டியா?"-கண்களை துடைத்துவிட்டான்.

அவளது கண்களை நேராக பார்த்தான்.நிலா தலைகுனிந்து கொண்டாள்!!

"நிமிர்ந்து தான் பாரேன்!எப்போ பார்த்தாலும் குனிந்துக்கிறது!"-அவளது முகத்தை நிமிர்த்தினான்.நீண்ட நேரம் உற்று பார்த்துவிட்டு,

"எவ்வளவு அழகா இருந்த கண்!இப்படி அழுது அழுது சிவந்து போச்சு பாரு!நானும் ஆரம்பத்துல இருந்து பார்க்கிறேன்!யாரோ தப்பு பண்றாங்க,நீ அழுதுட்டு இருக்க! பைத்தியம்!தேவையில்லாம உடம்பை கெடுத்துக்கிற!இப்போ கடைசியா என்ன தான் சொன்னாங்க?"

"ஒரு மாசமாவது அவங்க கூட இருக்க சொல்லி கேட்டிருக்காங்க!அதுக்கு அப்பறமும்,நான் அவங்க பொண்ணாவே இருக்கணும்னு ஆசைப்படுறாங்களாம்!"

"ஓ...நீ அவங்க பொண்ணா இருந்தா!அப்பறம்,எனக்கு பொண்டாட்டியா யார் இருக்கிறதாம்?உனக்கு தங்கச்சி யாராவது இருக்கிறாங்களா நிலா?"-என்று அவன் கண்ணடிக்க,அவள் மீண்டும் புருவத்தை சுருக்கி அழ பார்த்தாள்.

"வேணாம்...என்னால மறுபடியும் முடியாது!வாழ்க்கை முழுசும் உன்னை சமாதானம் பண்ணுவதிலே என் காலம் கழிஞ்சிடும் போல இருக்கே!"

"இப்போ கூட உனக்கு காமெடி கேட்குதா?"-அவள் அவனது நெஞ்சில் குத்தினாள்.

"வேணாம் வலிக்குது!பப்ளிக் ப்ளேஸ்டி!மானத்தை வாங்காதே!"-அவள் மீண்டும் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

"நீ போய் அவங்கக்கூட ஒரு மாசம் இருந்துட்டு வா நிலா!"-அவள் அதிர்ச்சியாக பார்த்தாள்.

"பெற்றவங்களுக்கு உண்டான அங்கீகாரம் அவங்களுக்கு கிடைக்கணும் செல்லம்!சும்மா போய் இருந்துட்டு வந்துடு!"

"என்னால எப்படி அவங்களை ஏற்றுக்க முடியும்?"

"அது இங்கே முக்கியம் இல்லை!உனக்கு அவங்க ஒரு மாசம் டைம் கொடுத்தாங்க!அவங்களுக்கு அதே டைம் நான் தரேன்!"-அவள் புரியாமல் விழித்தாள்.

"என்ன முழிக்கிற?என்னை கடைசிவரைக்கும் இப்படியே இருக்க வைக்கிறதா நினைப்பா?ஒரு மாசம் டைம் அதுக்குள்ள யார் யார் சம்மதிக்கணுமோ எல்லாரும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்!இல்லைன்னா...ஒண்ணும் பண்ணமாட்டேன் செல்லம்!மாமா வருவேனாம்!உன் கையை பிடித்து கூட்டிட்டு வந்துடுவேனாம்!"

"கல்யாணமா?"

"உன் கழுத்துல ஏறின தாலி ஊர் அறிய ஏறலை தானே!அதான்,மறுபடியும் கல்யாணம்!ஒருவேளை நீ மறுபடியும் என் அப்பாவுக்கு பிடிக்கலை,என் ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலைன்னு சொன்ன...தூக்கிட்டு வந்துடுவேன்!என்னால ஒரு மாசத்துக்கு மட்டும் தான் பொறுமையா இருக்க முடியும்! வா!கிளம்பலாம்!"

"எங்கே?"

"அப்படியே ஒண்ணா போறா மாதிரியே கேட்கிறது!உன் மஹீ அப்பாக்கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு!வா!"

"அப்பாக்கிட்ட என்ன பேச போற?"

"தெய்வமே!உன் பொண்ணுக்கிட்ட இருந்து என்னை காப்பாத்துன்னு கேட்க போறேன்!பேசாம வா!அதெல்லாம் எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்!"

"வேணாம் ரஞ்சு!பயமா இருக்கு!"

"நான் ஏற்கனவே அவர்கிட்ட பேசி இருக்கேன்!என்னை அவருக்கு நல்லாவே தெரியும்!பயப்படாம வா!நான் இருக்கேன்!"-ரஞ்சித் அவளது கரத்தை பற்றி நடந்தான்!இனி அவள் பயம் கொள்ள வேண்டியதில்லை.அவன் துணை இருக்கிறதல்லவா!!

ன்னும் அவரால் நம்ப இயலவில்லை.என்ன தைரியமாக பேசிவிட்டு போகிறான்!!ரஞ்சித் நிலாவோடு வரும் போது அங்கே பிரசாத்தும் வேறு இருந்தார்!!!அவளுக்கு உடல் எல்லாம் நடுங்கியது.ஆனால்,அவன்?? புயலென வந்தவன் அவளை பூவென அவள் தாயிடம் ஒப்படைத்தான்!!அவனை கண்ட மகேந்திரன் அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.பிரசாத்திற்கு அவன் யாரென தெரியவில்லை. அவனே பேச தொடங்கினான்.

"நடந்த விஷயம் எல்லாம் எனக்குதெரியும்!அநேகமாக,நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.என் பெயர் ரஞ்சித்!!உங்க பொண்ணோட ஹஸ்பண்ட்!"-அவன் கூறியதும் தடுமாறி போனார் பிரசாத்!!

சூர்ய நாராயணனுக்கு அவனது தைரியம் பிடித்துப் போனது!!

"பிரசாத்!என்ன விஷயம்னு நான் உன்கிட்ட அப்பறமா சொல்றேன்!அமைதியா இரு!"

"இதோப் பாருப்பா ரஞ்சித்!!இப்போ உனக்கு என்ன வேணும்?"

"என்னோட பொருள்!அது உங்கக்கிட்ட இருக்கு!எனக்கு அவ தான் வேணும்!"-அவன் கூறியதும் நிலாவுக்கு மூச்சே நின்று போனது!!கொஞ்சமும் தடுமாறாமல் அவன் பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.