(Reading time: 35 - 69 minutes)

கோபத்தில் முகம் சிவக்க, அத்தனை நேரம் இருந்த பரவசம், சந்தோஷம் சட்டென்று கலைய சரண், " என்ன உளருகிறாய்....வேதாளம் பழையபடி முருங்கைமரம் ஏறி விட்டதா..... ஆமாம் , தெரியாமல் தான் கேட்கிறேன், நாங்கள் எப்பொழுது உன்னிடம் கேட்ட்டோம், நீ எங்களுக்கு ஆண் குழந்தை தான் பெற்று தர வேண்டும் என்று... ஏதோ சந்தோஷத்தில் சட்டென மகன் என்று விட்டேன்.... அதற்காக இப்படியா ஒருத்தி கோபப் படுவாள்... உனக்குதான் பேசத் தெரியுமா?... சட்டப்படி மகனா, மகளா என்று கேட்பதும், சொல்லுவதும் குற்றமே.... படித்த உனக்கு இது தெரியாதா?... ஐ நெவர் எக்ஸ்பெக்டட் திஸ் ஃபரம் யூ துளசி.... இனி ஒரு முறை இத்தகைய பேச்சுக்களை நான் சகிக்க மாட்டேன்... யாரிடம் கோபம் உனக்கு... தெரிந்து தானே இந்த காரியம் செய்யத் துணிந்தாய்?.... இப்பொழுது குத்துதே, கொடையுதே என்றால்....இந்த உன் போக்கை நீ கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்" .... கண்டிப்புடன் சொன்னவன் ஆத்திரமாக காரை வேகமாக ஓட்டுவதில் காண்பித்தான்.

அவமானத்தில் முகம் சிவந்த துளசி எதற்காக இப்படி பேசினோம் என்று தன்னையே நொந்து கொண்டவள், "சாரி... நான் ஏதோ டென்ஷனில் பேசி விட்டேன்" என்று தணிந்து போனவள், மனதில், 'எப்படி குழந்தையை பிரிய முடியும்... முழு உருவமும் தெரியாத பொழுதே இனம் புரியாத பாசம் நம்மை பலவீனப் படுத்துகிறதே.. குழந்தை பிறந்து விட்டால்... நான் எப்படி இந்த நிலைமையை சமாளிப்பேன்... அதனால் தான் இப்படி தாறு மாறாக பேசுகிறேன்' என்று எண்ணியவள், வருத்ததுடன் 'நான் எதையும் பாதியில் விடுபவள் அல்ல, எடுத்த வேலையை முடிப்பேன்'....

"இறங்கு.. உன் கம்ப்யூட்டர் சென்டர் வந்துவிட்டது" என்ற சரணின் குரலுக்கு நிகழ்வுக்கு வந்தவள், ஒன்றும் பேசாமல் அவள் இறங்கியவுடன் கோபத்துடன் காரை வேகமாக ஒட்டிச் செல்லுபவனை செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் துளசி.

கோபமாக காரை ஓட்டிக் கொண்டு சென்றவனை கண்ட துளசி, ' இவனுக்கு என் மேல் கோபம் என்றால் அதை கார் ஓட்டுவதில் தான் காட்ட வேண்டுமா... எதற்கு இந்த வேகம்... நான் தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே... பிறகு என்னவாம்... எக்கேடு கெட்டு போகட்டும்.... ஆனாலும் மனசு கேட்க வில்லை...கடவுளே, நல்ல படியாக ஆபிஸ் செல்ல வேண்டுமே....எனக்கும் கொஞ்சம் கொழுப்புதான்.... ஏதோ, எல்லாம் சரியாகிறதே என்று நினைத்தேன்..... முன்னால் போனால், பின்னால் இடிக்கிறதே.... பாவம் சரண், தன் அண்ணன் கரணை மறந்து இப்பொழுதுதான், நார்மலாக இருக்கிறான்... தன் அண்ணன் குழந்தையை தன் குழந்தை என்று எண்ணி எப்படி அதற்கே மகிழ்ந்து போகிறான்.. நிஜமாகவே இது அவன் குழந்தையாய் இருந்தால் இன்னும் அவனை கையில் பிடிக்க முடியாது... எது எப்படியோ, இனி நாமும் கொஞ்சம் வாயை அடக்கத்தான் வேண்டும்.... இருக்கும் கொஞ்ச நாட்களை அமைதியாக கழிக்க பார்க்கலாம்', என்று எண்ணியவாறே கிளாசுக்குள் நுழைந்தவள், அங்கு ஏற்கனவே பெஞ்சில் உட்கார்திருந்த கீதாவைக் கண்டவள்,

"ஹாய், கீதா, லேட்டாகி விட்டதா என்ன" என்று கேட்டவளுக்கு, "வா.. துளசி... நீ என்றாவது லேட்டாக வந்திருக்கிறாயா என்ன... இன்னும் டயம் இருக்கிறது... என்ன துளசி, இன்று டல்லாக இருக்கிறாய்.... முடியவில்லியா?"

"ஒன்றுமில்லை, கீதா... காலையில் கொஞ்சம் தலை சுற்றலும், வயிற்றில் ஏதோ சங்கடமும் இருந்தது.. டாக்டரிடம் போய் விட்டு வந்தேன்... எல்லாம் நார்மல் தான். பிரெக்னன்ஸில் இதெல்லம் சகஜம்தான் என்றார்... அதுதான், வேறு ஒன்றுமில்லை"

அதற்குள் இன்ஸ்ட்ரெக்டர் வர, சிறிது நேரம் லெக்சர் கொடுத்து விட்டு, அன்றைய டெஸ்ட்டுக்கான கேள்வித் தாளை கொடுத்தார். டெஸ்ட்டை முடித்து விட்டு, வெளியே கீதாவுடன் வந்தவள், ரிசெப்ஷனில் விவேக்கை கண்டு "ஹலோ" என்றாள்

"ஹாய் துளசி, ஹவ் ஆர் யூ" என்றவனுக்கு, "நன்றாக இருக்கிறேன்... என்ன இந்த பக்கம்... இன்று இங்கு டுயூட்டியா"

"சர்ப்ரைஸ் விசிட். என்ன கிளாஸ் முடிந்து விட்டதா.... என்ன கீதா மேடம், அன்றே உங்களுடன் பேச முடியவில்லை.... துளசி, உங்கள் இருவருக்கும் அப்ஜக்ஷன் இல்லையென்றால், எதிர் ஹோட்டலில் ஒரு காஃபி குடிப்போமா" என்று கேட்டவனுக்கு, என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழித்தாள் துளசி.

கீதாவோ, "இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது, என் ட்ரைவர் வர. என்ன துளசி, எப்படியும் உங்கள் ட்ரைவர் வந்ததாக தெரியவில்லை.... எப்படியும் வந்தாலும் உனக்குத்தான் டெய்லி மேசேஜ் அடிப்பாரே. எதிர் ஹோட்டல் என்னவோ ஒபன் டைப்தான்... அங்கிருந்து பார்த்தாலே உன் கார் தெரியும்... வா சாருடன் போய் ஒரு காஃபி அல்லது ஜுஸ் குடிப்போம்... நீயும் பார்த்தால் டயர்டாக இருக்கிறாய்".

துளசியோ, "நான் காப்பி குடிப்பதில்லை... ஜுஸ் குடிப்பதில் எந்த ப்ராப்ளமும் இல்லை... பார்த்தால் எங்கள் ட்ரைவர் வந்ததாகத் தெரியவில்லை.... ட்ராபிக்கில் லேட்டாகி விட்டதோ என்னவோ" என்று இழுத்தவளை, விவேக்,

"ப்ளீஸ், வாருங்கள் துளசி... கார் வந்தால் அங்கிருந்து பார்த்தாலே தெரியும்... ப்ளீஸ் போட்டு மீண்டும் அழைத்தவனை, மறுக்க முடியாமல், "சரி.... பட் சீக்கிரம் வந்து விட வேண்டும்... அத்தை லேட்டானால் பயப்படுவார்கள்".

கம்ப்யூட்டர் செண்டர் எதிரிலேயே இருந்த அந்த சின்ன காப்பி ஷாப்பிற்குச் சென்றவர்கள், வெளியே ஓபன் கார்டனில் அமர்ந்து கொண்டனர்... மூவருக்கும், ஆளுக்கு ஒரு விதமான ஜூசை ஆர்டர் செய்து விட்டு, கொறிப்பதற்கு சமோசா ஆர்டர் செய்தான் விவேக்... பின்னர், ஜுஸ் வருவதற்குள் கீதாவைப் பற்றி அறிந்து கொண்டவன், துளசியின் உடல் நிலைப் பற்றியும் கேட்டுக் கொண்டான். துளசியிடம், ராதா அவளை பார்க்க விரும்புவதை சொன்னவன், ஒரு நாள் அவர்கள் இருவரும் தன் வீட்டுக்கு வருமாரு அழைத்தான். பொதுவாக உலக நடப்புப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், அதற்குள் ஜூஸ் வந்துவிட அதை குடித்து முடித்தனர். தன் கார் வந்து விட்டதைப் பார்த்த கீதா, தனக்கு வெளியில் வேலை இருப்பதால், லேட்டாகி விட்டதாகவும், துளசிக்கு கிளம்புவதாக கூறி விடை பெற்று சென்றாள்.

கீதா சென்றவுடன், தன் காருக்காக வெயிட் செய்து கொண்டிருந்த துளசி, ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தாள்.... விவேக்கோ, துளசி அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கீதா இருந்தவரை பொதுவாக பேசிக் கொண்டிருந்தவன், இப்பொழுது துளசி தனியாக இருக்கவும், தன் இழப்பு புரிந்து, இவளை என் வாழக்கையில் மிஸ் செய்து விட்டோமே, தனக்குள் வருந்தி, வெளியே ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தான்....

ன்று சரணுக்கு ஆபிஸில் எந்த வேலையும் ஓட வில்லை.... துளசியிடம் கோபமாக பேசி விட்டு காரை வேகமாக செலுத்தி வந்து சேர்ந்தவன், அன்று ஆபிஸில் எல்லோரிடமும் எரிந்து விழுந்தான். அவன் செகரட்டரியோ, இன்று இவனுக்கு என்னவாயிற்று, இப்படி எல்லோரையும் காய்ச்சி எடுக்கிறானே, என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.

சரணோ, துளசியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன், 'வர வர துளசிக்கு திமிர் அதிகமாக விட்டது. வாயில் வந்ததை பேசி விடுகிறாள். இவளை என்னத் தான் செய்வது... உ. ம்.. நமக்குத்தான் தெரியுமே இவளைப் பற்றி.... நானும் இப்படி சில்லியாக எதற்கும் அவள் மீது கோபப்படுகிறேன்.... இன்று பாவம் அவள் தான் சாரி கேட்டு விட்டாளே.... முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு கிளாசுக்கு கூட செல்லாமால் நான் ஏதாவது சொல்லுவேனா என்று என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளை, கண்டு கொள்ளாமல் அலட்சியமாக காரை வேகமாக ஓட்டி வந்து விடேன்... இரண்டு நாட்களுக்கு முன் அன்று கோவிலுக்குப் போன பொழுது எவ்வளவு ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருந்தாள்.... இன்று என்னடா என்றால் நம் மகன் என்று ஒரு வார்த்தை சொன்னதற்கு, எப்படி எடுத்தெரிந்து பேசுகிறாள்... போனால் போகட்டும்.... இப்பொழுது என்ன செய்யலாம்... சட்டென்று முடிவெடுத்தவன், தன் அன்னைக்கு போன் செய்து தானே, துளசியை கிளாஸில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறியவன், ட்ரைவர் அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு, துளசியை அழைக்க, காரை எடுத்து கம்ப்யூட்டர் செண்டர் நோக்கி செலுத்தினான்.

காரை செண்டருக்குள் பார்க் செய்தவன், துளசி இன்னும் கிளாசில் இருந்து வராததைக் கண்டு, ' ஒரு வேளை லேட் ஆகிறதோ, சரி வெயிட் செய்வோம்' என்று எண்ணிய போது,அவனை அறிந்திருந்த செக்யூரிட்டி பெர்சன், துளசி மேடம் விவேக் சாருடன் எதிர் காஃபி ஷாப்பிற்க்கு சென்று இருப்பதாக சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.