(Reading time: 35 - 69 minutes)

ன்றும் பேச முடியாமல், "சாரிம்மா... ஏதோ ஆபிஸ் டென்ஷன்... ஒரே ட்ராபிக் வேறு...... இதில் வந்தவுடன் நீங்கள் வேறு சாப்பிட வில்லை என்றீர்களா.... என்று இழுத்தவன், இனி நீங்கள் எங்களுக்குக்காக வெயிட் செய்யக் கூடாது. முன்பு மாதிரி அப்பாவுடன் சாப்பிட வேண்டும்..... வெளியே எங்களுக்கு லேட் ஆனால், எதாவது காப்பி, ஜூஸ் என்று கொஞ்சம் சாப்பிட்டு கூட வந்து விடுவோம்... நீங்கள் அப்படியா ஒன்றும் டயத்திற்கு சாப்பிட மாட்டீர்கள்" என்று பொதுவாக சொன்னவன், "எனக்கு பசி உயிர் போகிறது. பேசிக் கொண்டே இருக்காதீர்கள்... சாப்பாட்டை கண்ணில் கொஞ்சம் காட்டுங்கள்"

"போடா அரட்டை..... இவன் ஏதாவது பேசுவான்... அப்புறம் என்னை சொல்லுவான்... நீ வாம்மா துளசி."....

உணவை உண்டு கொண்டே துளசியிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று விஜாரித்து அறிந்து கொண்டார் சியாமளா. பின்னர் அவர்கள் இருவரையும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குமாறு அனுப்பிவிட்டு தன் பெட் ரூமிற்குச் சென்றார்.

மாடியில் தங்கள் அறைக்கு சென்றவர்கள், துளசி அவனது அறையை தாண்டி தனது ரூமிற்குள் நுழைய முற்பட, அவளை தடுத்து நிறுத்திய சரண், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு, "துளசி, இங்கே வா... வந்து இங்கு உட்கார்.. உன்னிடம் சற்று பேச வேண்டும்" என்றான்,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவளுக்குமே அவன் போக்கு பிடிபடாமல் இருந்ததால், சற்று முன் தன் தாயிடம் ஒரு மாதிரி அவளை குத்திப் பேசியதை பற்றி பேச நினைத்திருந்தவள், அவனே பேச வேண்டும் என்றவுடன், ஒன்றும் சொல்லாமல் அவன் எதிர் சோபாவில் அமர்ந்தாள்.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... துளசி பேசாமல் அவன் முகத்தை பார்ப்பது, தரையைப் பார்ப்பது என்று உட்கார்ந்து இருந்தாள்.... சற்று பொருத்துப் பார்த்தவன், "துளசி, உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.... எங்கள் குடும்பம் ரொம்ப பாராம்பரியமானது..... எங்களுக்கு என்று ஒரு கௌரவம் , மரியாதை என்று இருக்கிறது..... என்று ஆரம்பித்தவனை, 'பெரிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ' குடும்பம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், இளக்காரமாக முகத்தைச் சுளித்தாள்.

அவளை கண்டு கொண்ட சரண், "போதும் முகத்தை சுளித்தது. சுளுக்கிக்கப் போகிறது... எனக்கு என்ன தெரியாதா, உன் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்று..... இதோ பார்... நாங்கள் ஒன்றும் எங்கள் குடும்ப கௌரவம் குறையுமாறு நடந்து கொள்ள வில்லை. பொது இடத்தில் எவனோ ஒருவன் உன்னை தாங்கிப் பிடிக்கிறான்.... இப்படித்தான் நடந்து கொள்வதா?..... கார் வருவதற்கு சற்று நேரமானால் , பொறுக்க முடியாதா என்ன.... காப்பி ஷாப்பிற்கு கண்டவனுடன் போவதற்கு என்ன அவசியம் வந்தது...... நான் ஒன்றும் பட்டிக்காடு இல்லை. நீ வெளியே சென்று ஜூஸ் குடித்ததற்கு ஒன்றும் சொல்லவில்லை.... அவனும் அவன் மூஞ்சியும்.... உனக்கு தெரிய வேண்டாம்".... நடுவில் ஏதோ சொல்ல வந்த துளசியை ஒரு நிமிடம் .... "என்னை முதலில் பேச விடு", என்று கோபமாக சொன்னவன்,

"சரி, காலையில் உன்னிடம் நீ சாரி கேட்டப் பிறகும் கொஞ்சம் கூட பேசாமல் போய் விட்டோமே, என்று உன்னை கூப்பிட வந்தால் , நீ ,அவன் தாங்கிப் பிடிக்க நின்று கொண்டிருக்கிறாய்....உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.... அவனைப் பார்த்தால் தெரியவில்லை..... காதலில் தோற்ற தேவதாஸ் மாதிரி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, உன்னையே என் கண் முன்னால் சைட் அடித்துக் கொண்டிருக்கிறான்.... நீயோ இதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று குழந்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தாய்.... இங்கே பார்.... நம் குடும்பம் கௌரவமானது..... குடும்ப கௌரவம் கெடுமாறு நீ நடந்து கொண்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்... ஜாக்கிரதை" என்று கையை நீட்டி எச்சரித்தவனை,

முகம் கோபத்தில் சிவக்க அவனைப் பார்த்த துளசி, "என்ன விட்டால் ஓவராகப் பேசிக் கொண்டே போகிறீர்கள்... நானும் போனால் போகிறது, ஏதோ காலையில், நான் தாப்பாக பேசியதால்தான், நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால், நீங்கள் என்னடா என்றால் தேவையில்லாமல் விவேக்கை இழுக்கிறீர்கள்... உங்கள் அம்மாவிடம் என்னை கண்டவர் என்கிறீர்கள்.... எனக்கும் குடும்பம், கௌரவம், பராம்பரியம் எல்லாம் தெரியும்.... என்னவோ, நான் விவேக்குடன் ரொமான்ஸ் பண்ண ஊர் சுற்ற போனது போல் சொல்லுகிறீர்கள்... என் கூட கீதாவும் தான் வந்தாள்... ஏதோ ஒரு நாள் காப்பி குடிக்க ஜஸ்ட் வெளியே போனதற்கு இப்படி பேசுகிறீர்கள். கீதா தன் கார் வந்தவுடன் சென்று விட்டாள்... உங்களைப் பார்த்து விட்டு அவசரத்தில் எழுந்தவள், கால் தடுமாறி விழ்ப் போனேன், விழாமல் தாங்கிப் பிடித்தார் விவேக். அவ்வளவு தான். இந்த எக்ஸ்பிளேனேஷன் கூட நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.... இன்னொன்று, பரம்பரை, குடும்ப கௌரவம் என்று பீற்றிக் கொள்ளுகிறீர்களே, முதலில் நீங்கள் அதை ஃபாலோ செய்கிறீர்களா..... கௌரவம் பார்ப்பவர் தான், இப்படி பெற்றவர்களுக்குத் தெரியாமல் உங்கள் அண்ணனுடன் கூட சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற வாடகை த் தாய் தேடினீர்களோ.... கிண்டலாகக் கேட்டவளை,

கடும் கோபத்துடன் , ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன், "இன்னும் ஒரு வார்த்தை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.... செத்தவனைப் பற்றிய பேச்சு இப்பொழுது எதற்கு... இதைத்தான், தான் திருடி பிறரை நம்பாள் என்பது.... நீ அவனுடன் காப்பி சாப்பிட போனதற்கு, எதற்கு கீதாவும் வந்தாள் என்று என்னிடம் சொல்ல வேண்டும்... நான் கேட்டேனா... அவன் சரியில்லை பார்த்து நடந்துக் கொள் என்றால், ஓவராகப் பேசுகிறாய்.... இன்னொன்று, கரண் ஒன்றும் யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற கேட்கவில்லை. உன் வாழ்க்கை அவனுக்காக விணாகக் கூடாது என்றே விரும்பினான். அப்படியும், நீ விரும்பியபடி, உனக்கு தாலி கட்டி பிறகே குழந்தை என்றவுடன் சம்மதித்தானா இல்லையா... தேவையில்லாமல் இனி இப்படி மறுபடியும் பேசி எனக்கு கோப மூட்டாதே.... குழந்தை பிறக்கும் வரை எங்கள் குடும்ப கௌரவம் கெடாமல் நீ நடந்து தான் ஆக வேண்டும்.... நீயும் எல்லாவற்றிக்கும் சம்மதித்து தானே ஒப்புக் கொண்டாய்... பிறகு என்ன... குழந்தை பிறந்தவுடன் , அதன் பின்னால் உன் வாழக்கை, உன் இஷ்டம்"....

அப்பொழுதும் துளசி விடாமல், இவன் கோபம் என்னை என்ன செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டு, "எப்படியானாலும், நான் அந்த கண்டிஷனைப் போட்ட பிறகுதான் இந்த தாலி கட்டுவது எல்லாம் நடந்தது... அதற்கு முன்னால், எல்லாவற்றிர்க்கும் ரெடியாகத்தானே இருந்திருப்பீர்கள்.... இதில் என்னை எச்சரிக்கிறீர்கள்"..... அலட்சியமாக சொல்லிவிட்டு தன் ரூமிற்குள் சென்று கதவை ஓங்கி சாத்திக் கொண்டாள்.

சரணோ, மூடிய கதவைப் பார்த்தவன், 'திமிர் பிடித்தவள்.... நான் சொல்லுவதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கக்கூடும் என்று யோசிக்கக் கூடாதா... அவள் மேல் உள்ள அக்கறையில் தானே இவ்வளவு சொல்லுகிறேன்... தன் மனமே இடித்துரைக்க, 'இதற்குப் பெயர் அக்கறையா, அவள் மேல் உனக்கு காதல் தம்பி காதல்' என்ற தன் மனதை அடக்கியவன், .. கதவை மூடி விட்டாள்..... அவள் இதயக் கதவு திறக்குமா'..... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.... பொறுத்திருந்து பார்ப்போம்.

மெல்ல இரண்டு நாட்கள் கழிந்தன. சரணும், துளசியும் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசவதில்லை. முடிந்தவரை பேச்சை குறைத்து விட்டனர்.

சரணுக்கோ, 'தான் எது பேசினாலும் தப்பாக போய்விடுகிறதே... என்ன சொன்னாலும் அதில் எதோ ஒரு குற்றம் கண்டு பிடிப்பவளிடம் எப்படி அடுத்து என்ன செய்வது, என்று மனதில் ஒரு குழப்பம்.... தான் எதாவது செய்யப் போக அவளுக்கு அதனால் மனரீதியாக எதாவது பாதிப்பு எற்படுமோ என்று அஞ்சினான். தான் கண்ட வரை, இயல்பில் அவள் குணசாலியே...,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.