(Reading time: 35 - 69 minutes)

ன் காரை பார்க் செய்து விட்டு, தன் தந்தை கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்த ராம்சரண், ஹாலில் மாமா , மாமி உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு, சிரித்த முகத்துடன், அவர்களது நலத்தை விஜாரித்தான்.. மாமாவும், கிருஷ்ணணும் கையை குலுக்கிக் கொண்டு பொதுவாக ஷேம லாபங்களை விஜாரித்து கொண்டனர். சரணைக் கண்ட துளசி, மெல்ல எழுந்து கொண்டாள். இவன் இன்று இவர்களிடம் நல்லபடியாக நடக்க வேண்டுமே, என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டவள், "உங்களுக்கு ஏதாவது குடிக்க எடுத்து வரவா" என்று கேட்டாள்.

சரணோ,மனதிற்குள், 'அப்பாடி , ஒர் வழியாக மௌன விரதத்தை முடித்து விட்டாள்... மாமா,மாமி முன்பு இது தான் சாக்கு என்று நாமும் பேச்சை தொடங்க வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு, " எதுவும், வேண்டாம்மா.... காப்பி, ஜூஸ் இரண்டும் எங்கள் இருவருக்கும் ஆயிற்று. நீ வா வந்து உட்கார்... லன்ஞ்ச் சாப்பிட்டாயா" என்றவனுக்கு,

துளசியும், அப்பாடி பேசி விட்டான்.., என்று சற்று நிம்மதியானவள், தைரியம் வர, "ம்ஹீம்... இன்னும் இல்லை. எல்லோரும் உங்களுக்காகத் தான் வெயிட்டிங்.... அவனை நிமிர்ந்து பார்த்தவள், "எதுவும் சொல்லாதீர்கள்.... கரெக்ட் டயத்திற்கு சாப்பிட வேண்டாமா,.. வெளியே வேலைக்குச் சென்ற ஆண்களுக்கு வீடு திரும்ப முன்னே, பின்னே ஆகும். அதற்காக பிள்ளைத் தாய்ச்சிப் பெண் இப்படி பட்டினி கிடக்கலாமா... அம்மா, நீங்கள் ஏன் இன்னும் சாப்பிடவில்லை.. மாத்திரை சாப்பிட வேண்டாம்".....ஹப்பா.... உங்கள் மொத்த டயலாக்கையும் இன்று நானே, நீங்கள் டயர்டாக இருப்பீர்கள் என்று சொல்லி விட்டேன்" என்று, சிரிக்காமல் சொன்னாள்.

சட்டென்று கடகடவென்று வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டான் சரண்... எல்லோரும் சிரித்து விட்டனர். துளசிக்குமே ,'அப்பாடி சிரித்து விட்டான்' என்ற நிம்மதியில் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. சியாமளா, "சரியான குறும்புக்காரி... அப்பா... எனக்கு இன்று சந்தோஷமாக இருக்கிறது... என் பையனை இன்று வாய் மூட வைத்து விட்டாயே..... இல்லையென்றால் நமக்கு லெக்சர் கொடுத்திருப்பான்" என்று மருமகளுக்கு ஹை ஃப்பை கொடுத்தார்.

"இதற்குத்தான் நல்லதற்கு காலமில்லை என்பார்கள்.. மாமியார், மருமகள் கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறது... அம்பேல் ' என்று கையை தூக்கினான்.

"போட அரட்டை" என்ற சியாமளா, "வாருஙகள்.... சாப்பிடலாம்.... என்று அனைவரையும் டையினிங் டேபிளுக்கு அழைத்துக் சென்றார்.

மாமாவிற்கும், மாமிக்கும், இந்த ஒற்றுமையான குடும்பத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. துளசி அவள் புகுந்த வீட்டில் பொருந்தியது பார்த்து மகிழ்சிசியே... மதிய உணவு முடிந்ததும், நிழலாக உள்ள தோட்டத்தின் இருக்கையில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான் ராம் சரண்.

மாமாவிடம் அவருக்கு ஏற்றவாறு பேசிக் கொண்டிருந்த சரணைப் பார்த்த துளசி மனதிற்குள், எப்படி இவனால் அனைவருக்கும் பிடித்த விதமாய் பேச முடிகிறது. திறமையும், அழகும், குணமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தாலும், வீட்டிலும், வெளியிலும், சதா எல்லோரும் புகழாரம் பாடிக் கொண்டிருந்தாலும், எவ்வளவு அடக்கத்துடன், கொஞ்சம் கூட ஆணவம் இல்லாமால் இருக்கிறான். தான் பெரிய பணக்காரன் என்ற அகம்பாவம் சிறிது கூட இல்லாமால் மாமாவுடன் அவரை சமமாக மதித்து பேசுகிறான்....

'இவன் என் கணவன். இவன் கையால் நான் தாலி வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'... நெஞ்சம் கொஞ்சம் கர்வக் கொள்ள, இனம் புரியாத எக்கமும், தவிப்புமாக அவனை பார்ப்பதும், தலையை கவிழ்வதுமாக இருந்தாள் துளசி.

தாய்மையின் பூரிப்பில், மாலை மறையும் சூரியனின் பொன் வெளிச்சத்தில், தகதகவென்று முகம் ஜொலிக்க, தன்னை யாரும் அறியாமல் ரசைனையுடன், அவ்வப்போது ஏறிடுபவளை கண்டு கொண்ட சரண், அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

டக்கென்று திரும்பி அவளை பார்த்தவன், யாரும் அறியாமல் கண் சிமிட்ட, முகம் ரோஜாவாக சிவக்க, ' ஐயோ தன் திருட்டுத்தனத்தை கண்டு கொண்டானே', என்று, வெட்கத்துடன் தலை குனிந்தாள் துளசி.

சிவந்த அவள் முகத்துடன், வெட்கத்தால் உதட்டைக் கடித்துக் கொண்டவளை இரக்கத்துடன் ஒரு வித ரசனையுடன் பார்த்தவன், 'ஒரு வேளை இவள் மனதில் நான் புகுந்து விட்டேனோ?, இவளும் என்னை மாதிரி நான் இவளை காதலிக்கத் தொடங்கி விட்டது போல், என்னை காதலிக்கிறாளோ?... இவளை நான் நல்ல முறையில் சந்தித்து இருக்கக் கூடாதா?.... எது எப்படி ஆனாலும், இவள் எனக்கு பாட்டி தந்த வரம்.... இவளை தொட்டு தாலியை கட்டி விட்டேன்.... இவள் என்ன புலம்பினாலும் இனி கை விட முடியாது. எப்படியாவது இவள் மனதை மாற்றத்தான் வேண்டும்', என்று முடிவு செய்தான்.

இவர்கள் பார்வைப் பரிமாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தார் சியாமளா. துளசி சரணைப் பார்பதும், சரண் அவளைப் பார்த்து கண் சிமிட்டியதையும், வெட்கி முகம் சிவக்க தலை குனிந்த துளசியையும் பார்த்தவர், "கடவுளே, இபொழுதுதான் இவள் மனது என் மகன் மேல் சாயத் தொடங்கியிருக்கிறது... எப்படியும் என் மகன் நான் சொன்னால் கேட்பான்... அவனுமே, கட்டிய மனைவியை கை விடுபவன் அல்ல.. துளசியைப் பற்றியே கவலையாக இருந்தது. வாடகைத்தாய், சூழ் நிலை காரணமாக அண்ணன் குழந்தையை சுமந்து கொண்டு, தம்பியின் கையில் தாலி வாங்கியவள் என்பது அவளது எண்ணம். குழந்தையை விட்டு விட்டு சென்று விடுவேன் என்று அன்று கூட சொன்னாள்.... இவள் மனது என் மகனுடன் ஒன்றி விட்டால் எதற்காக அவனை பிரிந்து செல்ல வேண்டும்..... எப்படியோ ஆண்டவா, நீதான் இவள் மனது இந்த குழந்தை பிறக்கும் முன் மாறி மற்ற தம்பதியர் போல் வாழ வழி செய்ய வேண்டும்' என்ற தனக்குள் பிரார்த்தித்துக் கொண்டார்.

மாமாவும், மாமியும், கிளம்புவதாக சொல்லிக் கொண்டு எழ, மனம் வாடினாள் துளசி. ஏக்கத்துடன் நிற்பவளை அணைத்துக் கொண்ட மாமி, " எதற்கு டீ குழந்தை கலங்குகிறாய்... அருமையான கணவன்... அன்பான மாமனார், மாமியார்... இன்னும் என்ன வேண்டும்.. போனஸாக வயிற்றில் குழந்தை... உடம்பை பார்த்துக் கொள்... உன் அத்தை சொல்லுவது போல் நடந்துக் கொள். நானும், மாமாவும், ஏழாம் மாதம் வளை காப்பிற்கு ஒரு வாரம் முன்னாலேயே வந்து டேரா போடுகிறோம்.... என்ன.... என்றவரை, கண்ணிருடன் தலையாட்டினாள் துளசி.

சரண் டிரைவரை அழைத்து, அவர்களை காரில் வீட்டிற்கு கொண்டு விடுமாறு பணிய, சியாமளா, அவர்கள் வீட்டில் விளைந்த, காய்கறிகள், பழங்கள், மேலும் அவர்கள் பண்ணையில் விளைந்த அரிசி, பருப்பு வகைகளை மாமாவும், மாமியும் மறுக்க மறுக்க கார் டிக்கியில் ஏற்றி அனுப்பினார். மற்றும், மாமிக்கு பட்டுப் புடவையுடன், தேங்காய் வெற்றிலை பாக்கு கொடுத்து, மாமாவிற்கு பேண்ட்,ஷர்ட் வைத்து தாம்பூலம் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இனி....

Episode # 09

Episode # 11

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.