(Reading time: 35 - 69 minutes)

வனுக்கு நன்றி கூறிவிட்டு , 'தானே அங்கு சென்று பார்பதாக சொன்னவன், ஒரு வேளை அதற்குள் அவள் வந்து விட்டால் வெயிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டவன்', அந்த காஃபி ஷாப்பிற்குள் சென்றான்.

சரணது கார் கம்ப்யூட்டர் செண்டருக்குள் நுழைவதை பார்த்த துளசி, விவேக்கிடம் திரும்பி, "என் கணவர் சரணே, என்னை பிக்கப் செய்ய வந்திருக்கிறார் போல் இருக்கிறது. சரி, நான் கிளம்புகிறேன் . எனி வே தாங்க்ஸ் ஃபார் தி காஃபி", என்று சொல்லி எழுந்து கொள்ளப் போனவள், சட்டென்று கால் இடறி விழப் போனவளை, பதறி தாங்கிப் பிடித்து நிறுத்தினான் விவேக்.. "பார்த்து துளசி, எதற்கு இந்த அவசரம்" என்றவனை துளசி அவன் தோளைப் பற்றி ஒரு நிமிடம் சமாளித்து நின்றவள், " கால் தடுத்தது... ஒன்றுமில்லை"..

அதற்குள், சரண் அவர்களை நோக்கி வரவும், ஒரு சின்ன புன்னகையுடன், "சாரி, கார் வர லேட்டானதால், விவேக் இங்கு ஜுஸ் குடிக்கலாம் என்று அழைத்ததால் இங்கு வந்தேன்"., என்றவள்.... "சரண், இவர் நேற்று சொன்னேனே, விவேக்... என் ப்ரண்ட் ராதாவின் அண்ணன். இந்த கம்ப்யூட்டர் கல்வி நிலையத்தின் உரிமையாளர், விவேக் இவர் என் கணவர் ராம் சரண்... ராம் பில்ட்ட்ர்ஸ் சொந்தக்காரர்' என்று அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.

"ஹலோ.... கிளாட் டு மீட் யூ" என்று சொல்லி கை கொடுக்க கையை நீட்டிய விவேக், "உங்களைப் பற்றி துளசி சொல்லியிருகிறாள்.. உங்களை இன்று சந்தித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி... வாருங்கள் , ஒரு காஃபி குடிக்கலாமே" என்றவனுக்கு,

"ஹலோ, மட்டும் சொல்லி கையைப் பற்றி கூட குலுக்காமல், மனதிற்குள் ' எனக்கு உன்னை பார்த்ததில் எந்த மகிழ்ச்சியும் இல்லை', என்று நினைத்துக் கொண்டவன், வேறு ஒன்றும் சொல்லாமல், "சாரி, ஆல்ரெடி லேட்டாகி விட்டது. அம்மா துளசியை இன்னும் அழைத்து வரவில்லையே என்று கவலை படுவார்கள்..... அதுவும் இல்லாமல் , இது லன்ச் டயம், காஃபி இப்பொழுது குடித்தால் லன்ச் சாப்பிட கஷ்டமாகி விடும்", என்றவன், "துளசி, கிளம்பலாமா?", விவேக்கிடம் தலை அசைத்து விட்டு, துளசி பதில் கூறும் முன் நடக்கலானான்.

துளசிக்கு என்னடா இவன் இப்படி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறானே என்று நினைத்துக் கொண்டு, விவேக்கிடம், "பை விவேக்... பிறகு சந்திக்கலாம்" என்று விடை பெற்றவள், காரை நோக்கி நடந்து செல்லும் சரணை பின் தொடர்ந்தாள். காரில் துளசி ஏறியவுடன், ஒன்றும் பேசாமல் வேகமாக காரை வீடு நோக்கி செலுத்தினான் சரண். துளசியோ, 'காலையில் இருந்த கோபம் இன்னும் தணியவில்லையா?... எதற்கு இந்த வேண்டாத கோபம்' என்று எண்ணி அவளும் பேசாமல் சன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பி கொண்டாள்.

அவர்கள் செல்லுவதையே ஒரு பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்த விவேக், சரணுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று முதல் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். ஒரு வேளை ரொம்ப திமிர் பிடித்தவனோ, அலட்சியமாக போகிறான், துளசியை லட்சியமே செய்யவில்லை. இவனைப் போய் துளசி மணந்து கொண்டிருக்கிறாளே, என்று அவளுக்காக பரிதாப்பட்டான்.

பரிதாபமாக தனக்குள்ளேயே தன் காதலை வைத்திருந்து அதை சொல்லும் முன்னேயே இழந்தவன், கணவன் பின்னே செல்லும் துளசியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் விவேக்..... அங்கே இன்னொருத்தியோ , பொறாமையில் வெந்து கொண்டிருந்தவள், சரணையும், துளசியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்... அது வேறு யாருமில்லை. ராம் கரணின் முன்னால் காதலி என்று சொல்லிக் கொள்ளும் காருண்யாவேதான்.....

ஆம்... காருண்யாவே தான்.... அந்த காஃபி ஷாப்பில், தான் திருமணம் செய்து கொள்ள இருந்த அமெரிக்க மாப்பிள்ளையை மீட் செய்ய வந்தவள், விவேக், கீதாவுடன் வந்த துளசியைப் பார்த்து வியந்து, 'அட இது சரணின் மனைவி துளசி போல் இருக்கிறதே... இவள் எங்கே இங்கு', என்று என்ன நடக்கிறது பார்ப்போம் என் யாரும் அறியாமல் கண்ணில் படாத ஒதுக்குப்புறமாக ஒரு நாற்காலியில் அமர்த்து கொண்டு அவர்களை நோட்டம் விட்டாள். சற்று முன்பு தான், அந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒரு ஃப்ராட் என்று அறிந்து, சரியான லோக்கல் பார்ட்டி, வெத்து வேட்டு, பெரிதாக காசில்லாதவன் என்று கண்டு கொண்டு, அவனை திட்டி விட்டு போலிசில் தன்னை ஏமாற்றியதற்காக பிடித்து கொடுத்துவிடுவதாக கூறி அவனிடம் இருந்து கட் செய்து கொண்டு வெளியே செல்லும் பொழுது துளசியைப் பார்த்து விட்டு பின் தங்கினாள்.

தான் அமெரிக்க மாப்பிள்ளையை மணந்து கொள்ளப் போவதாக அன்று ராம் சரணின் ரிசெப்ஷனில் சொல்லிக் கொண்டு திரிந்தவள், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த அமெரிக்கா மாப்பிள்ளைக்காக பெசண்ட் நகர் பீச்சில் வெய்ட் செய்து கொண்டிருந்தாள். அவன் வருவதற்கு லேட் ஆனதால் பொறுமை இழந்து அவனை திட்டித் தீர்த்தவள், சுற்றும் முற்றும் பார்த்து வைக்க, அங்கே குடும்பத்துடன் சிரிந்து பேசிக் கொண்டிருந்த ராம் சரணைக் கண்டாள்... அவன் ஏதோ சொன்னதற்கு, வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்த துளசி கண்ணில் பட்டு விட்டாள். சரணின் தாயும் சிரித்தவாறு இருப்பதை பார்த்தவள், பொறாமையில் வயிறு எறிந்தாள். இந்த குடும்பத்துடன், நான் இப்படி சிரித்து வாழ வேண்டிய வாழ்க்கை, ஊர் பெயர் தெரியாத அனாதை கழுதை இந்த துளசி வாழ்வதா..... இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்.... படுபாவி கரண் என்னை திருமணம் செய்துக் கொண்டு செத்துத் தொலைந்திருக்க கூடாதா.... என்று எண்ணியவள், அவர்கள் கிளம்பி காரில் ஏறுவதைப் பார்த்தாள்... அய்யோ அந்த துளசியைப் பார்த்தாள் கர்ப்பிணிப் போல் இருக்கிறது.... கல்யாணம் ஆனவுடனேயே குழந்தையை பெற்றுக் கொண்டு தன் அஸ்திவாரத்தை பலப் படுத்தி கொண்டுவிட்டாளே.. பலே கைகாரிதான்.... என்று எண்ணியவள் அவர்களை பொறாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இன்றோ, ஜாலியாக எவனுடனோ, காஃபி ஷாப்பிற்கு வருகிறாள்...கூட வந்த கீதாவை அவள் மனுஷியாகவே நினைக்க வில்லை.... சிரித்துப் பேசிக் கொண்டிருந்த விவேக்கைப் பார்த்தவள், 'ஆளைப் பார்த்தால், துட்டு பார்ட்டி போலத்தான் இருக்கிறான். துளசியிடம் இப்படி வழிகிறான்... இவளுக்கு மட்டும் எப்படி எல்லோரும் ஜொள்ளு விடுகிறார்கள்' என்று எண்ணியவள், .... முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு வரும் ராம் சரணைப் பார்த்து விட்டு இன்னும் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டாள்.... அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழ வில்லையென்றாலும், சரண் முகத்தில் இருந்த அலட்சியமும், கண்ணுக்குத் தெரியாத கோபமான இறுகிய முகமும் அவளுக்குப் புலப்பட, இவர்களுக்குள் ஏதோ சரியில்லை போல் தெரிகிறது. அவளை கண்டுகொள்ளாமல் முன்னே செல்லுகிறான். துளசி முகத்தைப் பார்த்தாலும் பரிதாபமாகவே இருக்கிறது.... நமக்கு இது சாதகமாக இருந்தால், மெல்ல இவர்களைப் பிரித்து ராம் சரணை நம் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.... முடிந்தால், இந்த துளசியை துரத்தி விட்டு, சரணை மணக்க முடியுமா என்று பார்ப்போம்..... இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது.... புதுசாக இப்பொழுதுதான் துளசி போன திசையை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டும் பார்க்கும் இந்த பசையான பார்ட்டி.... நமக்கு யாராவது மாட்டாமல் போய் விடுவார்களா என்ன !.... என எண்ணி அங்கிருந்து அகன்றாள்.

வீட்டை அடைந்த சரண் துளசியிடம் எதுவும் பேசாமல் காரைப் பார்க் செய்து விட்டு வீட்டிற்குள் செல்ல, அவனை தன் பேகை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள் துளசி... ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்த சியாமளா, அவர்களைக் கண்டு புன்னகைத்து , "வாருங்கள்.... ரொம்பவும் லேட்டாகி விட்டது..... முதலில் லன்ஞ்ச் சாபிடுவோம்..... இன்னும் நான் கூட சாப்பிடவில்லை .... அப்பா மாத்திரம் சப்பிட்டுவிட்டு சற்று ஒய்வெடுக்க சென்று விட்டார்" என்றவருக்கு,

சட்டென்று மூண்ட கோபத்துடன், "அம்மா உங்களை யார் இப்படி கண்டவர்களுக்காக வெயிட் செய்ய சொன்னார்கள்.... எத்தனை முறை உங்களுக்கு சொல்வது.... உங்கள் மாத்திரை சாப்பிட வேண்டாமா" என்றான் சரண்..

"என்னடா சொல்லுகிறாய்... வெளியே போன பிள்ளை தாய்ச்சிப் பெண் வரவில்லையே என்று நான் இருக்கிறேன்... எனக்கு ஒன்றும் பசிக்க வில்லை.... நடுவில் ஜூஸ், பழம் எல்லாம் ஆயிற்று..... இதில் கண்டவர்களாமே... யாருக்காக அப்படி நான் வெயிட் செய்து விட்டேன்... என் மகன், என் மருமகள்..... என்ன பேச்சு என்று பேசுகிறாய்..... எனக்கு இது பிடிக்கவில்லை" என்று அவனை கண்டித்தவரை,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.