(Reading time: 35 - 69 minutes)

நான் தான் என் வேண்டாத பொறாமையில் தேவையில்லாமல் பேசி அவளுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தி வைத்தேன்... நான் என்ன அவ்வளவு பழங்காலமா, தேவையில்லாமல் மனைவியை ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு திட்டுவதற்கு.. அப்படி என்ன பாவம் தப்பு செய்து விட்டாள். பாவம் துளசி, ஆண்களுடன் முன்னே, பின்னே கண்டபடி பழகுபவளும் இல்லை. எனக்குத் தெரியாதா என்ன அவள் வளர்ப்பு பற்றி... அவள் நற் பண்புகளை கண்டுதானே, நாங்கள் வாடகைத் தாயாக அவளை தேர்ந்தெடுத்ததே... குடும்ப கௌரவம், பாரம்பரியம் என்று என்னென்னவோ பேசி அவளை கடுப்பேற்றி விட்டேன்... இனி, அவளுக்கு தேவையில்லாமல், எந்த டென்ஷனும் தான் குடுக்கக் கூடாது ... முன்பு போல ஒரு தோழமையுடன் பழக முயற்சி செய்ய வேண்டும். நம் காதலை பற்றி பிறகு குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் , என்று தீர்மானித்தவன், அதற்கான முயற்சியை எப்படி தொடங்கலாம் என்று பார்க்கலானான்.

துளசிக்கோ, அங்கு வேறுவிதமான விதமான சிந்தனை.... எல்லாம் என்னால் தான் வந்தது..... அன்று காலையிலும், தேவையில்லாமல் பேசி, ராமின் சந்தோஷமான மன நிலையை கெடுத்தேன்... அது தான் போகிறது என்றால், அவனே தன் தப்பை உணர்ந்து என்னை பிக்கப் செய்ய வரும் பொழுது, விவேக்குடன் தோள் பற்றி நின்றால் யாருக்குத்தான் கோபம் வராது. பார்ப்பவர்களுக்கு என்னவோ போல் தான் இருக்கும்... முதலில் எதற்காக விவேக்குடன் காப்பி ஷாப் சென்றேன்... போவதற்கு முன், ராமிடமோ, அத்தையிடமோ சொல்லி இருக்க வேண்டும்... எனக்குக் கொஞ்சம் கூட பொறுப்பில்லை... என்னை தேடி வந்தவன், என்னை காணாமல் டென்ஷனில் இருந்திருப்பான்... முதலிலேயே சொல்லி இருந்தால் அவனுக்கும் தேவையில்லாமல் கோபம் வந்திருக்காது... பாவம் ராம், இரண்டு நாட்களாகத் தான் கொஞ்சம் சந்தோஷமாக என்னிடம் தோழமையுடன் பேசி சிரிக்கிறான்... அதையும் என் கோபத்தால் கெடுத்துக் கொண்டேன்..... எது எப்படியோ, ராம் சொன்னதுபடி, இனி விவேக்குடன் சற்று தள்ளியே பழக வேண்டும்... தேவையில்லாமல், அவனுடன் பேசி, அவனுக்கு வேண்டாத எண்ணம் வரவழிக்கக் கூடாது. பார்த்தால், விவேக்கும் நல்லவனாகவே தான் தெரிகிறான்..... பார்ப்போம்.... இரண்டு நாட்களாக சரணுடன் பேசாததே என்னவோ போல் இருக்கிறதே.... நான் தான், அவனிடம் வேண்டாததை பேசி, அவனை கடிப்பேற்றி விட்டேன்.... மெல்ல எப்படியாவது ராமுடன் பேச முயற்சிக்க வேண்டும்.... மீண்டும் அதே தோழமையுடன் பழக வேண்டும்.... இனி குழந்தை பிறக்கும் வரை நல்ல மன நிலையில் இருக்க வேண்டும்', என்று தீர்மானித்து அதற்கான முயற்சியை தொடங்கினாள்.

ஒத்த சிந்தனையில் இருந்த இருவருக்கும், அவர்களை அறியாமலேயே பேசுவதற்கான சந்தர்ப்பம் தேடி வந்தது...

அன்று சனிக் கிழமை ஆனதால், துளசிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் இல்லை.... இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்று வந்ததிலிருந்து, துளசி சரணுடன் காலை வாக்கிங் செல்லாமல் உடம்பு முடியவில்லை என்று காரணம் சொல்லி அவாய்ட் செய்து கொண்டிருந்தாள். சரண் எப்பொழுதும் போல் சனிக்கிழமை அவனது தந்தையின் அலுவலகத்திற்கு அவருடன் சற்று சீக்கிரமாகவே சென்று விட்டான்....

அவர்கள் சென்றவுடன், காலை டிபன் அப்பொழுதுதான் முடிந்திருக்க, ஊரிலிருந்து மாமாவும்,மாமியும் வந்து சேர்ந்தனர். மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றனர் சியாமளாவும், துளசியும்... துளசிக்கு வாயெல்லாம் பல்.... தன்னை தேடி, தனக்கு ஒரே சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் அவர்களை கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடிப் போய் மாமியை சேர்த்தணைதுக் கொண்டாள்.... சியாமளாவுக்குமே அவர்களை கண்டு சந்தோஷமே. ரிசெப்ஷனில் பார்த்ததற்கு பிறகு அன்றுதான் அவர்கள் இருவரும் இங்கு வருகின்றனர். "வாருங்கள்" என்று உண்மையான மகிழ்சிசியுடன் அவர்களை வரவேற்றார்.

தன்னை சேர்த்துக் கட்டிக் கொண்ட துளசியை, தன்னுடன் அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்த மாமி, "அம்மாடி, துளசி.... என் ராஜாத்தி... நன்னா இருக்கியா?... எல்லாரும் சௌக்கியம்தானே.... என்று கேட்டபடி, ...பூ, பழங்கள், ஐந்தாம் மாதம் துளசிக்கு நடப்பதால், அதை ஒட்டி, அவளுக்கு பிடித்தமான ஐந்து விதமான பட்சணங்கள் அடங்கிய பையை தட்டில் எடுத்து பக்கத்து சோபாவில் வைத்து விட்டு, மல்லிகை பூவை கொஞ்சம் எடுத்து துளசியின் தலையில் சூட்டி விட்டார் மாமி.

"என்னம்மா, நன்றாக இருக்கிறாயா... புக்காம் பழகி விட்டதா... எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?... என்று கேட்ட மாமாவுக்கு தலையை ஆட்டிய துளசி, " எல்லாம் சௌக்கியமே.... நீங்கள் மாமியும் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டவளுக்கு, "நாங்கள் இருவரும் நன்றாக இருக்கோம்" என்றார் மாமா.

"மாமா, மாமி, சேர்ந்து நின்று என்னை ஆசிவாதம் செய்யுங்கள்.... மெல்ல தன் உடலை தூக்கிக் கொண்டு, காலில் விழுந்து நமஸ்கரித்தாள் துளசி.

"தீர்க்க சுமங்கலியாக புரண ஆயுளோடு சௌபாக்கியவதியாக இரம்மா... நல்லபடியாக குழந்தையைப் பெறணும்" என்று தலையில் கை வைத்து ஆசிர்வத்திதனர்...

பின்னர் மாமி, சம்பியரதாயாமாக அங்கு பக்கவாட்டில் நின்றிருந்த சியாமளவிடம், வெற்றிலை பூ, பழங்கள் அடங்கிய தட்டையும், ஐந்து வகையான பட்சணங்கள் எடுத்து வந்த பையையும் கொடுத்து விட்டு அவர் நலத்தை பொதுவாக விஜாரித்தார்.

"இதெல்லாம் எதற்கு மாமி" என்று கேட்ட சியாமளாவிற்கு, மாமி, "ஐந்தாம் மாதம் துளசிக்கு நடக்கிறது... சம்பிரதாயப்படி ஐந்து விதமான பட்சணங்கள் செய்து கொடுப்பது பிறந்த வீட்டினருக்கு வழக்கம்... துளசிக்கென்று நாங்கள் தானே இருக்கிறோம்... அவளுக்கு பிடித்த ஸ்வீட், காரம் செய்து எடுத்து வந்தோம்"

மாமியின் கையைப் பிடித்துக் கொண்ட சியாமளா, "ரொம்ப சந்தோஷம் மாமி... என்னதான், புகுந்த வீட்டில் எல்லால் இருந்தாலும், பிறந்த வீட்டு சிதனம் எப்படியும் எல்லாருக்கும் உசத்தியே.... துளசி கொடுத்து வைத்தவள் நீங்கள் கிடைக்க" என்றார் உண்மையான அன்புடன்... பின்னர், "வாருங்கள் மாமா, மாமி, காலை டிபன் சாப்பிடலாம் " என்றவரை, மாமி "காலையில் ட்ரைனில் வரும் பொழுதே டிபன் ஆகி விட்டது.. காப்பி மட்டும் போதும்... மத்தியானம் லன்ஞ்ச் சாப்பிட்டு விட்டு மாலை நான்கு மணியளவில் செல்ல வேண்டும்" என்றார்.

"ஆஹா... சரி மதியம் சாப்பாடு இங்குதான்... என்றவர், "நீங்கள் துளசியுடன் பேசிக் கொண்டிருங்கள்.... நான் காப்பி எடுத்து வருகிறேன்.... என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றார் சியாமளா.

காப்பி குடித்து முடித்தவுடன், சியாமளாவும் மதிய உணவுக்கு ஸ்பெஷலாக செய்ய சமையல் செய்யும் வள்ளியிடம் சொல்லிவிட்டு, அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டார். மாமியிடம், துளசி பொதுவாக தங்கள் ஊர் பற்றியும், வீடு, நிலத்தை பற்றியும் கேட்டுக் கொண்டாள்.

"ஊருக்கு ஒரு முறை வர வேண்டும் மாமி என்றவளிடம், " துளசி இப்பொழுது இந்த நிலையில் நீ ட்ராவல் பண்ணக் கூடாது. நல்லபடியாக குழந்தையை பெற்று எடுத்துக் கொண்டு வந்து கொஞ்சம் நாள் எங்களுடன் இரு" என்ற மாமி, " உன் பாட்டி, இருந்தால் எவ்வளவோ, இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்... என்ன செய்வது? பார்... இப்பொழுது கூட மேலே இருந்து ஆசிரிவாதம் செய்து கொண்டுத்தான் இருப்பார்கள்"

மாமா பொதுவாக ஆண்கள் மதியம் எப்பொழுது வருவார்கள் என்று கேட்டவருக்கு சியாமளா, "இன்று சனிக் கிழமை ஆனதால் இரண்டு மணிக்குள் வந்து விடுவார்கள்" என்றார்.

பிறகு பேச்சு, ஏழாம் மாதம் வளை காப்பு செய்வது பற்றி, திரும்பியது... சியாமளாவோ, மாமியிடம் நல்ல நாள் ஊரில் ஜோசியரிடம் கேட்டு கொஞ்சம் குறித்து தர சொன்னார். ஒப்புக் கொண்ட மாமியும் போன் செய்து தெரிவிப்பதாக சொல்ல, சியாமளா, மாமியிடம் நான்கு நாட்கள் முன்னரே மாமாவுடன் வந்து தங்கிருந்து வளை காப்பு நடத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என்ன என்ன சம்ப்ரதாயம் எல்லாம் கேட்டறிந்தார். தனக்கும் பிறந்த, புகுந்த வீட்ட்ச் சொந்தம் இப்பொழுது இல்லாததால், மாமியே பெரியவர்களாக முன்னின்று எடுத்துச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட சியாமளாவிற்கு, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக சம்மதித்த மாமி, அது பற்றி என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.