(Reading time: 14 - 28 minutes)

ராஜா நான் சொன்னேன்ல… ருணதி… அது இந்த பொண்ணுதான்ப்பா… ருணதி இது ராஜா…” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது,

“அப்படி சொன்னா எப்படி காவேரிம்மா… சாருக்கு நீங்க வச்ச பேருல்ல ராஜா… அவரை மத்தவங்களுக்கு எப்படி தெரியுமோ அந்த பேரை சொல்லுங்க…” என பவித்ரா கிண்டல் செய்து கொண்டே வர,

“நீயே சொல்லிடேன் பவித்ரா…” என காவேரியும் எடுத்துக்கொடுக்க

“ஓகே… நல்லது… சார் நேம்… மகத்ரு… பெரிய ஹார்ட் சர்ஜன்… சென்னையில வேலை… இங்க மாசம் இரண்டு, மூணு தடவை வந்துட்டு போவார்… இந்த இல்லத்துக்கு காவேரிம்மா எப்படியோ அப்படித்தான் சாரும்….” என அவள் படபடவென்று சொல்லிமுடித்துவிட்டு,

“போதுமா காவேரிம்மா… இல்ல வேற ஏதும் சொல்லணுமா?....” என பவித்ரா கையை ஆட்டிக்கொண்டே கேட்க,

“வாயாடி… போதும்… சும்மா இரு….” என அதட்டினார் காவேரி அவளை…

“அதுதானே… பேச விடமாட்டீங்களே…” என அவள் அலுத்துக்கொள்ள,

“பவி அத்தை… நீ எங்கூட பேசு…. நாம பேசலாம்… நான் எதும் சொல்லமாட்டேன்… துருவ் ரெஸ்ட் எடுக்கட்டும்… வா நாம போகலாம்…” என அவளின் கைப்பிடித்து நதிக்குட்டி இழுத்து செல்ல, அவளும் சென்றாள்…

அப்போது ருணதியின் செல்போன் சிணுங்க, காவேரியின் கவனம் அவளிடத்தில் வந்தது…

“நேரமாச்சு… நான் கிளம்புறேன் மேடம்….” என அவள் நகர்ந்த போது,

“ராஜா எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?...” என காவேரி மகத்திடம் கேட்க

“சொல்லுங்க மதர்….” என்றான் அவன்…

“இன்னைக்கு மட்டும் நீ ருணதியை வீட்டில டிராப் பண்ணிடேன்… ரொம்ப நேரமாச்சு… எல்லாம் என்னால தான்… அவ வீட்டுக்கு இனி ஆட்டோ பிடிச்சு போய் சேர லேட் ஆகும்… அவ வீட்டுல இருக்குறவங்க தேடிட்டிருப்பாங்க… இப்ப அவளுக்கு வந்த போன் கூட அவ வீட்டுல இருந்து வந்த போனா தான் இருக்கும்ணு நினைக்கிறேன்…” என அவர் சொல்லி முடிக்க

அவன் “சரி….” எனவும், அவள் “இல்லை…” எனவும் ஒரு சேர சொல்லினர்….

“என்ன ருணதி… என்ன இல்லை….?...”

“இல்ல மேடம்… நான் தனியாவே போயிடுவேன்… பயமில்லை…” என அவள் சொன்னதை காதிலே வாங்காது

“நீ இப்போ மகத் கூட போய் தான் ஆகணும்…” என அதட்டி அவளை அவனுடன் அனுப்பி வைத்தார் அவர்….

காரின் பின் கதவை திறந்து அவன் கொடுத்ததும், அதில் அவள் அமர, அவன் காரை எடுத்தான்…

“இது அவளோட அட்ரஸ்…” என அவனிடம் காவேரி ஒரு துண்டு பேப்பரை காட்டி, இது உனக்கு தெரிஞ்சிக்க… மத்தபடி அந்த பொண்ணு வழி சொல்லுவா…” என சொல்லிவிட்டு அந்த துண்டு பேப்பரையும் அவனிடம் கொடுத்துவிட்டார் காவேரி…

அவன் அது எதையுமே சட்டைப்பையிலிருந்து வெளியே எடுக்கவும் இல்லை… அவளிடம் வழியையும் கேட்கவில்லை…

அவர் கைகள் தானாக ஸ்டியரிங்கை பிடித்து வளைத்து நெளித்தவாறு அந்த சாலையில் செல்ல, அவன் மனமும் வளைந்து நெளிந்து பயணித்தது அந்த பாதையில்…

ரவின் அமைதி, காரில் நிலவும் மௌனம்… அதை கலைக்க விரும்பியவனாக, எப்.எம் ஐ ஆன் செய்தான் மகத்….

நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது….

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை

தினம் தினம் வளர்பிறை…”

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நான் உன்னைப் பார்த்தது பூர்வஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்

நான் இனி நீநீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே…”

கீதை போல காதல் மிக புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்..

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணா வா இங்கே…”

பாட்டு முடிந்த வேளையில் காரும் அவள் வீட்டு வாசலில் போய் நின்றது சரியாக…

வாசலிலேயே நின்று கைகளை பிசைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தார் கோகிலவாணி…

காரிலிருந்து இறங்கியவளைக் கண்டதும்,

“ஏண்டி கிராதகி… உனக்கு அறிவு இருக்கா இல்லையா?... வர நேரமாச்சுன்னா, ஒரு போன் பண்ணி சொல்ல மாட்ட… எருமைமாடு… வளர்ந்துருக்கிறியே தவிர, மண்டையில கொஞ்சமாச்சும் மசாலா இருக்காடீ உனக்கு பிசாசே… எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருதுடீ… உன்னை….” என கோகி அவளின் கழுத்தைப்பிடிக்க முயற்சி செய்ய, அவளின் பின்னே காரின் கதவைத்திறந்து கொண்டு இறங்கினான் மகத்…

“இது யாரு…” என யோசனையுடன் அவர் அவளைப் பார்க்க, அவள் அவன் அந்த இல்லத்தின் உரிமையாளர் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..

“ரொம்ப நன்றி தம்பி… வீடு வரைக்கும் கொண்டு விட்டதுக்கு…” என அவர் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, “உள்ளே வாங்க தம்பி…” என்று கூப்பிட, அவன் “இல்ல இருக்கட்டும்…. நான் வரேன்…” என அகல முற்பட்ட போது,

“அம்மா….” என்றபடி அவளின் காலைக்கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான் சிறுவன் ஒருவன்….

“துருவ் கண்ணா… அம்மா வந்துட்டாடா… இனி அழக்கூடாதுடா…” என்ற கோகி அவனை சமாதானம் செய்ய முற்பட,

அவனை தூக்கிக்கொண்டு சட்டென்று உள் சென்றாள் ருணதி…

“என் பேரன் தான்… சின்னப்பையன் இல்லையா… அதான் அம்மாவைத் தேடிட்டான்… அவ எதும் சொல்லாம போயிட்டான்னு நீங்க தப்பா நினைக்காதீங்க தம்பி…” என கோகிலா சொன்னதும், “இல்ல அதெல்லாம் ஒன்னுமில்லை… நான் வரேன்…” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை சிறிதும்…

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.