(Reading time: 45 - 89 minutes)

ஜீவா அவனுக்கு இன்னும் ரெண்டு ஓங்கி போடுங்க…என்னை சுண்டெலினு சொல்லிட்டான்…” சாப்பிட ச்சேரில் அமர்ந்திருந்த சுகா ப்ரவீர் அருகில் நின்ற அரணிடம் சொன்னாள்..

“ஆமா நீ சுண்டெலிய எப்டி சுண்டெலின்னு சொல்லலாம்….?”  அரண் கேட்க அடுத்து கல கலவென கால் வாரல்கள்….

ப்ரவிர் அவ்வப்பொழுது விடுமுறைக்கு ஜோனத் வீட்டிற்கு வந்து சென்றிருந்தாலும் ஒத்த வயது என்பதால் முறைவைத்து அழைத்து, வாரி விளையாடும் அளவு  ஃப்ரெண்ட்ஷிப் இருக்கிறது போலும் ஜோனத்தின் நட்பு வட்டத்துடன்.

சட்டென யாரிடமும் அதுவும் ஒரு ஆணிடம்…..தட் டூ போலீஸ் ஆஃபீஸரிடம் ஒட்டிவிடும் குணம் சங்கல்யாவுக்கு சாத்தியமே கிடையாது எனினும் அவனது விளையாட்டுத்தனம் ப்ரவீர் மீது பயம் வராமல் செய்கிறதுதான் இவளுள். அதே சமயம் மரியாதையும் தான் வரமாட்டேன் என்கிறது.

இவ்ளவு மொக்கை போடுறவன் என்ன இன்வெஸ்டிகேட் செய்து என்ன கண்டு பிடிக்க? கவலையாகிப் போனது பெண்ணுக்கு.

ஆனால் சாப்பாடெல்லாம் முடிய, கேஸ் டிஸ்கஷென் என இவர்கள் உட்காரும் போது அவன் அப்படியே வேரோடு மாறிப் போனான்.

அரண் சங்கல்யா ப்ரவீர் மூன்று பேருமாக மட்டும் தான் டிஸ்கஷனுக்கு. மற்றவர்கள் தேவையில்லை என படு இயல்பாக கட் செய்துவிட்டான்.

இவள் சொன்னதையெல்லாம் எந்த எக்‌ஸ்ப்ரெஷனும் இல்லாமல் இமை கொட்டாது கேட்டிருந்தவன்

“செர்வன்ட்ஸ் க்வார்ட்டஸ் செக்யூரிட்டி கேபின்ஸ் எல்லாத்தையுமே ஆடியோ ரிக்கார்ட் செய்வோம்….சுகாவ மிமிக் செய்து உங்கட்ட மாட்டிவிடனும்னு நினைச்சவங்க அந்த நேபாளி ஃபேமிலியையும் மாட்டிவிட நினைச்சுருக்கனும்…..ஜஸ்ட் டூ மிஸ் லீட் அஸ்…. ரெண்டு நாள் ரிக்கார்டிங்ஸை பார்த்துட்டு தென் வி’ல் கம் டு நோ த ட்ரூத்….என்னதான் இங்க பிறந்து வளந்தவங்களா இருந்தாலும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் எதுக்கு மதர்டங்கை விட்டுட்டு தமிழ்ழ பேசிக்கப் போறாங்க?..... மிமிக் செய்தவங்க அண்ணாவ பத்தி தப்பா பேசிருக்காங்க……சுகாவ பத்தி தப்பா பேசிருக்காங்க…..ரெண்டு பேரும் நிரப்ராதின்னா…..அந்த ஃபேமிலியும் நிரப்ராதியா தான் இருப்பாங்க…..பட் என்ன இன்டென்ஷன்னு பார்க்கனும்….”

இது சங்கல்யா யோசிக்காத விஷயம் தான். அண்ட் கன்வின்சிங் டூ….

“அடுத்து செயின் ஸ்னாச்சிங்….அது அட்டெம்ட் ஆஃப் தெஃப்ட் ன்றதால அடுத்து லியா அண்ணிய சேஃப் கார்ட் செய்ய ட்ரை பண்ணுறது இயல்பான விஷயம்…அதை வச்சே சுகா மேல இன்னுமா சந்தேகம் வர வைக்கலாம்னு கல்ப்ரிட் யோசிச்சுறுக்கலாம்தான்…..…பட் இதுல பேக்ஃபயர் ஆகவும் சான்ஸ் இருக்குதே..…சேஃப்டி ரீசன்னு சொல்லி அரண் மச்சான் அண்ணிய வல்லராஜனைப் பார்க்க தனியா அனுப்பாம இருக்கவும் சான்ஸ் இருக்கே….அப்படி தனியா போகலைனா அவங்க மொத்த ப்ளானும் ஃப்ளாப் ஆகிடுமே….ஃபேக்ட்ரில  பாம் இன்ஸ்டால் செய்த டீம் தாட் ப்ராஸஸ் ரேஞ்சுக்கு இது ஒத்து வரலை….இதுல வேற ஏதோ விஷயம் இருக்குது….”

ப்ரவீரின் இந்த பாய்ண்டை சுகா நிரபிராதி என தெரிந்த உடன் சங்கலயாவும் யோசித்திருந்தாள்தான்.

“வீட்ல வேற எந்த ஜுவல்லும் எப்பவாவது மிஸ் ஆகிருக்குதா?” ப்ரவீர் துருவினான்.

அரண் இல்லை என்றான்.

சங்கல்யாவுக்கு அவளது எங்கேஜ்மென்ட் ஜுவல்ஸ் நியாபகம். சுகாவிடம் என் ஜுவல்ஸை நீ எடுத்து வச்சிருக்கியா என கேட்க ஒரு தயக்கம் ஓடிக் கொண்டு இருக்கிறது உள்ளுள்.

இப்பொழுது விஷயத்தை சொன்னாள். அடுத்த நிமிடம் சுகாவிடம் கேட்டு உறுதிப் படுத்திவிட்டான் ப்ரவீர் அது திருட்டுப் போயிருகிறது என…

“இந்த ரெண்டு ஜுவல் தெஃப்டுக்கும் உள்ள லிங்க் லியா அண்ணி அண்ட் அந்த ரூம்… முதல் தடவை எங்கேஜ்மென்ட் நகையை ஈசியா திருடிட்டதால அந்த ரூம்ல இருந்து அடுத்தும் எடுக்றது ஈசின்னு தோணிருக்கும்….சோ இதுக்கும் பாம் ப்ளாஸ்ட்டுக்கும் சம்பந்தம் இல்லாம கூட இருக்கலாம்….மியர் தெஃப்ட்….”.

“இல்லனா வந்தவன் அண்ணாவோட தீவிர ஃபேனா இருப்பான்…. அண்ணா கொடுக்ற நகையெல்லாம் சுடப் பார்க்கிறானே…..” சின்னதாய் இலகுத்தன்மை ப்ரவீர் குரலில்.

சங்கல்யா முறைத்தாள். “ அப்டின்னா உங்க அண்ணா போட்றுக்கப்பவே திருடி இருக்கனும்….”

“யெஸ் திஸ் மே நாட் பீ த லாஜிக்….சுகாட்டயும் அரண் மச்சான்ட்டயும் கூட அண்ணா கொடுத்த ஜுவல்ஸ் உண்டே….” திரும்பவும் சீரியஸ் நோட்ஸிற்கு போய்விட்டான் ப்ரவீர்.

 “வாட் எவர் இட் இஸ்….இதுக்கும் பாம்ப் ப்ளாஸ்டுக்கும் ஏதோ ஒரு வகையில சம்பந்தம் இல்லைனு தான் தோணுது….பார்க்கலாம்……அதோட தீஃப் மாட்ற வரை ஹயாக்கு எதுவும் ஜுவல்ஸ் போட்டு வைக்காதீங்க…..நகைக்காக குழந்தை மேல கை வச்சுட கூடாது…”

“வீட்டுக்குள்ள சர்வென்ட்ஸுக்கு என்ட்ரி ரெஸ்ட்ரிக்ட் செய்ங்க… என்னோட டீம்ல இருந்து ஒருத்தர் உங்க எம்ப்ளாயி மாதிரி இங்க ஜாய்ன் செய்வார்…எந்த சர்வென்ட் எது செய்யனும்னாலும் அவர் முன்னால தான் செய்யனும்….உங்களுக்கும் சேஃப்டி…அதோட திருடின கை சும்மா இருக்காது…..கை நீட்டி மாட்டும்..…பார்ப்போம்…”

“அதோட அண்ணி இத நீங்க எப்பவும் உங்க பேக் சைட் ஆஃப்த நெக்ல ஸ்டிக் செய்துக்கனும்….சின்ஸ் ஏதோ ஒரு வகையில நீங்க தான் டார்கட் ஆகிறீங்கன்றதால….நீங்க இருக்ற இடத்தை எனக்கு ட்ராக் செய்ய இந்த டெக்னாலஜி ஹெல்ப் பண்ணும்…. போலீஸ் டிபார்ட்மென்ட் இவ்ளவு ஸோஃபிஸ்டிகேட்டட் கிடையாது இது எஸ் பி அதிரூபன் சார் அவங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட் ஒருத்தர்ட்ட இருந்து வாங்கி கொடுத்தாங்க…கீப் இட் சேஃப்“

ப்ரவீர் கொடுத்த அந்த கலர்லெஸ் ரவ்ண்ட் ஷேப் ஸ்டிக்கர் போன்ற அது அவள் கழுத்தில் அமரவும் ஸ்கின்னிற்குள் கரைந்து போனது போல் இருந்த தடமின்றி மறைந்து போனது.

“அண்ணி ஸ்பெஷ்ஷ்ஷல்லா உங்களை எப்படி கவனிக்கேன்னு முக்கியமான நேரத்துல மறந்துடாதீங்க..” இப்பொழுது பழைய வளந்த வால்  பாவத்திற்கு வந்திருந்தான் ப்ரவீர். அதாவது டிஸ்கஷன் முடிந்திருந்தது. சங்கல்யா மனதிற்குள் ஒரு நெருடல்.

மீண்டும் , புல்லிங் த லெக்‌ஸ், கேலி எல்லாம் முடிய ப்ரவீர் விடை பெறும் நேரம் அவனுடன் கார் வரை சென்றாள் சங்கல்யா…. “என்ன அண்ணி தனியா கேட்கனும்?”

“சுகா, திரியேகன் அங்கிள் எல்லோரையும் சந்தேகப் படுறீங்களா?” இவள் குரலில் எரிச்சல் இருந்தது.

“நான் இந்த கேஸை இன்வெஸ்டிகேட் செய்றவன் அண்ணி..…நியாயபடி என்னைத் தவிர எல்லோரையும் சந்தேகப்படனும்….அம்னீஷியால இருக்றதால உங்களால சுகாவ சந்தேகப் பட முடிஞ்சுதுன்னா என்னால ஏன் சந்தேகப் படமுடியக் கூடாது…..? ஃபாக்ட்டரி லாஸ்ல ரன் ஆகி இருந்து அதை க்ளோஸ் செய்துட்டு இன்ஷூரன்ஸ் அமவ்ண்டை வாங்கிக்கிறதுக்காக திரியேகன் அங்கிளே ப்ளாஸ்ட் ஏன் செய்துறுக்க கூடாது….? அதை அந்த இன்ஷுரன்ஸ் கம்பெனி ஏன் இப்படி டாக்கில் செய்ய கூடாது….? நான் எல்லா ஆங்கிள்ளயும் தான் என்கொயர் செய்யனும்…..பைதவே அரண் மச்சான் மூலம் இப்பவும் என் இன்வெஸ்டிகேஷன் டீடெய்ல்ஸ் அவங்களுக்கு போகத் தானே செய்யும் எதை வச்சு நான் அவங்களை டவ்ட் சர்க்கிள்ள நிறுத்துறேன்னு யோசிக்கீங்க….?”

“அது ஃபீல் பண்ண முடிஞ்சுது….”

“குட்…அப்ப நீங்க பார்ன் ஜார்னலிஸ்ட் தான். வாய்ல வர்ற மெசேஜஸை தவிர மத்ததையும் பக்காவா கேட்ச் பண்றீங்க…”

“ப்ச்….அவங்க எல்லோரும் இன்னொசன்ட் ப்ரவீர்”

“எஸ் அது என் மனசுக்கு அறிவுக்கு நல்லாவே தெரியும்….வெரி ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் பீபுள்…..பட் அதை நான் சட்டத்துக்கும் ப்ரூவ் பண்ணனுமே….அதுக்கு அவங்களையும் நான் இன்வெஸ்டிகேட் செய்துதானே ஆகனும்…”

இப்பொழுது புன்னகை வந்துதிருந்தது சங்கல்யா முகத்தில். ப்ரவீர் மேல் மரியாதையும் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.