(Reading time: 45 - 89 minutes)

ப்போ இருக்றதுலயே அதிக அளவு சந்தேகபட எலிஜிபிளான ஆள் நான் தான் போல…..கால்ல விழுந்து கழுத்துல ஒட்ட ஸ்டிக்கர் கொடுத்துறுக்கீங்களே….டு ட்ராக் மீ ஆல்வேஸ்….”

“சே…..ப்ளெஸிங் வாங்கினது ஃபேமிலி விஷயம்…….ஸ்டிக்கர் உங்க சேஃப்டிகாகவும் அதே நேரம் யூ ஆர் நாட் த கல்ப்ரிட்னு ப்ரூவ் பண்றதுக்காகவும்……அரண் மச்சான் சுகா எல்லோரும் இப்போதைக்கு வீட்டுக்குள்ளயே இருக்றவங்க….அவங்களுக்கு என் டீம் மெம்பர் உள்ள வர்றாரே அது மாதிரிதான் இதுவும்….”

“நம்பிட்டேன்….”

“நம்புங்கோ….நான் ஃபேமிலியையும் ப்ரஃபெஷனையும் குழப்பிக்கிறது இல்லை….இல்லைனா என் நிம்மதி போய்டும்….”

கிளம்பிப் போனான் அவன்.

ரவு தோட்டத்திற்கு வாக்கிங் செல்ல ப்ரவீர் உட்பட அனைவரும் தடை விதித்திருந்ததால் அன்று இரவு மொட்டை மாடிக்கு சங்கல்யா செல்ல அங்கு ஹயாவை கையில் ஏந்தியபடி அரண். அப்பாவுக்கும் மகளுக்கும் ஸ்பூனில் எதையோ மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டிருந்தாள் சுகா. திரும்பிப் பாராமல் வந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் சங்கல்யா.

மாடியிலோ….தன் மகளுக்கு பேபி ஃபூடை ஊட்டிக் கொண்டே இடையிடையே அரணுக்கு பாசி பருப்பு பாயாசம் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுகவி. “முன்னல்லாம் நான் ஸ்வீட் செய்றேன்னு சொன்னாலே வேண்டாம்னு சொல்லிடுவீங்க….இப்ப அம்மா செய்தா மட்டும் சாப்டுறீங்க…”

“இப்பவும் சொல்றேன் நீ ஸ்வீட்லாம் செய்யாதே….எனக்கு நோ சொல்ல கஷ்டம்… சாப்ட்றதும் என் டயட்க்கு சரி வராது…..பட் ஆன்டி இப்படி தர்றது ஒன்ஸ் இன் அ ப்ளூமூன்…இது ஓகே தான்…” இவளிடம் சொல்லியவன்

“அப்டித்தானே  பால்குட்டி?” மகளிடம் கேட்க அதுவரை அவர்களாக பேசிக்கொண்டிருந்தவர்கள்  இப்பொழுது தனக்கு கொடுத்த இம்பார்டன்ஸில் அரண் கையிலிருந்த குழந்தை கைகளை ஆட்டியபடி இரு குதி. அவள் கையில் பிடித்திருந்த ப்ளாஸ்டிக் டாய் பேட் அருகிலிருந்த சுகவியின் கையில் போய் இரு அடி.

“பால்குட்டி அம்மா கைல அடிச்சுட்டீங்க பாருங்க….” மகளிடமாய் அரண் சொல்லிக்கொண்டு போக

 “ஆனா ஒன்னு அடிக்றப்ப இப்படி கைல அடிச்சு வேஸ்ட்….தலைல போடனும்…” அவளது கணவனின் குரல் மனத்திரையில் சுகவிதாவுக்கு. அவர்களது காதல் சடுகுடு….கல்யாண ரேஸ் காட்சிகள் நினைவாய் விரிகிறது.

தன்னவனை தன் மகளோடு சேர்ந்து அணைத்துக் கொண்டாள் சுகா இப்பொழுது. பின் இருவருக்கும் முத்த வார்ப்புகள். அருகில் தெரிந்த அம்மாவின் முகத்தைப் பிடித்து தூர தள்ளுகிறாள் குழந்தை. என் அப்பாவாக்கும்….

“என்ன விது இப்படி…..பால்குட்டி முன்னால….” இது பொறுப்பான அப்பாவாக அரணது ரெஸ்பான்ஸ்

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஜீவா….நம்ம வெட்டிங்கை திரும்ப அனுபவிச்ச மாதிரி ஒரு ஃபீல்…எனக்காக எவ்ளவு செய்துறுக்கீங்கப்பா நீங்க”

இப்பொழுது அவளது கணவனாக தன்னோடு இழுத்தணைத்தான் தன்னவளை.

டுத்த நாள். இன்று ஜோனத்துக்கு மேட்ச். திருமணத்திற்குப் பின் அவன் விளையாடும் முதல் மேட்ச்.  க்ரவ்ண்டுக்கு கிளம்புவதற்கு முன்  சங்கல்யாவிடம் பேசினான் தான். அவன் நெர்வஸாய் இல்லைதான்.  ஆனால் சங்கல்யா டென்ஷனாய் இருந்தாள். சர்ச்சுக்கு போய் வரலாம் என தோன்றிவிட்டது. கிளம்பி கீழே இறங்கி வந்தாள். அங்கு டிவி முன்பு அரண் சுகா.

“வா வா லியா…இங்க உட்கார்…”தன் அருகே இடம் காண்பித்தாள் சுகா.

“ஐயோ….இல்ல நான் சர்ச் போறேன்…”

சுகா எழுந்து வந்து இவளைப் பிடித்துக் கொண்டாள். “எனக்கும் ஆரம்பத்துல இப்படிதான் படு டென்ஷனா இருக்கும் ப்ரபா விளையாடுறப்ப…..ஸ்டெம்ப் ஏன் இவ்ளவு பக்கத்துல இருக்கு…..பிட்ச் ஏன் இவ்ளவு நீளமா இருக்குன்னு கன்னா பின்னானு பயமா இருக்கும்….”

அருகிலிருந்த அரண் இப்போது சிரித்தான். அவனை முறைத்தாள் சுகா.

“உங்களுக்கு டென்னிஸ் மேட்ச் மாதிரி தானே இது அவங்களுக்கு….” சங்கல்யாவிற்கு ப்ளேயர் சுகா இதற்கு டென்ஷனாவாள் என்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.

“எக்‌ஸாக்ட்லி அவன் அப்படிதான் சொல்வான்....டென்னிஸ் உன் கம்ஃபர்ட் ஸோன்…அப்டித்தான் க்ரிகெட் எனக்கும்ன்னு…..லியா நீ எதுல எஃபெர்ட்லெஸா மாஸ்ட்ரி ஃபீல் பண்றியோ அத நினச்சுக்கோ ….அப்டித்தான் க்ரிகெட்ல அவன் ஃபீல் பண்ணுவான்….சோ மேட்ச்க்காக டென்ஷன் ஆகாத….இல்லனா தினம் தினம் டென்ஷன்லயே நிம்மதி போய்டும்….” சுகாவின் வார்த்தைகள் தெம்பூட்டுகின்றன தான்.

நான் எதுல மாஸ்ட்ரி ஃபீல் பண்றேன்…? விச் இஸ் மை கம்ஃபர்ட் ஸோன்” முப்பது கை தோன்ற வரும் கோபம் தான் ஞாபகம் வருகிறது இவளுக்கு. கோப படுறதுதான் இவள் கம்ஃபர்ட் ஸோனா? யோசித்தபடியே நிமிர்ந்து பார்க்க டிவி ஸ்க்ரீனில் இவளுடையவன் முகம் க்ளோசப் ஷாட். கவன  முக பாவத்தில் அவன்.

ஸ் மேட்ச் ஆரம்பிச்சுட்டு….

சர்ச்சுக்கு கிளம்பிவிட்டாள் இவள்.

இப்பொழுது அரணும் சுகவிதாவும் மட்டுமாய் டி வி முன்பு.

“விது உனக்கு எல்லாமே ஞாபகம் வந்துட்டுப் போல…..ப்ரபு க்ரிகெட் விளையாட ஆரம்பிச்சப்ப உள்ளதெல்லாம் சொல்ற…”

“ம்…அவன் சம்பந்தபட்டது எல்லாமே தெரியுதுன்னுதான் நினைக்கிறேன்…. நீங்க என்ட்ட சண்டை போட்டது, நம்ம வெட்டிங் நடந்த விதம் எல்லாம் பார்க்கிறப்ப நான் உங்கட்ட முன்னால ஏதாவது சண்டை போட்றுக்கனும்னு தெரியுது…..ஆனா அப்டி என்ன செய்தேன்னு மட்டும் ஞாபகம் இல்லை ஜீவா…மத்தபடி எல்லாமே ரிகவர் ஆகிட்டுன்னு தான் நினைக்கிறேன்…”

ர்ச்சில் வெகு நேரம் அமர்ந்துவிட்டாள் சங்கல்யா. வீட்டுக்கு போய் பயந்து பயந்து மேட்ச் பார்ப்பதை விட இது உத்தமம்.

“கடவுளே எது எப்படியோ….இன்னும் எத்தனை மேட்ச் விளையாடுவானோ…..ஆனா இதுல கண்டிப்பா ஜெயிக்க வச்சு கொடுத்துடுங்க….எனக்கு டென்ஷன் தாங்கலை….நிஜமா நீங்க சொல்றதெல்லாம் கேட்பேன்…” கேட்டிருந்த கடவுளுக்கு சிரிப்பு வரும் வண்ணம் சிறு குழந்தையாய் ஒரு ஜெபம்….

“எது எப்படியோ செக்க்ஷுவல் இம்மொரலிடி தவிர எதுக்காக டிவோர்ஸ் செய்றதுக்கும் பைபிள் பெர்மிட் பண்ணலை….மத்த விஷயத்துல என்னை கேட்டா குறை இல்லாத மனுஷங்களே இல்லைனு தான் சொல்லுவேன்….உன் குறைய உன் வைஃப் அனுசரிச்சுட்டு போற மாதிரி அவட்ட உனக்கு எது சரி இல்லைனு படுதோ அதை நீ அட்ஜஸ்ட் செய்துட்டுதான் போகனும். தென் சொல்யூஷன் வரும்…..விட்டுட்டு ஓடுறதைவிட ப்ரச்சனையை ஹேண்டில் பண்ணி பழகு” யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு போவது இப்பொழுது இவள் காதுகளில்….

என்ன தைரியத்தில் இவள் டிவோர்ஸ் என்ற முடிவுக்கு வந்தாள்?  

சோ எப்படினாலும் ஜோனத் கூட தான் லைஃப்…. ஒருபக்கம் மகா சந்தோஷமாகவும் ஒரு பக்கம் படு பயமாகவும் ஒரு ஃபீல்…..ப்ரச்சனையாகிடும்னு தப்பிச்சு ஓட ட்ரைப் பண்றதை விட அதை ஹேண்டில் பண்றது பெட்டர்….யோசைனையுடனே வீடு வந்து சேர்ந்தாள். முதல்ல  மேட்ச்சை பார்க்கிறதுல இருந்து ப்ரச்சனையை ஹேண்டில் செய்ற டெக்னிக்கை ஆரம்பிப்போம்.

வீட்டில் ஹாலில் அரண். அவன் இடக்கையோடும் தோளோடும் இணைந்து பிணைந்த படி கணவன் தோளில் முகம் நிறுத்திய நிலையில் சிலையாய் சுகா….. இருவர் பார்வையும் எதிரிலிருந்த சுவர் அகல டிவியில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.