(Reading time: 15 - 30 minutes)

'போன் ரொம்ப நாழியா ஸ்விட்ச் ஆஃப்லே இருக்கில்ல?' என்றான் யோசனையுடன். 'உங்க அக்காவோட ஆபீஸ் நம்பர் இல்லை, ஃபிரண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருக்கா?'

'அது... அது எங்கேயோ எழுதி வெச்சேன். இருங்கோ வரேன்' என்று அவள் தனது அறை மேஜையை நோக்கி செல்ல, சில நொடிகளில் அங்கிருந்து ஒலித்தது கோதையின் குரல்

'ஒரு நிமிஷம் இங்கே வாங்கோளேன்.....'

அவன் அறைக்குள் செல்ல, அங்கே அவள் கையில் படபடத்துக்கொண்டிருந்தது வேதாவின் கையெழுத்தில் அந்த கடிதம்.

'கோதை....  ரொம்ப சாரிடா... ரொம்ப ரொம்ப சாரி... என் மனசுக்கு பிடிச்சவரை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.... இது ஒரு வகையிலே உன் வாழ்க்கைக்கு, உன் கல்யாணத்துக்கு  நான் பண்ற துரோகமா கூட இருக்கலாம்... ஆனா நேக்கு வேறே வழி இல்லை..... ரொம்ப சாரி...'  

'கோ... கோகுல்... இது... இது தப்பு... தப்புதானே??? அக்கா இப்படி எல்லாம்... எப்பவும் அவ இப்படி எல்லாம் இல்லை கோகுல்... அப்பாக்கு தெரிஞ்சா... தெரிஞ்சா ரொம்ப அழுவார்..' அழுகையும், பயமும் தவிப்புமாக வெளியே  வந்தது கோதையின் குரல்.

ஒரு முறைக்கு இரண்டு முறை அதை படித்தான் கோகுல். யாருடன் போகிறேன், எங்கே போகிறேன்., என்பதை போல எந்த ஒரு விவரமும் இல்லாமல் ஒரு கடிதம். ஒன்றுமே புரியவில்லை தான் அவனுக்கு. ஆனால் அங்கே அப்பாவின் சட்டை பையில் அவள் விவரமாக எழுதி வைத்திருக்கும் அந்த கடிதம் பல குழப்பங்களை தரப்போகிறது என்றும் அவன் அறிந்திருக்கவில்லை.

'இது உங்க அக்கா கையெழுத்து தானா? நோக்கு தெரியுமா?' அவனது முதல் கேள்வி அதுவாகத்தான் இருந்தது.

அதை மறுபடி வாங்கி பார்த்துவிட்டு ஆமோதிப்பாக தலை அசைத்தாள் கோதை  'ஆ..ஆமாம்...' அவள் குரல் உடைய தயாராக இருக்க.. சரியாக அந்த நொடியில்  ஒலித்தது அவர்கள் வீட்டு தொலைப்பேசி.  

'நேக்கு ரொம்ப பயமா இருக்கு... அப்பாவாத்தான் இருக்கும். என்ன சொல்றது இப்போ.???' பயமா இருக்கு கோகுல்...' படபடப்புடன் அவள் அவன் கைப்பிடித்துக்கொள்ள.....

'இரு... இரு... ரெண்டு நிமிஷம் டைம் குடு. ஏதாவது யோசிப்போம்... எல்லாம் சரியாயிடும்டா...   முதல்லே போன் எடுத்து யாருன்னு பார்போம்' என்றபடியே போனை அடைந்து ரிசீவரை கையில் எடுத்தான் கோகுல்

'ஹலோ......'

கீதம் தொடரும்.....

Episode # 08

Episode # 10

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.