(Reading time: 29 - 57 minutes)

ண்களை மூடிக் கொண்டு பப்பியின் எழுத்துக்களை ரசித்த படி.. அதன் விடையை கண்டுபிடித்த நினைவுகளில் இருந்து மீளாமல் இவன் வாய் தானாக சொன்னது “ஏலக்காய்” என்று...

அப்பொழுது இவன் மூக்கின் நுனியில் திண்மையான தொடுதல்.. .மின்னலடித்த உணர்வு இவனுள்..

கூடவே வந்த “ஷார்ப் நோஸ்!”, என்ற அஞ்சனாவின் உற்சாகக் குரலில்..

சட்டென்று கண்களைத் திறந்தான்... அவள் விரல் இவன் மூக்கைத் தொட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தது.. அவனது பப்பியைத் தவிர எந்த பெண்ணையும் ஒரு எல்லையில் தான் வைத்திருப்பான்.  

இவள் செய்கை, தன் மீது உரிமை  எடுக்கிறாள்  என்ற கோபத்தை உருவாக்க,

“ஏலக்காய் பவுடரை கலந்து ஏமாத்திட்டியா பிஜூவை?”, சுள்ளேன்று சீறினான்.

“நான் ஒன்னும் ஏமாத்தணும் செய்யலை! நான் சொல்றதையும் மதிச்சு அவர் பயப்படுறப்போ.. அந்த பயத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கணும் இல்லையா? அதான் நடிச்சேன்!”

‘நான் ரொம்ப நல்லவளாக்கும்’, என்ற தோரணையில் அவள் பேச...

எப்பொழுதும் மற்றவரை பேச விட்டு காரியம் சாதிக்கும் ஆர்யமன், இவள் பேச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போக....

‘ஹைப்பர் ஆக்டிவ்வா  இருக்கிறா! சும்மா விட்டால் யாரையும் வேலை பார்க்க விட மாட்டாள்! ட்ரையினிங் கொடுக்க யாரைப் போட்டாலும் ஏய்ச்சுடுவா... மத்தவங்க டையமும் வீணாகக் கூடாது! இவளும் ஏதாவது கத்துக்கணும்!’,

என்று எண்ணிக் கொண்டவனாய்..

“நீங்க கம்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கீங்க தானே! ஒரு மணி நேரம் கம்யூட்டரில் உங்களை நீங்களே என்கேஜ் செய்துக்கணும்ன்னு சொன்னா என்ன செய்வீங்க?”, என்று கேள்வி எழுப்ப..

“அதுவா வெரி சிம்பிள்!!!! கேம் விளையாடுவேன்..”, யோசிக்காமல் கண்கள் மின்ன பதிலளித்தாள் இவள்..

‘ஒரு பேச்சுக்காவது ஏதாவது ப்ரோகிராம் போடுறேன்னு சொல்றாளா பாரு! ஹூம்.. பொழுதை போக்கை வேலைக்கு வந்தா பின்ன என்ன தோணும்?’, என்ற எரிச்சல் வந்தாலும்..

‘மதியம் முழுக்க மீட்டிங் இருக்கே... இவ போக்கில் போய் தான் மடக்கணும்’

தனக்குள் சொல்லிக் கொண்டவன்,

“சரி.. இன்னைக்கு முழுக்க கேம் விளையாடுங்க.. பட், ஒன் கண்டிஷன்”, என்று நிறுத்திக் கொள்ள...

அதைக் கேட்டவள்,

‘நம்ம கம்யூட்டர் லேப்ல கூட இப்படி ஆப்ஷன் கொடுக்க மாட்டாங்க. கார்ப்பரேட் இப்படி எல்லாம் வசதி இருக்கா!!!’, என்று உள்ளம் குத்தாட்டம் போட...

“ஆல் கண்டிஷன்ஸ் அக்சஸபடட் யா... கேம்ஸ் ஆர் பார்ட் ஆஃப் மை லைஃப்”, என்று ஆர்வத்துடன் சொல்ல...

“சிம்பிள் கண்டிஷன் தான் - பிஜூவோட ட்ரையினிங் ஆடியோவை ரிப்பீட் மோட்ல கேட்டுக்கிட்டே கேம் விளையாடணும்”

என்றான். அஞ்சனாவின் ரெஸ்ட் எடுக்கும் மூளை விழித்துக் கொள்ள...

“ஓ... இப்போ புரியதே நீங்க ஏன் கேம் விளையாட சொன்னீங்கன்னு!”, என்று ஆதிகால நிர்மா விளம்பர பாணியில் சொன்னவள் மேலும்,

“பிடிச்ச வேலையை பிடிக்காததோட சேர்த்து செய்தா, பிடிக்காத வேலையும் பிடிச்சு போயிடும் அதைத் தானே சொல்ல வர்றீங்க?”

என்று கேட்டதும், ‘பிகேவியர் சைன்ஸ்ல எவ்வளோ பெரிய கான்செப்ட்! இது புரிஞ்சு பேசுதா.. இல்லை போற போக்கில் பேசுதா..’, இவன் குழம்ப...

அந்த ட்ரையினிங் அறையில் இருந்த இன்டர்காம் சிணுங்கியது.. அதை எடுத்து விசாரித்து விட்டு ரீசிவரை வைத்தவன்.. அஞ்சனாவை நோக்கி,  

“உங்களுக்கு லஞ்ச் வீட்டில் இருந்து அனுப்பியிருக்காங்க. ரிசப்ஷன்ல கலெக்ட் செய்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு பின் நினைவு வந்தவனாய்,

“ஹே.. ஏதோ புடவை கூட ரிசப்ஷன்ல இருக்காம் அப்போதே கால் வந்தது.. டிரையினிங் முடிஞ்சதும் சொல்லலாம்னு விட்டுட்டேன்!”, என்று சொன்னதும், அதுவரை இருந்த குறும்புத்தனம் மறைந்து தீவிரமானது அவள் முகம்...

“புடவையா? ”, அதிர்ச்சியுடன் கேட்க...

‘இதுக்கு ஏன்ம்மா ஷாக் ஆகுற!!!’, என்ற ரீதியில் இவன் பார்க்க...

“ஏன் அதை அப்பவே சொல்லலை! பாவம் சசி! அவங்க புடவையை நீங்களே பார்த்தீங்க தானே?”, என்றாள் ஆதங்கத்துடன்..

“ஹலோ!!! புடவையை பார்க்கிறது தான் என் வேலையா?”, என்றான் ரோஷமாக..

“ப்ச்ச்.. அவங்க புடவை சேறாகிடுச்சு தெரியுமா? அதை வாஷ் பண்ணி ஈரமா வேற இருந்தது.. ஏசி ரூம்ல எப்படி தான் சமாளிக்கிறாங்களோ?”

“டைம்லி ஹல்ப்பை டைம் போன பிறகு செய்து என்ன பிரயோஜனம்?”, என்று அவள் ஆதங்கத்தோடு கேட்டது இவனை யோசிக்க வைத்தது...

சசி வந்த பொழுது அவள் முகத்தில் இருந்த அலட்சியமும், எரிச்சலையும் தான் கவனித்தான் தவிர.. இவள் சொல்வதை எல்லாம் ஆராய தோன்றவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.