(Reading time: 29 - 57 minutes)

ர்யமனுக்கு பொண்ணுங்க எல்லாம் ஏதோ பொழுதை போக்க ஆபிஸ்க்கு வர்றதா நினைப்பு! அவன் கூட அளவா பழகு”,

உணவு இடைவேளை என்று அஞ்சனாவை அழைக்க வந்த சசிக்கு... இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாவிட்டாலும், அவர்கள் பழகும் விதத்தில்  ஒரு அன்னியோன்யம் இருப்பது - அதுவும் ஆர்யமன் அவள் கையைப் பற்றியதைக் கண்ட பின்பு தெளிவாக புரிய,

ஆர்யமன் மீதிருந்த வெறுப்பா.. இல்லை அஞ்சனாவின் மீதிருந்த அக்கறையா... ஏதோ ஒன்று மனதில் தோன்றியதை அவளிடம் வெளிப்படையாக சொல்ல வைத்தது..

இவள் இப்படி சொன்னதும் தன்னுடன் யார் பேசினாலும் அவர்களை சந்தேகக் கண்ணோட பார்க்கும் பாலாஜியின் நினைப்பு தான் வந்தது அஞ்சனாவிற்கு...

அவள் சொல்வதை சிரிப்புடன் கேட்டுக் கொண்ட அஞ்சனா,

“கூல் சசி! ஆர்யா என் ஃப்ரண்ட்! இப்போ அதுவா முக்கியம்.. சீக்கிரமா வாங்க! உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!!”,

ஏற்கனவே, ஓடாத குறையாக நடந்தவள்... இப்பொழுது ஓட ஆரம்பிக்க... வேறு வழியில்லாமல் சசியும் அவளுடன் ஓடி வந்தாள் ரிசப்ஷனுக்கு...

அங்கே, ரிசப்ஷனிஸ்ட்டிடம் டிரைவர் கொடுத்துச் சென்ற சேலையையும், டிபன் கேரியரையும் வாங்கி விட்டு,

சசியிடம், “இதோ உங்களுக்கான சர்ப்ரைஸ்!!!”, என்று அந்த சேலையை கொடுத்து,

“உங்க ப்ளவுஸ் கலர்ல சேலை அனுப்ப சொல்லி எங்க பாவாகிட்ட கேட்டேன்! எங்க பாவா செலக்ஷன் பிடிச்சிருக்கா? மேட்ச் ஆகுது தானே?”,

என்று இவள் பேசிக் கொண்டே போக... பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றாள் சசி!

“ஸாரி.. கொஞ்சம் லேட்டாகிடுச்சு! ஈரப் புடவையில் இருக்க சிரமப்பட்டு இருப்பீங்க தானே!”,

‘எத்தனை நுணுக்கமாக எனக்காக யோசித்து இருக்கிறாள்! எனக்கு இதை இவள்  செய்யணும்னு என்ன இருக்கு? முகுந்த்க்கு கூட இப்படி எல்லாம் செய்யணும்னு தோணலையே!’,

சிறு சிறு செயல்கள்.. அதனால் உண்டாகும் புரிதல் தான் நல்ல உறவுகளுக்கு பாலமாக அமைகிறது... அஞ்சனா காட்டும் அக்கறையில் சசியின் மனதிற்கு  நெருக்கமாகி போனாள் அவள்!      

தக்க சமயத்தில் உதவி செய்த அஞ்சனாவை கண்டு நெகிழ்ந்தாலும்.. வேலைப்பாடுகள் நிறைந்த அந்த சேலையின் மதிப்பை மனதிற்குள் கணக்கிட்டு  மலைத்தவள் அஞ்சனாவிடம்,

“இவ்வளோ காஸ்ட்லி சேலையா? இதை நான் கட்டணும்ன்னா.. கண்டிப்பா பணத்தை வாங்கணும்!”, என்று முடிவாக சொன்ன சசி,

கையோடு தன் செக் புக்கில் அந்த சேலைக்கு குத்து மதிப்பாக ஒரு தொகையை எழுதி அவள் கையில் கொடுக்க...

“கிப்ட்க்கு போய் காசு கொடுப்பாங்களா”, என்று வருத்தமாகி போனது அஞ்சனாவிற்கு...

“ஹே அஞ்சு!! காசை தான் கொடுக்கிறேன்! நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை இல்லை!”,

வெறும் வாய் வார்த்தையாக அல்ல... அந்த சேலையை விட, நீ எனக்கு  முக்கியமாகிப் போனாய் என்பதை உணர்ந்து சசி சொல்ல...

இந்த வார்த்தைகள்.. குடும்பம் என்ற கூட்டிற்குள் இருந்தவளுக்கு,  வந்த அன்றே கண்டு கொண்ட நட்பு... மனதிற்கு ஒரு நிறைவுத் தர.. மறுப்பு சொல்லாமல் அந்த செக்கை வாங்கி,

“என் ஃப்ரண்ட்டோட ஃபர்ஸ்ட் கிஃப்ட்! பேங்க்குக்கு போகாது! என்கிட்டயே தான் இருக்கும்!”, என்று சொல்லி பொக்கிஷம் போல பத்திரபடுத்தினாள் தன் கைப்பைக்குள்.

அந்த செக்கின் மதிப்பை விட... தன் நட்பு பெரிதாகப் படுகிறது என்பதை கண்டு கொண்ட சசி மேலும் நெகிழ... அஞ்சனா குறும்புடன் அவளை நோக்கி,

“போதும் சென்டிமென்ட்! கண்ணு வேர்க்குது.. சீக்கிரம் சேலையை கட்டிகிட்டு வா!!!”, என்று பட்டென்று ஒருமையில் கட்டளைகளை அடுக்கினாள் சசியிடம்.

கிட்டத்தட்ட ஆர்யமன் வயது சசிக்கு. இருந்தாலும், அவள் ஒருமையில் அழைப்பததும்  சிலாகித்தது இவள் நெஞ்சம்.

“ஓகே. இரு வந்துடுறேன்”, என்று சேலையைக் கட்டி வரச் சென்றதும், பவதாரிணியை அழைக்க எண்ணி அலைபேசியை எடுத்தாள்.. நிறைய வாய்ஸ் மெசேஜ்கள் இருந்தன..

பவதாரிணியும், ஹர்ஷ்ஷூம் மாறி மாறி இவளை தொடர்பு கொள்ள முயன்றிருப்பது அந்த செய்திகளை கேட்டு புரிந்து கொண்டாள்.

வாய்ஸ் மெசேஜ்களை கேட்டு விட்டு, முதலில் ஹர்ஷை அழைத்து பேசி விட்டு பவதாரிணியை அழைக்க நினைக்கும் பொழுது, இவள் அலைபேசி சார்ஜ் இன்றி மடிந்தது..

சார்ஜ் போட இவள் நினைக்கும் பொழுதே, முகுந்த் அங்கே வர,

“அய்... செந்தாமரை!!!”, என்று இவள் அழைக்க..

‘இவ இந்த பேரை விட மாட்டா போலவே’, என்று மனதிற்குள் நினைத்தவன்,

“வாலு!!! என்னை இங்க வரச் சொல்லிட்டு சசி எங்கே போனா?”, என்று விசாரித்த சமயம்  சரியாக சசி அங்கே வர, புத்தம் புது சேலையில் ஜொலித்தவளைக் கண்டதும்,

“வாவ்... கார்ஜியஸ்!!!!”, என்று இவன் வாயைப் பிளக்க, அவன் காதைப் பிடித்து திருகிய சசி,

“இதை ஒன்னை மட்டும் வாய் வலிக்காம சொல்லு! இப்படி ஒரு சேலை எடுத்து கொடுக்க உனக்கு தோணுச்சா?” , என்று படபடக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.