(Reading time: 29 - 57 minutes)

முகுந்த், “புடவையில் எப்படி இருக்கேன்னு பார்க்க மட்டும் தானே தெரியும்! புடவை எப்படி இருக்குன்னு பார்க்க தெரியாதேம்மா..”, என்று கெஞ்ச...

“ம்ம்.. அஞ்சனாவுக்கு மட்டும் பின்ன எப்படி தெரியுதாம்... உனக்கு என் மேல அக்கறையே கிடையாது!”, என்று இவள் குறை சொல்ல ஆரம்பிக்க...

‘வந்த அன்னைக்கே கெளப்பி விடுறியே... நீ நல்லா இருப்பே’, என்பது போல அஞ்சனாவை முகுந்த் பார்த்து விட்டு சசியிடம்,

“ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தான் தெரியும்... எனக்கு எப்படி தெரியும்?”, என்று சொல்ல...

‘லவ்வர்ஸ்க்கு நம்மால சண்டை வரக் கூடாது’, என்று நினைத்த அஞ்சனா

“முகுந்த் சொல்றது கரக்ட் சசி! உன் புடவை பத்தி சொன்னதும், ஆர்யா கூட இப்படி தான் ஃபீல் பண்ணார்!”, என்று வாயை விட...

இவன் முகம் மாற... அதை கண்டு கொண்ட சசி,

“முகுந்த் அவளும் எங்க டீம் தான்”, என்று சொல்ல..

“பட், அவனை இவ்வளோ உரிமையா கூப்பிடுறா”,  சட்டென்று கிரகித்தவன்,

“ஆர்யா வா????””, என்று மீண்டும் கேட்டான்...

“ம்ம்... ஆமா!!! ஆர்யா!!!!”, என்று தோளை குலுக்கியவள்,

“ஆர்யாக்கு என்ன? ஆர்யா என் ஃப்ரண்ட்”, என்றாள் அஞ்சனா..

“ஃப்ரண்ட் ன்னா.. எப்படி ஸ்கூல் மேட்.. காலேஜ் மேட்.. இந்த மாதிரியா?”, என்று இவன் கேள்வியால்  துளைக்க...

முதலில் என்ன சொல்வதென்று திகைத்த அஞ்சனா, பின் சமாளிப்பாக,

“ஏன் ஸ்கூல் மேட், காலேஜ் மேட் மட்டும் தான்  ஃப்ரண்ட்டா இருப்பாங்களா? சசி எப்படி என் ஃப்ரண்ட்டோ அதே போல ஆர்யாவும் என் ஃப்ரண்ட்!”, என்று சொல்ல..

முகுந்த் பார்வை சசியைத் தழுவி கேள்வியுடன் நின்றது..

அஞ்சனா சொன்னதும், ‘ஆர்யாவும், நானும் ஒன்னா’, என்ற அதிர்ச்சியில் இருந்த சசி, முகுந்த் பார்வையின் பொருளை உணராமல் இல்லை.. அதற்காக அஞ்சனாவை விட்டு கொடுப்பதாகவும் இல்லை.

“முகுந்த், என் ஃப்ரண்ட்கிட்ட நீ விசாரணை பண்ணது போதும்.. முதல்ல சாப்பிடலாம்! வாங்க”, என்றாள்... “ஃப்ரண்ட்”, என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து!

ணவு இடைவேளைக்கு சென்று விட்டு திரும்பிய பின்னும் ஆர்யமன் அதே ட்ரையினிங் அறையிலே இருப்பதை கண்ட அஞ்சனா,

“ஆர்யா இங்கே தான் இருக்குறீங்களா.. சாப்பிட்டீங்களா. லஞ்ச் என்ன ஸ்பெஷல்?”, என்று பல கேள்விகளை அடுக்கினாலும்.. இவன் வாயை திறந்த பாடில்லை.. கணினியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்க.. இவள் பார்வையும் அந்த கணினியில் திரும்பியது...

“ஹைய் கேமிங் லேப்டாப்!!! இதுவும் ஆபிஸ்ல வைச்சு இருப்பீங்களா?”, என்று குதூகலத்துடன் கேட்டவள் பார்வை கணினி திரையைக் கண்டதும் உறைந்தது.... ஏதோ கொலைகாரனைப் பார்ப்பது போல மிரண்டவள் வேகமாக..

“...நோ...”,  என்று அந்த லேப்டாப்பை மூட... “யேய்...”, என்று எரிச்சலுடன் அவளை முறைக்க..

அவளோ கண்களில் மிரட்சியுடன்...

“ப்ளீஸ்... நோ... க.ன்...”, பதற்றத்துடன் சொன்னவளது தலை இட வலமாக அசைந்தது..

‘இது என்ன குழந்தை போல.. துப்பாக்கிக்கு பயப்படுறா’, குழம்பினான்...

“கன்  கேம்ஸ் பிடிக்காதா? நான் டிசைன் பண்ணதை உன்னை டெஸ்ட் பண்ண சொல்லலாம்ன்னா பார்த்தேன்!”, என்ற படி லேப்டாப் திரையை திறக்க முயல... இந்த முறையும் அதை தடுக்க முயன்றவளின் கரம் சில்லிட அவளை நோக்கி நிமிர்ந்தான்...

‘வேண்டாம்’, என்பது போல மிரட்சி அகலாமல் இட வலமாக தலையசைத்தவள் செயல் இவனுக்கு புரியவில்லை.. வந்ததிலிருந்து சலசலத்து கொண்டிருந்தவள்... பேயறைந்தது போல இருப்பதைப் பார்க்க பாவமாக இருக்க..

“கூல்!!! சரி உனக்கு பிடிச்ச கேம் சொல்லு. டவுன்லோட் செய்து தாரேன்”, என்றான் அவளை சமாதானபடுத்தும் நோக்கில்..

அவன் அதை சொல்லும் பொழுதே அவள் முகம் சட்டென்று இயல்பு நிலைக்கு மாற... நொடிக்கு ஒரு ரியாக்ஷன் கொடுக்கும் அவள் முகத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்டவனுக்கு அவளை மிரட்ட ஒரு ஆயுதம் கிடைத்து விட்டது என்ற சந்தோஷம் வேறு..

அவள் கேட்ட கேம்ஸ்சை இன்ஸ்டால் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பும் பொழுது அதை சொல்லியும் காண்பித்தான்...

“நான் வர்ற வரைக்கும் இந்த ட்ரையினிங் ரூம்ல தான் இருந்து நான் சொன்னதை செய்! ஏதாவது தில்லு முள்ளு செய்தே கன் பாயின்ட்ல தான் ட்ரையினிங் கொடுக்க வேண்டியிருக்கும்”,

என்றவன் அந்த முறையும் அவள் கண்களில் தோன்றி மறைந்த வலியை கவனிக்கவில்லை...

அவன் கிளம்பியதும், ஆர்வமாக விளையாட ஆரம்பித்தவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை...

மணி ஐந்தரையை தாண்டியிருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.