(Reading time: 29 - 57 minutes)

தை பொறிச்சு எடுத்து முகுந்த்கிட்ட கொடுப்பாளே சசி... வெறும் வாய்க்கு முழுக் கோழி ரோஸ்ட்டே கிடைச்சிருச்சே! இன்னைக்கு பார்ட்டில ஸ்பெஷல் செர்விங்கா  அத்தனை பேருக்கும் செர்வ் பண்ணிடுவானே...’,

‘நடக்க போகும் செயின் ரியாக்ஷன் நினைத்து மனதிற்குள் அலுத்துக் கொண்டாலும், முகத்தில் எந்த சலனமும் காட்டாது,

“ஆக மொத்தம்.. உன்னை ட்ரையினிங் ஆடியோ கேட்க சொன்ன  விஷயத்தை மட்டும் சசிகிட்ட  சொல்லாம விட்டுட்ட..”, என்றான் அவளிடம்..

“ஸ்ஸ்ஸ்...ஆமால்ல..”, என்று தலையில் கை வைத்து முழித்தவள்...

“பிடிச்ச விஷயத்தை பிடிக்காத விஷயத்தோட சேர்த்து செய்தா.. பிடிக்காததும் பிடிச்சு போயிடும்ன்னு தானே கேம் விளையாடிகிட்டே ஆடியோ கேட்க சொன்னீங்க..”, என்று சொல்ல..

‘ஆமா.. இப்ப வந்து சொல்லு!!! தலையிலே நங் நங்ன்னு நாலு கொட்டு வைக்கணும்’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்,

அடக்கிய கோபத்துடன் அவளையே பார்த்தான் சில நொடி... அவன் பார்த்த பார்வையில்... மனது குத்தியது இவளுக்கு..

“ஜஸ்ட் மிஸ்... பார்ட்டில சசியை பார்க்கிறப்போ சொல்லிடுறேன்“, என்று சமாளிக்க ஆரம்பித்தவளை கையமர்த்தியவன்..

“நீ இதுவரை சொன்னதே போதும்.. இனி எதுவும் வாயைத் திறந்தே“, விரலை ஆட்டி மிரட்ட...

“அதுவும் ஹர்ஷ்ஷூக்கு வீண் தலை வலியை கொடுக்குமா?”, பாவம் போல முகத்தை வைத்துக் கேட்க...

“அதான் வெவரமா என் தலையில் இறக்கிட்டான்! இனி எனக்கு தான்  தலை வலி”, என்றான் எரிச்சலுடன்...

“புரியலை”, அஞ்சனா முழித்தாள்...

“அது புரியாது! சரி! பார்ட்டிக்கு லேட்டாகிடுச்சு கிளம்பு”, என்று சொல்லிக் கொண்டே கிளம்ப..

இவள் கர்ம சிரத்தையாக, “ரிவ்யூ பண்றேன்னு சொன்னீங்க..”, என்று கேட்க...

“ஆடியோ கேட்டிருப்பன்னு நம்பிக்கையே இல்லை!”, என்ற படி நடக்க ஆரம்பித்தான்...

“அஞ்சனாவை நம்பினோர் கைவிடப் படார்...”, என்று கஜினி அசின் ஸ்டைலில் ஆரம்பித்து...

“our project Corner stone is based on cloud storage right?”

இவள் கேட்டதும்... சட்டென்று வியந்து நோக்கினான் இவளை... அவள் ஆங்கில உச்சரிப்பும், அவள் குரலில் குழைத்து அதை சொன்ன விதமும்...

“ஹப்பா.. ரெண்டு முக்கிய வார்த்தையை படிச்சிட்ட!!”, இவனையும் வாய் திறந்து பாராட்ட வைத்தது.

அது அவளுக்கு உத்வேகத்தை கொடுக்க... இன்னும் தன் செவி செல்வம் சோம்பாமல் பதிந்து வைத்ததை அவனிடம் சொன்னாள்..

‘நான் நினைச்ச மாதிரி ஆடிட்டரி லேனர்’, மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்

அந்த ப்ராஜெக்ட் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், பழம் தின்று கொட்டை போட்டவள் போல சமாளிப்பாக அவள் பேசும் ஸ்டைலிலும் அசந்து தான் போனான்.

‘கிளையன்ட்கிட்ட படம் போடுறதுக்கு கண்டிப்பா யூஸ் ஆவா’, அவளுக்கு ஏற்ற பொறுப்பை தீர்மானித்தவன்...

“நாளையில் இருந்து கேம் டையத்தை குறைச்சிட்டு, நம்ம டேட்டா  டீம்மோட கிளையன்ட் கால்ஸ்ல கலந்துகிட்டு அவங்க பேசுறதை அப்சர்வ் பண்ணு!”, என்று சொல்ல...

அஞ்சனாவோ..

“ப்ச்.. எல்லாரும் மானிட்டரையே முறைச்சுகிட்டு ப்ரோக்ராம் பண்ணும் பொழுது, நான் மட்டும்  கேம் விளையாண்டதே ஒரு மாதிரி கில்டியா இருந்தது தெரியுமா???” என்று சொல்ல...

கடுப்பாகி போனவன் முறைக்க... அதை தூசி போல தட்டி விட்டவள்...

“இப்போ என்னன்னா வாய் பார்க்க சொல்றீங்க... எப்போடா ப்ரோக்ராம் டைப் பண்ணுவோம்ன்னு கை துறுதுறுன்னு இருக்கு!”

‘காலையில் கேம் விளையாடுவேன்னு சொல்லிட்டு இப்போ அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டு பேசுறாளே... இவ பேசுறதை கேட்டாலே தலை சுத்துதே..’

என்று இவன் எண்ணிய படியே பார்ட்டி நடந்த இடத்திற்கு  வந்து சேர்ந்தான் அவளுடன்..

மொத்த அலுவலகமும் அந்த பெரிய ஹாலில் திரண்டு இருக்க, நிகழ்ச்சியும்  ஆரம்பமாகி இருந்தது.

அந்த சமயம் “காஞ்சனா”, அழைத்து கொண்டு அவர்களை நெருங்கினான் அவர்கள் டீம்மில் இருக்கும் சுக்கு@சுகுமார். அவன் தான் அந்த நிகழ்ச்சியை  நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தான்..

அவன் அழைப்பில் இருவரும் அவனைப் பார்க்க...

“ஹே... இவன்ட்ஸ் கம்மியா இருக்கு.. நீங்க ஒரு பாட்டு பாடுறீங்களா?“, அவன் அஞ்சனாவிடம் கேட்க....

சம்மதமாக தலையசைத்து, “பாடலாமே..”, என்று தோளை குலுக்கியவள்

“no big deal! this is no big deal!!”, என்று பாட்டாகவே பாடி விட...

“ஹே... கேட்டி பெர்ரியை விட்டுட்டு தமிழ் பாட்டா பாடு”, என்று  ஆர்யமன் ஆலோசனை சொல்ல, அதை சுகுமாரும் ஆமோதிக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.