(Reading time: 26 - 51 minutes)

வன் வந்து சொன்னானா? நீதான் என் உலகம்... என் காதல்.. கத்தரிக்காய்... இப்படி ஏதாவது சொன்னானா? பிரப்போஸ் செய்தானா? இல்லைல? அவன் முன்னாள் காதல்.. இன்னாள் காதல்...இந்த யாழினிக்கும் அவனுக்குமான தொடர்பு... அவள் வந்து கட்டிபிடிச்சதுக்கு விளக்கம்?? இப்படி எதுவுமே சொல்லலை? ஆனா நான் மட்டும் அவனே உலகம்னு உருகி உருகி காதலிக்கனும்... வேட்கமேயில்லாத இந்த மனசுக்கு இது எதுவுமே புரியாது...அவன் காலடியில விழனுமா உனக்கு அதுவும் நான்... நான் பூங்குழலீ..அதுவும் அவன் காலில்.. நேவர்... இட் வில் நேவர் ஹாப்பன்!

இந்த மன போராட்டத்தில் தான் என்னை விட்டுடூங்க' என்று கதறினாள் குழலீ. அவன் மனம் புண்பட்டு வெளியே செல்வதை பார்த்த குழலீயின் மனம் பொறுக்கவில்லை! கொஞ்ச நேரம் அமைத்தியாய் கண்ணீர் சிந்தியவள் மனதில் நினைத்துக்கொண்டாள்..'என்ன ஆனாலும் அவன்கிட்ட ஒப்பனா பேசிட வேண்டியதுதான்..ஐ காண்ட் ஹேண்டில் திஸ் எனி மோர்! சீக்கிரமா பேசறேன்... இங்க இருந்து போறதுக்குள்ள பேசறேன்!'. ஆனால் அதுதான் அவளால் முடியாமல் போனது.

ரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்து வெற்றி யாழினியின் நியூயார்க் அப்பார்ட்மண்டுக்கு அழைத்து சென்றது பிரபு தான். உடனிருந்து அனைத்தும் செய்ததும் அவன் தான். ஆனால் தனியாக இல்லை. டேவிட், டீனா மற்றும் அவள் ஜிஜூ ஆர்யனும் உடனிருந்தனர். பிரபுவும் இவளிடமாக தனியாய் எதுவும் பேசவில்லை. பார்த்து பார்த்து அவளுக்காக பிரபு செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவள் மனம் உருகிகொண்டேயிருந்தது!

அன்றுடன் பிரபு நியூயார்க் வந்து மூன்று வாரங்கள் முடிந்திருந்தன. குழலீயின் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவளை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டான் கணவன். வேளை தவறாது உண்ண உணவும் மருந்துகளையும் தன் கையாலேயே கொடுத்துக்கொண்டிருந்தான்.. ஆனால் தனியே பேச வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை! யாராவது ஒருத்தர் கூடவே இருந்தார்கள். அன்று ரிலாகஸ்டாக கட்டிலில் அமர்ந்து இடது கையில் புத்தகத்துடன் எதுவுமே ஓடாத வெற்று டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள். கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தது ஆர்யன். அவனை தொடர்ந்து டேவிட் மற்றும் சில யூஸ் நண்பர்கள். கண்கள் தானாய் தேடியது தன்னவனை!

உற்சாகமற்ற ஒரு சோக புன்னகையை அவர்களுக்கு உதிர்த்தவள் அவர்களை அமரும் படி கூறிவிட்டு தன் மொபைல் போனை தேடினாள்.

என்ன தேடற?' என்றான் டேவிட்.

யேஸ்... வாட் வேர் யூ டூயிங்... வாட் டூ யு வாண்ட் நௌ? என்றது ஆர்யன்.

நத்திங் ஜிஜூ... சும்மா ஒன்லி... தேவ் அண்ணா என் மொபைல் எங்க??

எதுக்கு இப்போ மொபைல்? 

இல்ல உங்க எல்லாருக்கும் குடிக்க ஜூஸ் கொடுக்கனும்...

இதோ... நான் எடுத்துட்டு வந்துட்டேன் மா மகாராணி..' என்றபடி வந்தது டீனா.

என்ன ஜிஜூ ஏதாவது அர்ஜண்டா?

யேஸ் குழல்... வீ ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்... ஏ டிசிஷ்ன் ஹஸ் டூ பீ மேட் இம்மிடியட்லீ...வீ ஆர் நௌ ஹியர் டு டிஸ்கஸ் அபோட் தி நேக்சட் ஸ்டேப்ஸ்.. வில் கால் மிஸ்டர் பிரபு டூ தி மீட்டிங்...

ஒன் மினிட்...ஐ வில் கால் ஹிம்..' என்று டேவிட் கால் அடிக்க அதே அறையில் இருந்து எங்கோ பாட்டு சத்தம் ஒலித்தது... அது பிரபுவின் மொபைல் தான் என்று தெரிந்துவிட்டது. 

டேவிட் மற்றும் டீனாவின் குற்றம் சாட்டும் பார்வை குழலியை துளைக்க..அந்த பாடலை கேட்ட குழலிக்கோ 'இவனை என்ன செய்தால் தகும்??? மவனே நீ என் கையில் சிக்காம போக மாட்டடா... பாவம் போனா போகுதுனு பார்த்தா ஓவராதான் பண்ணறான்...உனக்கு இதுக்கு தண்டனை கொடுக்காம என்கிட்டயிருந்து உனக்கு விடுதலை கிடையாது!!'

இட் இஸ் அ நைஸ் சாங்க்! ஆர்த்தி அல்சோ லைக்ஸ் திஸ் ஒன்... யூ டூ லவ் திஸ் ஒன் ரைட்??' என்று நேரம் காலம் தெரியாமல் ஆர்யனும் பேசி வைக்க 'ஐய்யோ!! இவர் வேற...' என்று இருந்தது குழலீக்கு.

மீண்டும் அந்த பாடல் அந்த மொபைலில் ஒலிக்க அதன் திரையை பார்த்த டேவிட்.. 'வெற்றி தான் கூப்பிடுறான்..' என்று அழைப்பை ஏற்றான்.

சொல்லு வெற்றி..

..

ஓ... சரி.. ஒகே.. சீக்கிரம் வர சொல்லு...அவருக்கு தான் வெயிடிங்.. பார்க்கலாம்.. பை!' என்று இணைப்பை துண்டித்துவிட்டான்.

அடுத்த இருபது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் பிரபு.

சாரி கைஸ்... வெற்றியை ஏர்போர்ட்டில் விட்டுட்டு வந்தேன்... மொபைலை இங்கேயே வெச்சிட்டு போய்டேன்.... எனிதிங் ப்ராப்லம்???

ஆங்ங்...டேய் லூசு... நீ வெச்சிருக்க ரிங்க் டோன் தான் ப்ராப்லம்...ஏண்டா? இப்படி என் மானத்தை வாங்கற??

நத்திங்க் பிரபு... நீங்க ரிவ்ரஷ் ஆயிட்டு வாங்க...நாங்க வெயிட் பண்ணறோம்.. வீ ஹாவ் மீட்டிங்க் ரைட் நௌ ஹியர்..' என்றான் டேவிட்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.