(Reading time: 26 - 51 minutes)

ய்... கை.. கால் எல்லாம் சரியாகட்டும்டீ... அப்புறம் மற்றது எல்லாம் பார்த்துக்கலாம்...ஓகேவா??' என்று அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிய முகம் சிவக்க சரி என்று தலையாட்டிய படி தன் கணவன் மார்பில் ஆழ புதைந்து கொண்டாள்.. ஏதோ தனக்கே சொந்தமான கூட்டிற்குள் அடங்கிவிட்ட ஆனந்தம் அவளுள்.

மறுநாள் காலை இவர்களை சமாதானம் செய்ய வந்த மலர் செந்தில், ஷாஜித்தா ராமசந்திரன் என்று எல்லோரும் பூங்குழலீ பிரபுவின் காதல் லீலைகளை பார்த்து வாயடைத்து நின்றனர்.

அடுத்த வாரம் வந்த ஐஏஸ் தேர்வு முடிவுகள் சரியாய் அவள் பிறந்த நாள் அன்று வந்து இரட்டிப்பு மகிழ்ச்சி... பூங்குழலீ தேசிய அளவில் ஐந்தாவது இடத்தியும் மாநில அளவில இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தாள். இதனை கொண்டாட ஒரு நாள் முழுவதும் அவர்கள் அறைக்குள்ளேயே அடைப்பட்டு ஒருவரை ஒருவர் கொஞ்சி மகிழ்ந்தனர்! ஒருவாரம் மனாலி சென்று வந்தனர் செலிப்ரேஷன் என்ற பெயரில் ஹனிமூன்!!! 

அதற்கு அடுத்தவாரம் பூங்குழலீ பிரபு கிருஷ்ணா சஹிதமாய் வெற்றி யாழினி திருமணத்திற்கு சென்று வந்தனர்!

 

6 மாதம் கழித்து...

குழலீ டேராடூனில் ஒன்றரை வருட பயிற்சிக்கு சென்றிருந்தாள். பிரபுவின் திரைப்படம் வெளி வந்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருந்தது. ஸ்டார்ட் அப்பும் தொடங்கிவிட்டனர். டீனாவும் யாழினியும் தங்கள் வாரிசுகளை சுமந்துதிருந்தனர். கீதா ராஜ்குமார் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது.. கயல்விழி என்று பெயர்!

 

3 வருடத்திற்கு பின்...

பிரபு பூங்குழலீ தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை... தமிழிசை! 

 

8வது வருடம்..

பிரபுவின் கனவில் வந்தது போல் அவர்கள் அடுத்த குழந்தையை தங்கள் டிவின்சை எகஸ்பக்ட் செய்துகொண்டிருந்தார்கள்... கிருஷ்ணா..தமிழிசைக்கு அடுத்து ஒரு குழ்ந்தையை தத்து எடுத்து நிலவினி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். தன் காதல் கணவனின் ஆசையை நிறைவேற்ற இதோ இன்னும் ஒரு இன்னிங்கஸ்.. ஆபத்து எதுவும் இல்லாமல்! அவர்களின் ஸ்டார்ட் அப் நல்ல நிலைமைக்கு முன்னேறி பெரிய கம்பேனியாக உருவேடுத்து இருந்தது.. பூங்குழலீயும் சென்னை மாவட்ட கலேக்டராய் சிறப்பாக பணியாற்றி வந்தாள்.

பிரபுவும் பூங்குழலியும் ஒருவருக்கு ஒருவர் உயிர்சக்தியாய் மாறியிருந்தனர். பிரபுவின் உயிர்சக்தியாய் பூங்குழலீயும்...அவளின் உயிர்சக்தியாய் அவனும்!!!

----அவர்கள் வாழ்க்கை பயணத்தை தொடரட்டும்... நாம் விடை பெறுவோம்!-----

முற்றும்

இதுவரை இந்த சீரீஸ்க்கு ஸப்போர்ட் செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்! உங்கள் அனைவரின் அதரவினால் தான் என்னால் என் உயிர்சக்தியை வெற்றிகரமாய் முடிக்க முடிந்தது! Thanks to all the well wishers and friends!!

Episode # 24

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.