(Reading time: 26 - 51 minutes)

பாட்டு பாட தெரிஞ்சா பாடனும்... லிரிக்ஸ் மொத்தமும் தப்பு... அதுவும் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு.. இனி இப்படி தப்பா பாடாத பிகே...எனக்கு கெட்ட கோவம் வந்திடும் ஜாக்கிறதை! அப்புறம்.. என்னை டார்கேட் செய்துதான் அந்த பாட்டை ரிங்க் டோனாய் வெச்சிருக்கனு தெரியும்.. தேவும் டீனாவும் என்னை குற்றவாளி போல பாக்கறாங்க..பாட்டு மூலமா அவங்களுக்கு நியூஸ் தரியா... கவலைப்படாத பிகே நானே சொல்லிடுறேன்' என்றாள் ரவுடி போல மிரட்டும் தோணியில்!

சரிங்க மேடம்...தங்கள் சித்தம் என் பாக்கியம்! அப்புறம்.. என்ன சொன்னீங்க.. 'லிரிக்ஸ் மொத்தமும் தப்பு... '? அட புத்திசாலி பொண்டாட்டியே...இது என்னோட லிரிக்ஸ்.. இன்ஸ்டண்ட் லிரிக்ஸ்..அதுவும் என்னுடைய இந்த லூசு...எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்கற... எல்லாத்தையும் தப்பாவே யோசிக்கற என்னுடைய இந்த அதிபுத்திசாலிக்காக! இன்ஸ்டண்டா ' என்று அவள் தலையில் தட்டியவாறு கூறிவிட்டு இடையோடு கை கொடுத்து தூக்கிச்சென்று கட்டிலில் அமர வைத்தான். 

அப்படியே இருங்க மேடம்... சாகசம் எதுவும் செய்ய வேண்டாம்... அப்படியே என்னை அடிக்கனும்னு நினைச்சா.. இன்னும் அறுபது.. எழுபது வருஷம் இருக்கு... வாழ்நாள் முழுக்க அடிவாங்க நான் தயார்... அடிக்க நீங்க தயாரா??

ஆங்ங்....

சொல்லுடீ?? அடிக்க நீ தயாரா??

ஆங்ங்....

என்னடீ முழிக்கற?? என் சக்தீதீதீ...!அடிவாங்க... அடிமையா இருக்க நான் ரெடி! என்னை அடிக்க நீ ரெடியா?? என் மகாராணி! இந்த பெண் சிங்கத்திடம் அடியேன் சரணாகதி!

ஸ்டாப் இட் பிரபு! என்ன உளருறீங்க??

ரெடியா குழலீ...' என்றபடி அவர்கள் பேச்சுக்கு அப்போதைக்கு தடை விதித்தான் டேவிட். 'இதோ ரெடி தேவ்...' என்றபடி அவன் நகர.. அடுத்த ஐந்து நிமிடத்தில் மீட்டிங்க் தொடங்கியிருந்தது.

பிரபு, அருண்.. இருவரையும் அங்கிருந்த எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்து ஆர்யன்.

பிரபு அண்ட் அருண்.. இந்த கம்பெனியின் மிக முக்கியமான ஆட்கள் இவங்க எல்லோரும்...

என்னது...?' அப்படியா?? என்று ஒரு ஆச்சர்ய பார்வை வந்து போனது பிரபுவிடம்! அதை குழலீயும் ஆர்யனும் கவனிக்க தவறவில்லை... அவர்கள் வேலையே அதுதானே!!!

இங்க பாருங்க பிரபு அண்ட் அருண்... இந்த ஸ்டார்ட் அப் முழுக்க முழுக்க இந்தியாவுல அமைக்கப்படுற ஒரு விஷயம்... அதுக்கும் அமேரிக்காவுக்கும் இதோ இங்க இருக்கவங்களுக்கும் நிறைய...எல்லா சம்மந்தமும் இருக்கு! ஃபண்டிங்க் அதாவது இன்வஸ்மண்ட் இங்க அமேரிக்காவிலிருந்து தான் மேஜ்ரா வரப்போகுது... இந்தியாவிலிருந்தும் வரும்... பட் இது மேயின்.... வில்லியம்ஸ்...மார்க்ரட்...சாந்தனு... சுஷில்...விக்ரம்...வினோதா...ரன்வீந்தர் சிங்...தீபக்...அதோட இவர் டேவிட்...இவங்க எல்லோருமே நம்ம கம்பேனியின் வேன்சர் காப்பிட்டலிஸ்ட்! அண்ட் பார்ட்ன்ர்ஸ்! கிட்டத்தட்ட பத்து பேர் இப்போதைக்கு இன்புட்ஸ் கொடுக்க தயாரா இருக்காங்க! ஆனா எதுக்கு??

நம்ம வேன்சருக்குதான்! - என்றது அருண்!

என் கம்பேனி செயல்படுத்தபோற வேலைக்கு... பேசிஸ் அண்ட் ஸ்பிரிட் ஆப் த கம்பேனி...ஒரு விதை பல விருட்சமா வளர்ந்திடும்... அந்த தொலைநோக்கு பார்வை... இதோ இந்த ஸ்டார்ட்...கொயிங்க் டூ பீ ஏ செயின் ரியாக்ஷன்...நியூக்லியர் பிஷ்ஷன்...! லேசர் எவ்வக்ட்..! கிவிங் பேக் டு சோசைட்டி! அதன் ஆணி வேராய் இருக்கும் ஐடியா அண்ட் கிரியேரிவிட்டி! என்றான் பிரபு.

குழலீயின் கண்களில் ஒரு மின்னல்.. ஆனந்தம்.. வியப்பு...என்னவன் என்ற சிறு கர்வம்...என்று எல்லாம் தோன்றி மறைந்தது. ஆர்யனோ குழலீயை பார்த்து 'பார்த்தியா?? எப்படி...என் தேர்வு!' என்ற ஒரு மேச்சுதல்!

இரண்டு பேர் சொன்னதும் சரிதான்.... ஆனால் இதுக்கேல்லாம் ஆணிவேர்.. அந்த ஸ்பார்க்! அந்த ஐடியா அண்ட் கிரியேடிவிட்டி... வந்தது ஒரு இடத்திலிருந்து! உங்க இருவருக்கும் அசைன் செய்யப்பட்ட முதற்கட்ட வேலைகள்...அது அவங்களே முன்னே இறங்கி செய்யனும் நினைத்த முதற்கட்ட வேலைகள்...ஆனால் சூழ் நிலை செய்ய முடியல! அவங்களுக்கு வந்த ரா ஐடியாசை நானும் என் மனைவியும் அவங்களும் சேர்ந்து ஒரு ப்ராஸஸ்ட் ஐடியாவா மாற்றினோம். இங்க இருக்க எல்லாருக்கும் அவங்களை தெரியும்... அவங்க ஐடியாசை கேட்டு...அதுக்கு ஒரு ஸ்டரக்சர் கொடுக்குனும்... அதன் பலன் முடிஞ்ச வரைக்கும் போய் சேரனும்னு இவங்க எல்லாம் துணையா நிக்கறாங்க... ஒரே காரணம் இவர்கள் எல்லோரும் அவங்களுடைய அன்புல... நேசத்துல... பாச மழையில...

ஜிஜீ... ப்ளீஸ்! என்ற குழலீயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அந்த வார்த்தைகளை!.

அவங்க சொல்லாமல் செய்த உதவியில... தோழமையில... அவங்களுடனான நட்பிற்காக...எங்களின் பூங்குழலீக்காக!

வாட்?!!! குழலீ... நீயா??!!! என்று வியந்தது அருண். பிரபுவிடமிருந்து என்ன ரியாக்ஷன் வந்தது??? அவனைதான் ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டிருந்தாள்..அவனின் எல்லா உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.. 'வியப்பா? அதிர்ச்சியா? என்னடா நினைக்கற??' என்று யோசித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.