(Reading time: 26 - 51 minutes)

யேஸ்... குழலீயேதான்! ஷி யிஸ் த கிரியேடிவ் ஹேட் ஆஃப் த ஸ்டார்ட் அப்! அருண் உங்களை சேலக்ட் செய்தது குழலீ.. பிரபுவை சேலக்ட் செய்தது நான்! இப்போ உங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ரெண்டுமே குழலீயே செய்ய இருந்தது! இப்போ இந்த டாஸ்க் வர்க் வைத்து தான் அங்கே கம்பேனியின் லீடிங்க் பொறுப்பை முடிவு செய்ய போறோம்! இதோ உங்களை ஸ்டடி செய்து ப்ரிபேர் செய்த ரிப்போர்ட்...அண்ட் நீங்கள் ப்ரிபேர் செய்த கரவுண்ட் வர்க் அண்ட் ரிப்போர்ட்! இதைதான் இப்போ டிஸ்கஸ் செய்ய போறோம்.. அண்ட் நோ அவ்வன்ஸ் ப்ளீஸ்! இது முழுக்க முழுக்க குழலீயினுடைய அவுட்புட்! நௌ குழலீ வில் டேக் ஓவர் த மீட்டிங்க்..

எஸ் யூ ஆல் நோ... திஸ் ஸ்டார்ட் அப் இஸ் ஃபார் த ஸ்டார்ட் அப்! படிச்சு முடிச்சிட்டு நிறைய கனவுகளோட இருக்கறவங்க... புதுசா ஏதாவது செய்யனும்னு நினைக்கறவங்க... இவங்ககிட்டயேல்லாம் வேலை செய்து என்னுடைய கிரியேட்டிவிட்டியை இழக்க கூடாதுனு நினைக்கறவங்க.. இப்படி நிறைய பேர் போறதுக்கு வழி தெரியாம... அடுத்த அடி எடுத்து வைக்க முடியாம... இன்வேஸ்ட்மண்ட் இல்லாம.. வழிக்காட்டுதல் யாருனு புரியாம... சப்போர்ட் இல்லாம... இப்படி பல ஆமைகளை சுமந்துகிட்டு சாத்திக்க... வாழ்வாதாரத்தை உயர்த்திட வழித்தேடி வாழ்ந்துட்டு இருக்காங்க! இந்த ஆமைகளை அவர்களைவிட்டு கொஞ்சமாவது களையனும்றது ஐடியா! 

....

இன்கியூபேட்டர்ஸ்! இன்வேஸ்டர்ஸ்! ஐடியாலஜி டேவலப்பர்ஸ்! இப்படி பல பரிமாணங்களை கொண்ட ஸ்டார்ட் அப் தான் இது! யார் யாருக்கு என்ன என்ன உதவிகள் வேண்டுமோ அதை எல்லாம் முடிந்தவரைக்கும் கொடுக்க போறோம்! For profit! அதுவும் பேஸ்ட் அன் சர்வீஸ் வீ ப்ரோவைட்..அட் த மினிமல் காஸ்ட்!

இதுக்கு நிறைய கரவுண்ட் வர்க் தேவை... சோசைட்டிய... அதிலிருக்கும் பார்ட்டன்... ஐடியாஸ் இருக்க மக்களை மீட் செய்வது.. பிஸ்னஸ் டேவலப்மண்ட் செய்யனும்...மல்ட்டி சப்ஜக்ட்... மல்ட்டி இண்டஸ்ரியல் நாலேட்ஜ் வேணும்! மேனேஜ்மண்ட் ஸ்கில்ஸ் தேவை...இதையும் தாண்டி டெக்னாலஜி நாலேட்ஜ்.. மார்க்கடிங்க் நாலேட்ஜ்... ஃபினான்ஷில் நாலேட்ஜ்... அதோட மேனேஜ்மண்ட்.. இப்படி நிறைய அத்தியாவசிய தேவைகளும் இருக்கு! இதுவரைக்கும் உங்க ரெண்டு பேரையும் ஸ்டடி செய்ததுல... நான் சொன்ன முதல் பகுதிக்கு பிரபுவும்... ரெண்டாவது பகுதிக்கு பிரபுவும் ஸூட் ஆகறாங்க...ஆனா ரிவியூ செய்றது குழலீ அண்ட் இன்வேஸ்மண்ட் பார்ட்னர்ஸோட முடிவு! 

.....

அதோட இப்போ இருக்கற இன்னும் ஒரு சிக்கல் என்னனா... குழலீயோட் ரிசல்ட்ஸ் அடுத்த மாசம் வந்திடும்... அதுக்குள்ள ஸ்டார்ட் அப் அவங்க பேருல ரிஜிஸ்டர் செய்தா.. அவங்களோட பதவிக்கே ஆபத்து வந்திடும்! சோ இப்போ ரிஜிஸ்டேர்ஷ்ன் ப்ராசஸ் எப்படி செய்யறதுநு ஒரு சிக்கல் இருக்கு! அதையும் டிஸ்கஸ் செய்யனும்! இன்னும் சில விஷயங்கள் இருக்கு.. அதையும் டிஸ்கஸ் செய்யனும்! அதுக்கு தான் நாம் இங்க வந்ததே...ஆனா அதுக்குள்ள நம்ம தலைவி ஆக்சிடண்ட்னு அடிப்பட்டு படுத்துட்டாங்க! 

ஓகே கைய்ஸ்! லேட்ஸ் கம் டூ த பாயிண்ட்! அதர் டாக்ஸ் அப்பார்ட்...' என்று பேச தொடங்கினாள் பூங்குழலீ. அப்படியே மூன்று மணி நேரமும் கடந்திருந்தது! பிரேக் என்று டீனா அவர்களுக்கு உண்ண உணவு கொண்டு வந்து கொடுத்தாள்.

எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்க குழலீ மட்டும் தட்டை வைத்து வெறிக்க வெறிக்க பார்த்திருந்தாள்! எப்படி சாப்பிடுவது??? இடது கையால் ஸ்பூனை வைத்து முயன்றுகொண்டிருந்தாள்..

அதை பார்த்திருந்த பிரபு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்தான்.. கோப பார்வையா அது? அவன் விழிகள் என்கிட்ட சொல்லலியே என்றதா?? அவள் தட்டை வாங்கி உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட தொடங்கினான். ஒரு வாய் வைத்த உடனே..சாரிங்க... சத்தியமா சொல்ல வேணாம்னு நினைக்கல...சாரி...என்னை...மன்..' என்று முடிக்கும் முன்னே..

உன் சாரி எனக்கு வேணாம்... இப்போ அமைதியா சாப்பிடுடீ... உனக்கும் பசிக்குது... பாரு எனக்கும் பசிக்குது...மேடமுக்கு டைம் இருந்தா அப்புறமா இதை பத்தி பேசலாம்!'. அதற்குள் அவள் கண்களில் நீர் திரண்டுவிட்டது! அது வெளியில் வராதபடி கண்களை சிமிட்டி மறைத்துக்கொண்டாள்.

அவன் ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவள் பிரபு உண்டு முடிக்கும் வரையில் காத்திருந்தாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் மீட்டிங் மீண்டும் தொடங்கியது. பேசியது பெரும்பாலும் குழலீதான். என்ன என்ன செய்ய வேண்டும்... அடுத்து செயல்படுத்த இருக்கும் திட்டங்கள்... எதிர்கால திட்டங்கள்.. இன்னும் யாரை சந்திக்க வேண்டும்... இதுவரைக்கும் செய்த வேலைகளின் ரிவ்யூ... ஸ்டார்ட் அப் சேட் அப்... பணி ஆட்கள் தேர்வு.. இப்படி பல விஷயங்களை விவாதித்தனர். 

இரவு உணவை முடித்துக்கொண்டு எல்லோரும் கிளம்பியவுடன் டீனாவும் குழலீயும் பேசிக்கொண்டிருந்தனர். டேவிட் அண்ட் பிரபு அப்போது தான் வாக் சென்று திரும்பியிருந்தனர்.

ரொம்ப டையர்டா இருக்கு டீனா... நான் படுக்க போறேன்..' நீ இப்போ எழுந்து வரியா இல்லையா?? என்பது போல் பார்த்தான் டேவிட். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.