(Reading time: 23 - 46 minutes)

ருக்கு போயிட்டு திரும்புறவங்க ஹோம் சிக் ஆகி அவங்க அழுகுறது... வீட்டை பத்தியே பேசுறது எல்லாம் தான் என்னை ஏங்க வைக்கும். ஹாஸ்டல்ல என்னோட ஃப்ரண்ட்ஸ் பேச்சு குடும்பத்தை சுத்தியே இருக்கும்.

அந்த வயசுல என் கூட படிச்ச பசங்களுக்கும் பேச்சு வாக்கில் பக்கவமில்லாம விடுற சின்ன சின்ன வார்த்தை கூட மனசை தைக்கும்....

‘பாவம்டா உனக்கு யாருமே இல்லை’, அப்படின்னு பாவம் பார்த்தாலும் கஷ்ட படும்..

‘உனக்கு என்னடா தெரியும்? உனக்கு தான் யாருமே இல்லையே’, அப்படின்னு  குத்தலான பேச்சுக்கும் கஷ்டப் படும்...

அந்த உளைச்சலே.... பேசாம அன்பு இல்லத்துக்கே திரும்பி வந்திடலாமான்னு கூடத் தோணும்!

“எத்தனை கஷ்டம் வந்தாலும் கிடைச்ச வாய்ப்பை அதை விடாம பிடிச்சு வாழ்க்கையிலே முன்னேறணும்! அது தான் எங்களுக்கு நீ கொடுக்கிற சந்தோஷம்!”, அப்பா என்னை இங்க விடும் போது சொன்னதை மனசுல வந்து நிக்கும்..

என்னை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், யார் கூடவும் ஒட்ட முடியாதது போல இருக்கிறப்போ.... தனியா போயிடுவேன்.. அப்படி தனியா இருக்கிறப்போ.. தனிமை போக்கிற விஷயம்ன்னா.. படிப்புக்கு அடுத்த படியா  நித்யாவோட லெட்டர்ஸ்!!!!

வாரா வாரம் சரியா சனிக்கிழமை அவ லெட்டர் வந்திடும். என்னமோ நான் படுற கஷ்டமெல்லாம் பக்கத்தில் இருந்து பார்க்கிற மாதிரி எழுதுவாடா அவ! அவ ஒவ்வொரு எழுத்திலையும்  இருக்கிற அக்கறை....  எனக்கு அன்பை பொழிய... பாசத்தைக் காட்ட ஒருத்தி இருக்கான்னு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? அதெல்லாம் அழியா பொக்கிஷம்!!!

ஆனா, அந்த நவம்பர் பதினாறு மட்டும் வந்திருக்காம இருந்தா..... அந்த நாளில், “ஆரி நீ மட்டும் அன்பு இல்லத்தில் இருந்திருந்தா.... நான் போகணும்ன்னு நினைச்சிருக்க மாட்டேன் தெரியுமா?”, அப்படின்னு எழுதாம இருந்திருந்தா... நித்தி என்னை இவ்வளோ பாதித்து இருக்க மாட்டாளோ... தெரியலை!!!

அந்த லெட்டரை படிச்சப்போ...அவ பிரிவை நினைச்சு கவலைப் படத் தோணலை! என் சுத்தி உள்ளவங்களைப் போல அவளுக்கும் ஒரு குடும்பம் கிடைச்சுடுச்சே மனசுக்கு நிறைவா இருந்தது!

அதுனாலயோ என்னவோ.. அவளை தத்து கொடுத்த பின்.. அவ லெட்டர்ஸ் வராதது என்னை பெரிசா பாதிக்கலை.. அவளோட நினைவு வர்றப்போ பழைய லெட்டர்ஸ்சை எடுத்து படிச்சுக்குவேன்...

இப்படியே போயிட்டு இருந்தப்போ... ஒரு நாள் ராத்திரி ஹாஸ்ட்டல் மெஸ்ல நியூஸ் பார்த்துக்கிட்டே சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ... டிவியில் பெரிசா நித்யா வோட படம்..  மக்கிய உடல் பாகங்களை  மீட்கபட்டதுங்கிற நியூஸ்சை சொல்லிக்கிட்டு இருக்கிறப்போவே....

அது வேற யாரோ.... நித்யாவா இருக்காது.. நம்பவே முடியலை.. என் நித்யா எவ்வளோ நல்லவோ.. அவளுக்கு அப்படி எதுவும் நடந்திருக்கவே கூடாது என் மனசு துடித்தது.. 

ஆனா, அது நியூஸ் உண்மை தான்ங்கிறது போல.. நித்தியோட ஃபோட்டோ .. திரும்ப... திரும்ப ப்ளாஷ் ஆனது டி.வி.ல...

அதில் என் நித்தி மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ குழந்தைகள்.. எல்லாம் நம்மளை மாதிரி அனாதை குழந்தைங்க... இளம் பிஞ்சுகளை  கொடூரமா சாகடிக்க எப்படி மனசு வந்தது?

உண்மையிலே அந்த கொலைகாரங்கவளை விட கெட்டவங்க... தெரிஞ்சே நம்மளை இந்த உலகத்தில் அனாதையாகி விட்டுட்டு போன பெத்தவங்கன்னு தான் தோணுச்சு...

நித்தியோட இந்த துர் மரணம் கொடுத்த அதிர்ச்சி, கவலை... துயரம்  அழ கூட தோணலை அந்த சமயம்.. அப்படியே தோணினாலும்... இதை எல்லாம் யார்கிட்ட சொல்லி அழுவேன்? உரிமையா பழக.. தேற்ற.... எனக்குன்னு யாருமே பக்கத்தில இல்லையே!!!!

ஃபோன்லயாவது பேசலாம்னு எங்க வார்டன்கிட்ட பெர்மிஷன் வாங்கி இல்லத்துக்கு போன் பண்ணா... நித்தி விஷயம் கேட்டு சிவநேசன் அப்பாவையும் எழுந்தரிக்கவே முடியாம ஸ்ட்ரோக்ல தள்ளிடுச்சுன்னு தெரிஞ்சது...

நித்தியோட கவலையில் வாழ்க்கையைத்  தொலைத்து விடக் கூடாதுன்னு தான் அடுத்த கவலை வந்ததோ என்னவோ...

‘அப்பாவை இந்த நிலையில் வைச்சிட்டு கமலாம்மா அன்பு இல்லத்தை எப்படி நடத்த முடியும்? காசுக்கு என்ன செய்வாங்க?’, அப்படின்னு புலம்ப ஆரம்பிச்சிட்டேன்...

அப்போ தான் என்னோட பெட் ப்ராஜெக்ட்க்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைச்சு அமெரிக்காவிற்கு கூப்பிட்டு இருந்தாங்க....

என்னாலே வரமுடியாது... அங்க வந்து போறதுக்கான காசை நான் வளர்ந்த  அன்பு இல்லத்துக்கு கொடுக்கலாமேன்னு அவங்களுக்கு நான் எழுதின லெட்டர்.... ஒரு கர்டசியை உண்டு பண்ண... இல்லத்தோட தேவைகளையும் ஈடு கட்டுற மாதிரி பெரிய க்ரான்ட் கிடைச்சது இதெல்லாம் உனக்கே தெரியும்..

நாம அனாதைங்கிற விஷயத்தை வெளிப்படுத்த போய் தான் அன்பு இல்லத்திற்கு அந்த நேரம் உதவி கிடைச்சது - என் பிரச்சனையை பாசிடிவ்வா பார்க்க வைச்சது... என்னை சுத்தி உள்ள கூட்டத்தோட ஒட்டி உறவாட  முடியலைன்னாலும்.. அனாதைன்னு ஒதுங்கி போகக் கூடாதுன்னு பக்குவப் பட ஆரம்பிச்சேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.