(Reading time: 23 - 46 minutes)

கையில் இருந்த மணியை அடித்த படி தன் இஷ்ட தெய்வத்திற்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தாள் அஞ்சனா...

‘பெல்லி பாய்!!!!!!!!!’

‘நீ கைட் செய்து தானே என் ஆளை செலக்ட் பண்ணேன்... ப்ச்.. ஒன் டேலே நான் எவ்வளோ ஏங்கி போயிட்டேன் தெரியுமா?’

‘இங்க பாரு பெல்லி பாய்! உனக்கு ஒரு மாசம் தான் டைம் கொடுத்திருக்கேன்.. அதில் ஒரு நாள் முடிஞ்சு போச்சு! இன்னும் இருபத்தி ஒன்பது நாள் தான் இருக்கு! அதுக்குள்ள காட்டிடு ப்ளீஸ்! உனக்கு பூச்சட்டி எடுக்கணுமா.. பூக்குழி இறங்கணுமா எது வேணாலும் அஞ்சு செய்ய ரெடி’

“பரணிதரன் - பரணி நட்சத்திரம், மேஷ ராசியை என்கிட்ட வந்து சேர்த்துடு பெல்லி பாய்!!!”

என்று வேண்டி விட்டு... தீபாராதனைத் தட்டை வைத்து..

அதைத் தொட்டு கண்களில் ஒற்றியவளுக்கு  கோயிலில் பார்த்த அவன் உருவம் மனதில் வர..

கூடவே அவன் வைத்து சென்ற திரு நீறு குங்குமத்தை பத்திரப் படுத்தியதும் நினைவுக்கு வர...

தனது கைப்பையைத் தேடினாள்.

“பாவா.. என் ஹேன்ட் பேக் பார்த்தீங்களா?”, கேட்டுக் கொண்டே வர... 

அப்பொழுது தான் கவனித்தாள் சைலஜாவும் பவதாரிணியும் சமையலறையில் நின்று பேசிக் கொண்டிருப்பதை...

அஞ்சனாவின் குரல் கேட்டு... இருவர் கவனமும் அஞ்சனா மீது செல்ல...

“ஆபிஸ்ல இருந்து வந்ததும்... எங்கயாவது வீசி எறிஞ்சிட்டு கரக்டா ஆபிஸ் கிளம்புறப்போ தான் தேடு! சைட் டேபிள்ல வைச்சிருக்கேன் பாரு!”, என்று அவளுக்கு பதில் கொடுத்த பவதாரிணி சைலஜாவிடம் தன் புலம்பலைத் தொடர்ந்தார்..

“எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கிற பழக்கமே இல்லை! இப்படி பொறுப்பே இல்லாம இருக்கிறவளை விட்டுட்டு ஊரில் போய் நிம்மதியா இருக்க முடியுமா?”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

தனது கைப்பையை எடுத்தவளுக்கு பவதாரிணியின் புலம்பல் காதில் விழ.. சமையலறைக்குள் ஓடி வந்து பவதாரணி முன் நின்றவள்...

“ஒய் பாவா!!! அல்ரெடி பஜ்ஜியை மிஸ் பண்றேன்.. ஓவரா கொஞ்சினா  இந்த ஸ்வீட் பாவ்ஸ்சை மிஸ் பண்ணுவேனே!!!!”, என்ற பொழுதே பவதாரிணியின் முகம் மாறுவதைக் கண்டு...

“பாவ்ஸ் பாவா அன்ட் பஜ்ஜி பாஜி இந்த இரண்டு பேருக்கும் சேர்த்து ஒரு ‘பாவ் பஜ்ஜி’ சாப்பிட்டு டைஜெஸ்ட் பண்ணிடுறேன்.. நோ ஹார்ட் பீலிங்க்ஸ்!!! ஓகே!!!!”, என்று பவதாரிணியின் கன்னத்தைக் கிள்ள.. அவர் கதறுவதை கண்டு கொள்ளாது...

ஷைலஜாவிடம் திரும்பி...

“ஹேப்பி மார்னிங்!!!! சைலு ஆண்ட்டி!!!!!!”,

என்று சொல்லும் பொழுதே... பின்னணியில்...

“அதிகாலை சுபவேளை... ஒரு ஓலை வந்ததே”

என்று எப் ஃஎம்மில் ஒலித்துக் கொண்டிருப்பதை கவனித்தவள்...

“அதிகாலை.. சுபவேளை... ஒரு வேலை  வந்ததேன்னு... அங்கிள் காவல் துறையை கட்டிக் காப்பாத்த  போயிட்டாரா?”, என்று வழக்கம் போல உற்சாக காலை வணக்கத்தோடு தன் குறும்பான குறுக்கு விசாரணையைத் தொடுத்து வாயாட ஆரம்பித்தாள்..

பேச்சு பேச்சாக இருந்தாலும்.. மனமெல்லாம் பரணிதரனாக இருக்க... சமையல் மேடையில் ஏறி அமர்ந்து... அவன் கைப்பட்ட பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் முனைப்புடன்  தன் கைப்பை மடியில் கிடத்தி அதைத் திறக்க...

அப்பொழுது தான் சசி கொடுத்த செக் கண்ணில் பட்டது....

“ப்ச்... பாவா சசி செக் கொடுத்தான்னு சொன்னேன்ல எடுத்து வைக்க மறந்தே போயிட்டேன்....”, என்று  பவதாரணியிடம் சொல்லிக் கொண்டே...  அதை எடுக்கும் நோக்கில் பையைச் சரித்து....

எதையும் படக் படக்கென்று செய்யும் விரல்கள் வேகமாக அதை இழுக்க...

செக்கின் அடியில் இருந்த பிரசாதப் பாக்கெட்டும் கூடவே சேர்ந்து சரிந்து கொண்டு வெளியே வந்து... அது வந்த வேகத்திலே தரையில் கொட்ட...

அஞ்சனா உட்பட அனைவர் பார்வையும்... நொடியில் செந்தூரச் சிவப்பான தரையில் படிந்தது...

திடீரென்ற அந்த செயலில் முதலில் திடுக்கிட்ட அஞ்சு... பரணிதரனின் நினைவாக கொண்டு வந்த அந்த குங்குமம் தரையில் சிதறுவதைக் கண்டதும்..  கண்கள் தானாக கரிக்க...

அதே சமயம்... குங்குமம் தரையில் சிந்தி விட்டதே.. என்று எண்ணிய பவதாரிணியும் நெஞ்சமும்....... ‘கெட்டது எதுவும் நடந்து விடுமோ’... என்று பயத்தில் ஒரு கணம் படபடக்க...

சைலஜாவோ..

“அட... குங்குமம் சிந்தியாச்சா!!! கூடிய சீக்கிரம் அஞ்சுவுக்கு கல்யாணம் கூடப் போகுது பாரு!!!”, என்று சொல்ல..

அஞ்சனாவின் கண்களின் ஈரம் ஆவியாகி குதூகலாம் குடி கொண்டது - அதையும் தனக்கு சாதகமாக எடுத்த அஞ்சு என்னும் அந்த பேதைப் பெண் எண்ணிக் கொண்டாள் -

‘பரணியை சீக்கிரம் காட்டப் போறார் பெல்லி பாய்! அதற்கு பிறகு, பாவா ஊரெல்லாம் அஞ்சு செலக்ஷனை பத்தி பெருமை அடிக்கப் போறாங்க!!!’ என்று!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.