(Reading time: 23 - 46 minutes)

வள் எதிர்காலத்தை எண்ணியே வட்டமடிக்கும் பவதாரிணிக்குமே தன் தோழி சொன்னது சந்தோஷத்தைக் கொடுக்க... சைலஜாவைப் பார்த்து,

“கால காலத்தில் அது நடந்திடணும்.. எத்தனை நாள் தான் இவ ஆசைக்காக பிரிஞ்சு இருக்க!!!”, என்ற பொழுதே உள்ளுக்குள்.. பிரிவுக் கவலை மீண்டும் எழும்ப...

“தினமும் என் கழுத்தைக் கட்டிட்டு தூங்குறவ..... நைட் என்ன தான் செய்யப் போறாளோ.. ” என்று வருந்த ஆரம்பிக்க... அதற்கு சைலஜா,

“இதுக்கு தான் எங்க வீட்டிலே இருக்கட்டும்ன்னேன்.... நாங்கல்லாம் வந்தா போனா  தனி வீடு தான் சரியா வரும்ன்னு சொல்லிட்டே!”

“சரி அதைத் தான் கேட்கலை.. நீ பக்கத்தில் இல்லாதப்போ.. நான் வந்து கூட படுத்துக்கிறேன்னு சொல்றேன்ல.. அதையும் காதில் வாங்காம புலம்பிகிட்டே இருக்கிறே! உனக்கு அவ்வளவு தான் என் மேல நம்பிக்கையா?”

சற்றே பெரிய வார்த்தை தான் அது! ஆனால், ஷைலஜாவும் அவர் கணவரும்  அத்தனை உறுதியாய் சொன்ன பிறகு தான் அந்த வீட்டில் அஞ்சனாவை தங்க  வைக்க சொக்கர் ஒத்துக் கொண்டார்!

மீண்டும் அதை சொன்னால்!!! ஷைலஜாவை சந்தேகப்படுவது போல ஆகிடுமோ... என்று பதறியவராக மறுப்பாக தலையசைத்த பவதாரிணி,

“அப்படி இல்லை சைலு...”, என்று விளக்க வர... அவரைத் தடுத்த சைலஜா..

“நாங்க அப்பாக்கிட்ட நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கோம் பவா! அதை செய்றதுக்கு எங்களுக்கு கிடைச்ச ஒரு சின்ன வாய்ப்பா தான் இதை நினைக்கிறோம்! அஞ்சுவை பத்திரமா பார்த்துப்போம்! நீ நிம்மதியா கிளம்பு!”, என்று உறுதி அளிக்க... இவர்கள் உரையாடலை கவனித்த அஞ்சனா இடைபுகுந்து...

“ஏன் பாவா ஃபீலிங்க்ஸ்!!!! அஞ்சு புண்ணியத்தில் அங்கிள் விடுற  குறட்டையிலிருந்து தப்பிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு! ஆண்ட்டி மிஸ் பண்ணுவாங்களா என்ன???”, என்று சிரிப்புடன் பவதாரிணியிடம் கேட்க.. அவளின் சிரிப்பில் இணைந்தனர் பவதாரணியும், சைலஜாவும்..

லைபேசி சிணுங்கவும்...

‘நைட் எப்போ படுத்தானோ.. காலங்காத்தாலே போன் வருதே.... கட் பண்ணிடலாமா’, என்று யோசனையோடு வாசு நெருங்கும் முன்னே....

அந்த சத்தத்தில் ஆர்யமன் தூக்கம் களைந்து விழித்து விட்டான்...

‘ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ’, என்ற பதற்றத்தில் முழித்தவன்... அருகிலிருந்த தன் அலைபேசியை கையில் எடுக்கும் பொழுதே தன்னை நோக்கி வந்த வாசுவை கவனித்தவன்...

‘இவன் என்ன இவ்வளோ சீக்கிரமா????? நைட் ஒழுங்கா தூங்கலையா... ’, என்ற கவலை வர... அதை மறைத்தவனாக..

திரையில் மிளிர்ந்த ஹர்ஷவர்தனின் அழைப்பை கட் செய்து விட்டு வாசுவை நோக்கி நிமிர்ந்து,

“என்ன மச்சி! ஷேக்ஸ்பியர் புக் படிக்கிற ஆர்வத்திலே சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சோ! புக் எங்கே?”, என்று குறும்புன்னகையுடன் ஆரம்பிக்க...

அதுவரை ஆர்யமன் மேல் இருந்த கரிசனம் நிமிடத்தில் காணாமல் போக.. திரும்ப திரும்ப தன் ஆங்கிலப் புலமையிலே கை வைக்கிறானே என்று உள்ளுக்குள் வெதும்பிய வாசு...

“குரங்குக்கு ஒரு புண் இருந்தா அதையே நோண்டுமாம்..”, என்று அங்கலாய்த்த படி.. விட்டால் போதும் என்று அந்த அறையை விட்டு வெளியே இருந்த மொட்டை மாடியை நோக்கி நடக்க....

“தன் புண்ணை புண்ணாக்குறவன் தான் குரங்கு! அடுத்தவன் புண்ணை புண்ணாக்குறவன்.... “

“ஹா..ஹா... மனி...தன்”, என்ற ஆணவச் சிரிப்புடன் சூப்பர் ஸ்டார் பாணியில் சொல்ல.... அதை காதில் வாங்காதவன் போல சென்ற வாசுவைக் கண்டு சிரித்துக் கொண்டே  ஹர்ஷை அழைக்க ஆயத்தமானான்...

அதன் பின் ஆர்யமனும்,  வாசுவும் சுறுசுறுப்பாக இயங்கி தத்தம் வேலைக்கு செல்வதற்கு தயாராக...

அதிகாலை.... சுபவேளை... ஒரு ஓலை வந்ததே...

என்று ஃஎப் எம்மில் ஒலித்துக் கொண்டிருக்க...

“நேற்று மாலை... சுபவேளை.. ஒரு ஓலை சென்றதே”

என்று வாசுவை விஷமமாக பார்த்த படி ஆர்யமன் பாட.. அவனோ அதை சட்டை செய்யாமல் தன் குளிர் கண்ணாடியைப் போட்ட படி... வெவ்வெறு போஸ்களில் தன்னை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க...

“என்ன மச்சி கூலிங் கிளாஸ்லாம் போட்டு... பார்க்க ஒரு கான்ஸ்டபிள் மாதிரியே இல்லை. பெரிய அதிகாரியாட்டம் தெரியுறே!!!”, என்று ஆர்யமன் நைசாக போட்டு வாங்க..

“எதிர்த்த வீட்டு புவனா பொண்ணுக்கு என் மேல ஒரு கண்ணு! அதிகாலை.. சுபவேளையில் மொட்டை மாடியில் நின்னுகிட்டு இருக்கிறப்போ ரன்பீர் கபூர் பிடிக்கும்ன்னு போன்ல யார்கிட்டயோ பேசுறது போல சொன்னாடா... என் மீசையில்லாத கெட்டப்பை பார்த்து சொல்றான்னு எனக்கு தெரியாதா என்ன!!!!.”, என்று பீற்றிக் கொள்ள...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.