(Reading time: 23 - 46 minutes)

ய்யோ.. அது உன் பின்னாடி நின்னுகிட்டு இருந்த என்னை பார்த்துல சொன்னா... அந்த ஜொள்ளு புவனா! இதை சொன்னா நம்பவா போற!!!’, என்று எண்ணிய ஆர்யமன்..

“சோ... இப்படியே கெட்டப் மாத்தாம பில்டப் பண்ணி பிக் அப் பண்ண ப்ளான் பண்றே....வேண்டாம் மச்சி! எனக்கு அந்த பொண்ணை பிடிக்கலை”, என்றான் நாசூக்காக..

வாசு “உனக்கு பிடிக்கலைன்னா என்ன??? எனக்கு பிடிச்சா போதும்!!”, என்றான் வாசு அசால்ட்டாக...

ஆர்யமன், “ஒரு பொண்ணை பார்த்ததும்.. இங்க சொல்லணும்..”, என்று தன் நெஞ்சில் கை வைத்து,

“சிஸ்டர்... சிஸ்டர்ன்னு.. “, 

“அப்படி எனக்கு சொன்னா தான் மச்சி... அந்த பொண்ணை உன் ஆளா ஒத்துப்பேன்... ” என்று முடிக்க...
பதறிய வாசு,

”சிஸ்டர்ன்னு.. சர்ச்ல உள்ள சிஸ்டரை காமிப்ப.. போடா.. உன் பேச்சை கேட்டா என்ன காலம் முழுக்க கன்னி பையனா வாழ விட்டுடுவ!!! நான் ஒத்துக்க மாட்டேன்!”

ஆர்யமன், “ஒத்துக்கலைன்னா.... கலைச்சு விட்டுடுவேன்!”, என்று கூலாக சொல்ல....

‘இவன் இருந்தாலும் இருக்க முடியலை.... இல்லாமலும் இருக்க முடியலை..’, மனதுக்குள்ளே புலம்பிய வாசு சோகமாக ஆர்யமனைப் பார்க்க...

ஆர்யமன், “ப்ச்... காமெடியன் லுக்கை அப்பப்ப குண சித்திர நடிகனாட்டம் சென்டிமென்ட்டல் லுக்கா மாத்துறியே!! சரி நானா எதுவும் முயற்சி பண்ண மாட்டேன்..“

என்று சற்று இறங்கி வர.... “அப்படா....”, என்று வாசு முடிக்க கூட இல்லை..

“ஆனா, அதுவா கலைஞ்சிடும் பாரேன்”, என்று ஆர்யமன் மின்னல் வேகத்தில் சொல்லி முடிக்க....

வந்த நிம்மதி பறந்து போக.. ‘இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்’,  என்பது போல வாசு முறைக்க...

அப்பொழுது சரியாக இவர்கள் வாசலில் வந்த நின்றார் அந்த எஸ். பி. சம்சாரம்...

“தம்பி வாசு!!!!!!!!!!!!!!!!!!!!”, என்று பாசத்துடன் அழைத்த படி உள்ளே வர..

திகைத்தான் அவன்...

வாசுவைக் கண்டதும்...

“என் தாலி பாக்கியம் நிலைக்கணும்ன்னு.. பிள்ளையார் கோவில் முன்னாடி நீ குட்டிக் கரணம் அடிக்கிறதா வாட்ஸ் ஆப் மெசேஜ் போட்டு இருந்தே... அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கிறியா தம்பி!!!”, என்று நெகிழ்ச்சியுடன் கேட்க...

நானா.. குட்டிக் கரணமா பேந்த பேந்த முழித்த படி ஆர்யமனைப் பார்க்க...

“ஒன்.. டு  த்ரீ ஃபோர்”, என்று விரல்களை விரித்து அவன் சைகையாக சொல்ல....

‘அடப்பாவி.. என் போனை அனலாக் பண்ணி மெசேஜ் அனுப்பிட்டியா.. அய்யோ... பிள்ளையார் கோவில் முன்னாடி உள்ள பஸ் ஸ்டாப்ல தானே எதிர்த்த வீட்டு புவனா நிப்பா... என் இமேஜ்.. டேமேஜ்ஜாகிடுமே... எதையாவது சொல்லி சமாளிக்கணும்’

என்று பின் விளைவுகளை எண்ணி கலங்கி அந்த பெண்மணியுடன் பேச வாயெடுக்க..... அதற்கு வாய்ப்பே கொடுக்காமல்...

“ஸார் மேல வாசுக்கு அவ்வளோ பாசம்! நீங்க காரில் ஏறுங்க மேடம்... நாங்க கிளம்பிட்டோம்.. இதோ வந்துடுவோம்”, ஆர்யமன் அன்பொழுக அவரை அனுப்பி வைத்து விட்டு வாசுவிடம் திரும்பி அவன் தாடையைப் பற்றி,

‘மச்சி எனக்கு ஒரு டவுட்! இந்த ரன்பீர் கபூர்... சன் கிளாஸ் போட்டு பல்டி அடிப்பாரா.. போடாம பல்டி அடிப்பாரா???”,

என்று கிண்டலாக கேட்க அவனை முறைத்த வாசு...

“ஏன்டா பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் தானே போடுவாங்க! குட்டிக் கரணம் போடுறதா அந்தம்மாக்கு மெசேஜ் அனுப்பி வைச்சிருக்கே???”,

என்று நொந்து வெந்து போய் கேட்க...

ஆர்யமன், “நீ மட்டும் தான் அப்துல் கலாமையும்.. விவேகானந்தரையும் கலந்து ஹாலிவுட் படம் கொடுப்பியா? நான் தோப்புக்கரணத்தையும் அங்க பிரதஷ்னத்தையும் கலந்து பக்தி படம் கொடுக்க மாட்டேனா!”, என்று சொல்லி வெற்றி மமதையில் சிரித்த படி...

“தோ... பார் மச்சி நீ கனவுலே மட்டும் தான் என்கவுன்ட்டர் பண்ணுவ... நான் ரியல்லாவே உன்னை என்கவுன்ட்டர் பண்ணுவேன்”, என்று வீர வசனம் பேச...

வாசு, “ஹய்யோ... அந்த புவனா என்னை என்ன நினைப்பா?“, என்று சோகமாக சொல்ல...

“விடு மச்சி! என் சிஸ்டர்ன்னு இங்க சொல்லணும் மச்சி! அப்படி ஒரு”, என்று ஆரம்பிக்க...

கடுப்பான வாசு,

“மாப்ளே... எனக்குன்னாலும் நீஈஈஈஈ ஆப்பு வைக்கிறே!!!!!!  ஆனா, உனக்கு?????!!!!!!!  என் சிஸ்டர் வைப்பாடா!  பிள்ளையாருக்கு நான் போடுற பல்டி வேண்டுதலை.. என் சிஸ்டர் ஆப்பா டெலிவர் பண்றதை நான் பார்க்க தான் போறேன்!!!”, என்று தொடையைத் தட்டி சவால்.... இல்லை.. சாபம் விட..

“ஹா... ஹா...என்று பெரிதாக சிரித்த ஆர்யமனுக்கு அது கூடிய சீக்கிரம் நடக்க போவது என்பது தெரியவில்லை!

தொடரும்

Episode 11

Episode 13

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.