(Reading time: 19 - 38 minutes)

பார்த்திருந்தவனுக்கும் புரியும்தானே…… “ அதெல்லாம் கண்டிப்பா நான் சொல்வேன்தான்….ஆனா அதுக்கு முன்னால நீ இனைக்கு பிரவாயில்லா போனா போகுது….இந்த பட்டிகாட்டு மிட்டாய்காரனுக்கு ஐ லவ் யூ சொல்லி கரையேத்தலாம்னு  எப்டி முடிவு செய்தன்னு முழுசா சொல்லு…..பைக்ல வர்றப்ப யோசிச்ச…..நீயும் என்ன லவ் பண்றன்னு தெரிஞ்சுட்டுன்னு சொன்னா……எல்லாம் ஓகேதான்….ஆனா மலைல ஏறும் போது  கூட நீ அதை என்ட்ட சொல்லலையே….. அதென்ன பல்ப்பு வாங்கிட்டோம்னு தெரிஞ்சதும் அவ்ளவு ஆசையா ஐ லவ் யூ சொன்ன?”

அவனை இப்போது முறைத்தாள் வினி… பின்ன பல்பு வாங்கினன்னு அவன் பாராட்றப்ப என்ன செய்றதாம்….? “இன்னைக்கு  கேம்ல நான் பல்பு வாங்கினதுக்கு உங்கட்ட இவ்ளவு உண்மை சொன்னது போதும்….” என்றபடி போய் தொம் என கட்டிலில் உட்கார்ந்தாள்.

“ஹேய்….வாங்கின பல்ப்ப சொல்லி காமிச்சதுக்கு இவ்ளவு பெரிய பனிஷ்மென்ட்டா…..நோ நோ….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இவன் வார்த்தைக்கு பதிலாக இப்போது கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு முகத்தை இன்னுமாய் தூக்கிக் கொண்டாள் அவள்…..

கட்டிலில் அமர்ந்திருந்தவள் முன்பாக சென்று தரையில் ஒரு கால் மடக்கி அமர்ந்து விழிகளை மட்டுமாய் உயர்த்தி அவள் முகம் பார்த்தான் அவன்.

ஏதோ சமாதான கெஞ்சல்…சரணாகதி மெசேஜ்….டீசண்ட்டா கால்ல விழுறது இப்டி எதையோ இவள் எதிர்பார்த்தால் அவனோ …. “ அடுத்த பல்ப் வாங்னாத்தான் மீதிய சொல்லுவியா வினு …… செஞ்சுடுவோம்….” என்றானே பார்க்கலாம்.

அவ்வளவுதான் சிலுப்பிக் கொண்டு எழுந்துவிட்டாள் வினி….. “அதையும் பார்ப்போம்….”

வாய்விட்டு சிரித்தான் அவன்.

“கிடச்சுறுக்கது ஒரே ஒரு கோர்ட்ஷிப்…. அதுவும் மேரேஜுக்கு அப்றம்……அது மறக்காத அளவுக்கு இருக்கனுமே….” அவன் தான்.

“ஆமா ஆமா…..நானும் உங்கள மொத்து மொத்துன்னு மொத்த போட்ட ப்ளான்லாம் வேஸ்ட்டா வெய்ட் பண்ணுது…..சிறப்பா செஞ்சுடுவோம்…” இது இவள்.

“பைதவே ஒவ்வொரு கேம் முடிவிலயும் பல்ப்  வாங்கினவங்க கொடுத்தவங்களுக்கு….. இது மேரேஜுக்கு அப்றம் நடக்ற கோர்ட்ஷிப்ங்கிற உண்மைக்கு சூட்டாகிற மாதிரி எதாவது கொடுக்கனும்…..” இதுவரை அவன் குரலில் இருந்த கிண்டல் போய் குறும்பு மட்டும் முழுவதுமாய் வெளி தெரிய….

இவளுள் ஜிவ்வென்று உள்ளே ஏறும் ஏதோ ஒன்று வெளியே வெட்கம் செய்ய….. முகம் குனிந்தாலும்…. கீழிருப்பவன் கண்களை தவிரக்க வழி இல்லை என்ற நிலையில்…. அவஸ்தைக்குட்பட்டாள் அவன் வினி…..

அவனோ தன்னவள் தவிப்பை ரசித்தவன்…. அவள் அவஸ்தையில் இன்னுமாய் அவஸ்தை சேர்த்தான்…..

“அப்பதான ஸ்டெப் பை ஸ்டெப் அடுத்த ஸ்டேஜ் போக முடியும்….”  காதலனாய் சீண்டி…..

இன்னுமாய் தன்னவன் முகம் காண தாளாமல் தவித்தவளுக்கு…. கணவனாய் உதவும் விதமாய்….  சிவந்து நின்றவளை எழுந்து நின்று இழுத்துச் சேர்த்தான் தன்னோடு….

பெண்ணவளை கொழுத்திய வெட்கத்தை அவன் கன்னத்தில் இதழ் பொருத்தி இதமாய் எதிர்கொண்டான்……...

“இது ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு எனக்கு கொடுத்தியே பல்பு அதுக்காக நான் கொடுக்றது….”

அவன் செயலின் பின் விளைவாய் இப்போது அவனை அவசரமாய் விலகியவள் கரம் பற்றி இழுத்தான் தன்னிடம்….

“இன்னைக்குள்ளதுக்கு நீ தரனும்….”

“போங்க நீங்க…….” பிடித்திருந்த அவன் கரத்திலிருந்து உருவி ஓடி இருந்தாள் நிலவினி நில்லாமல்.

ன்றோடு அபயன் வீட்டிலிருந்து அழுது கொண்டு வந்து இரண்டு நாள்தான் முடிந்திருக்கிறது என்றால் நம்பக் கூட முடியவில்லை பவிஷ்யாவிற்கு….ஏதோ இரண்டாயிரம் ஆண்டு காலம் அவனைப் பார்க்காதது போல் தவிக்கிறது. உயிர்….

இப்பத்தான் இப்டி இருக்கும்……கொஞ்ச நாள்ள சரியாகிடும் என என்னதான் ஒவ்வொரு நொடியும் சொல்லிக் கொண்டாலும் நேரம் போக போக வலி கூடுகிறதே தவிர குறைவதற்கான அடையாளம் எதையும் காணோம்….

முன்பெல்லாம் அதாவது கொண்டல்புரத்தில் அவனைப் பார்க்கும் முன்பெல்லாம் திருமணம் காதல் என எதையாவது பற்றிய பேச்சு சூழ்நிலையில் நடைபெறும் போதுதான் அவன் உருவம் மனக்கண்ணில் வந்து இடஞ்சல் செய்யும்….

இப்போது என்னவாயிற்று…? என்ன செய்தாலும், எதைப் பார்த்தாலும், கண் மூடிக் கொண்டாலும், விழி திறந்து நின்றாலும் அவன் உருவம்….

அவன் வேற அங்க இவளுக்காக இப்டித்தான் தவிச்சுட்டு இருப்பான்னு ஞாபகம் வர்றப்ப….என்ன ஆனாலும் பிரவாயில்லைனு அவன் வீட்டுக்கு கிளம்பிப் போயிடலாமான்னு கூட தோணிடுது சில நேரத்தில்…..

இதில் வாழ்நாளெல்லாம் இவன் இல்லாமல் எப்படி வாழவாம்?

இப்படி எண்ணம் வரும்போதே கூடவே ‘எப்படியும் அவன் அம்மா அப்பா சம்மதிக்காட்டி உன் அம்மா அப்பாவும் சம்மதிக்க போறதில்ல…அப்படி இருக்கப்ப எங்க இருந்து நடக்கும் இந்த கல்யாணம்….ஆக எப்டினாலும் வாழ்நாளெல்லாம் அவன் இல்லாம நீ வாழ்ந்து தான் ஆகனும்’ என்கிறது அறிவு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.