(Reading time: 19 - 38 minutes)

க முடிகிறதோ இல்லையோ எப்பாடு பட்டாலும் அவனை தவிர்த்து தான் ஆக வேண்டும் இவள்….

இதில் நிலுவோட தொடர்பில் இருந்து கொண்டே…..அபயன் வீட்டில் நடப்பதை உணர்ந்துகொண்டே… இவள் எப்படி அவனை விலக்கி நிறுத்தவாம்?

அதோடு என்று இவள் அபயனை காதலித்தாள் என்ற விஷயம் இவள் அப்பாவுக்கு தெரிந்தாலும்…..நிச்சய நிச்சயமாய் அப்பா போய் சண்டைக்கு நிக்கும் முதல் இடல் நிலுவின் வீடாகத்தான் இருக்கும்….

ஏன் தேவையில்லாத மனகஷ்டம்?

ஆக நிலவினியையும் இவள் தவிர்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

இப்படி இவள் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்றாம் நாள் காலை….காலைன்னு சொல்லக் கூடாது…..அவ நைட்லாம் தூங்காம அழுது வடிஞ்சு…அவளை மீறி கிட்டதட்ட ஏர்லி மார்னிங் தூங்கி……இப்பதான் விழிப்பு வந்து……இதுக்கு மேலயும் ரூம்குள்ள இருந்தா அம்மா என்னமோ ஏதோன்னு நினைப்பாங்க…என்ற நினைவில் அழுது கசங்கி இருந்த முகத்தை சற்று கழுவிக் கொண்டிருந்தபோது….

“ஏய் பவி…எந்திரிச்சியா இல்லையா….உன்னைப் பார்க்க மில்காரங்க வீட்ல இருந்து வந்திருக்காங்க…..கொஞ்சம் பார்காப்ல கிளம்பிவா” என்றது அம்மாவின் குரல்…..

அது காதில் விழுந்ததா…..இல்லை நேராக அடிவயிறுதான் இதைக் கேட்டதா…..அங்கிருந்து ஓர் சுயம் கொல்லும்  சுகந்த மின்சாரம் அழுத்தமாய் பிறந்து கழுத்து வரை பாய…. காலுக்கடியிலிருந்த தரையை அது களவாடி போக…...

காதுதான் கேட்டதா? இல்லை எதாவது கனவு கண்டேனா….? என அறிவு அரண்டு நின்றாலும் மனதிற்கோ கலைந்து அழிந்து கிடந்த மொத்த முழு உலகமும் முழு நொடிக்கும் முன்பாக நேராகி இருந்தது…. அதில் நின்று ‘அப்டில்லாம் உன்ன விட்றுவனா பவிப் பொண்னு ‘எனக் கேட்டான் அவள் மனம் கொண்டவன்.

தண்ணீரால் அடித்து அடித்து முகம் கழுவினாலும் கண்ணீர் நிற்காமல் பாய…. எப்படியோ சமாளித்து ……

ஐயோ என்ன ட்ரெஸ் போட என ஏகத்துக்கு குழம்பி…… எதுக்கும் இருக்கட்டும் என சிம்ப்ளான சேரியிலே இவள் கிளம்பி வர….

மாடிப் படியிலிருந்து இறங்கும் போதே பார்வையில் படுவது……. அதிபன். அடுத்துமாய் அவள் கண்கள் ஆட்களை தேடினால்….அதிபனையும் அவள் அப்பாவையும் தவிர யாருமில்லை வரவேற்பறையில்…..

ஓ பெரியத்தான்….. ஆனா இவங்க எப்படி? கல்யாண வீட்டில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்த போது…..இதுதான் அபயனின் பெரிய அண்ணன் என்பது வரை இவளுக்கு புரிந்து கொள்ள முடிந்திருந்தாலும் அதிபனோடு அறிமுகம் என்று எதுவும் கிடையாது இதுவரைக்கும்….. ஒரு வார்த்தை பேசிக் கொண்டது கிடையாது இருவரும்….

ஆனாலும்  இவளைப் பார்த்த அதிபன் சினேகமாய் புன்னகைக்க…..பதிலாக கைகளை குவித்து வணக்கம் சொன்னபடியாய் தன் அப்பா புறமாய் போய் நின்றாள் இவள். கண்களோ அதிபனுக்காக கொண்டு வந்து வைக்கப் பட்டிருந்த இனிப்பு காரங்களின் மீதாய் உலாவுகிறது…

‘இங்க என்ன நடக்குது?’ அறிச்சுப் பிடிங்குது உள்ள மனசு.

“உட்காருமா” என தன் அருகில் இருந்த சிங்கிள் சீட்டரில் உட்கார சொன்ன அப்பாவோ…”இது தான் என் பொண்ணு பவிஷ்யா…...” என அறிமுகபடுத்திவிட்டு “இது யார்னு தெரியுதுலம்மா “ என்றார் இவளைப் பார்த்து…

“ம்…நம்ம நிலுவோட….” என ஆரம்பித்தவள்…. “யவி அண்ணாவோட அண்ணா” என முடித்தாள்.

“நிலு வழியான்னு இல்ல….அதுக்கும் முன்னமே நமக்கும் இவங்க சொந்தகாரங்கதான்மா……என்ன ரொம்ப தொடர்புல இல்ல…..இப்போ நம்ம நிலு கல்யாணத்துல விட்டு போன தொடர்பு திரும்ப கிடச்சுட்டு” என்றார் அப்பா.

இதைக் கேட்கவும் திக் என்கிறது இவளுக்கு…. அபயன் வீடு சொந்தமா இவளுக்கு? எப்படி சொந்தம்…? என்ன முறை வருவான் அபயன் இவளுக்கு? இப்டி அப்பா இவளை கூப்பிட்டு வைத்து பேசுவது என்றால்…….

இவளோட அம்மாவோட சொந்த தம்பி, இத்தனைக்கும் 17 வயசு இவளவிட மூத்தவர்….இன்னும் அவருக்கு கல்யாணம் ஆகலைன்ற ஒரே காரணத்துக்காக இப்பவரை அவர் முன்ன இவள உட்கார்ந்து பேச விடமாட்டாங்க வீட்ல…. இதில் இப்படி கூப்டு வச்சு பேசுறதுன்னா?...கடவுளே இந்த அபை சித்தப்பா அண்ணா என ஏதாவது முறை வந்து நின்றால்…..அவசர அவசரமாக அவகாசமே கொடாமல் இப்படியாய் வந்துவிழ நினைவுகள்….. அவ்வளவுதான் அடுத்த நொடி இருந்த அத்தனை நிம்மதியும் போய்…. இவள் உலகம் அந்தரத்தில் இருந்து அந்து விழ

அதே நேரம் “மரகதம் அண்ணி உன் அப்பா குடும்பத்துகாரங்களாங்கும்…” என்று இவளைப் பார்த்து சொன்னபடி வந்த அம்மா மூன்று காஃபி டம்ளர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டை கொண்டு வந்து அதிபன் முன் நீட்டினார்.

  “காஃபி சாப்டுங்க தம்பி”

அந்து விழுந்து கொண்டிருந்த உலகத்தை அப்போதைக்கு நிறுத்தி ‘அம்மாக்கு அண்ணி…அப்பா குடும்பம்….அப்டின்னா இவளுக்கு அபை அம்மா என்ன முறை….? என அவசர அவசரமாக இவள் கணக்குப் போட..…

இருந்த பயத்தில் மூளை ஸ்ட்ரைக் அடிக்க….. அப்பா குடும்பத்துக்காரங்க எல்லோரு இவளுக்கு சித்தப்பா பெரியப்பா அண்ணாவாதான இருக்காங்க என்பது மட்டும் மரத்திருந்த மண்டையில் இப்போதைக்கு வர….அதில் இவளுக்கு மயக்கமே வர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.