(Reading time: 19 - 38 minutes)

தேங்க்ஸ் அத்தை” என்றபடி அதிபன் காஃபியைப் பெற்றுக் கொண்டதுதான் இவளுக்கு அப்போது ஆக்‌சிஜன் தந்து காப்பாற்றியது….அடுத்த நொடி அதே விஷயம் ஜிவ் என்கிறது இவளுள்…. ‘டேய் நீ எனக்கு அத்த பையனாம்’ என அடித்தோடுகிறதே அபயனிடமாய் இவள் மனது…

அப்பொழுதுதான் மெல்ல ஞாபகம் வருகிறது ‘எல்லாம் சரி…இப்ப இங்க என்ன நடக்குது?’

“பவிம்மா….. இவங்க ஊர்ல இவங்க  ஹாஸ்பிட்டல் ஒன்னு இருக்கு…அதுல உன்ன வேலைக்கு வரச் சொல்லி கேட்காங்க….யோசிச்சுப் பார்க்கிறப்ப இதுதான் சரின்னு படுது எனக்கும்….உன் படிப்பு பத்தி உன்ட்ட ஏதோ பேசனுமாம்….” என அப்பா தெள்ளத்தெளிவாக விஷயத்தை புரியவைத்தார். அதாவது அப்பா இவளை அங்கு வேலைக்கு அனுப்புவதாக முடிவு செய்துவிட்டார்.

ஓ இவ்ளவுதானா விஷயம்? இதத்தான் என்னவெல்லாவோமா நினச்சுட்டனா? உடனடியாய் மனம் சட்டென வடிய…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அதற்கு நேர் மாறாக ‘ஆனா அப்பா இப்டி கிராமத்துக்கு அனுப்ப எப்டி சம்மதிச்சாங்க…? இதுக்கு எதுவும் உள்ளர்த்தம் இருக்குமோ?’ என்கிறது சாகமாட்டேன் என பிடிவாதம் பிடித்த ஓர் ஆசை….

“பவிஷ்யா என் நேம் அதிபன்….. யவ்வன் வெட்டிங்லதான் உங்கள பத்தி தெரிய வந்திச்சு……மெடிசின் ரஷ்யால முடிச்சீங்கன்னு சொன்னாங்க…..ஸ்க்ரீனிங் எக்‌ஸாம் முடிச்சுட்டீங்களா?” என்ற அதிபனின் பேச்சில் நடப்புக்கு வந்தவள்

அதிபன் கண்ணில்… முகத்தில் இருந்த அந்த ஸ்நேக பாவத்தில் ‘இவங்க உண்மையிலே வேலைக்கு வரச் சொல்லத்தான் வந்தாங்களா?’ என யோசிக்க தொடங்கினாள்.

இவ்ளவு செலவு செய்து படிச்ச பொண்ணை கிராமத்துல வந்து வேலை செய்ய கேட்கிறதால உறவு முறைய சொல்லி, நேர்ல பார்த்து பேசி கூப்டாதான் பலன் இருக்கும்னு நினச்சு வந்திருக்கலாம்….

இல்லை அபை இவங்க காதல்  விஷயத்த வீட்ல சொல்லி அது சம்பந்தம்மா கூட வந்திருக்கலாம்…ஆனா அப்டின்னா அதுக்கு எதுக்கு இந்த டாக்டர் வேலை? அபை வீட்ல சம்மதம்னா நேர பொண்ணு கேட்டு வர வேண்டியதான? உள்ளே மனம் தாறுமாறாய் விஷயத்தை ஆராய

 “ம்…எக்‌ஸாம் க்ளியர் செய்துட்டேன்…” என  ஒரு பதிலை சொல்லி வைத்தாள் இவள்.

அடுத்தும் அவளது படிப்பை பத்தியே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அதிபன் எப்பொழுது பேச்சை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றினான் என இவளுக்கு தெரியவில்லை…..

“உங்க அப்பாவோட கசின் வீட்டுக்கும் என் அம்மாவோட கசின் வீட்டுக்கும் ரொம்ப வருஷம் முன்னால எதோ சண்டை போல…..என்னதான் அந்த ப்ரச்சனைல நேருக்கு நேரா நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சண்டைனு இல்லைனாலும்…. ஒரு மாதிரி விலகியே இருந்துட்டாங்க போல….. கேள்விப் பட்டேன்….. இதுல திடீர்னு வந்து பொண்ணு கேட்டா உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களோ மாட்டாங்களோன்னு நான் மட்டுமா இங்க வந்தேன்…. இப்ப நீ அங்க ஹாஸ்பிட்டல் வர ஆரம்பிச்சா அத வச்சு நம்ம ரெண்டு வீட்டுக்கும்  ஒரு நெருக்கம் கிடைக்கும்…..அப்ப பொண்ணு கேட்கவும் வசதியா இருக்கும்….அதான் இப்டி கேட்டேன்…. இப்ப அங்க வந்து நீ ஜாய்ன் செய்….மிச்சத எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளவு சீக்கிரம் நான் மூவ் பண்றேன்….ஆனா இனி அழுதுட்டு இருக்க கூடாது என்ன…சந்தோஷமா இருக்கனும்….” அதுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த அதே தொனியில் எந்த உணர்வுகளையும் குரலிலோ வார்த்தையிலோ ஏற்றாமல் அதிபன் இதைச் சொன்ன போது

முதலில் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் முழித்தவள் அடுத்து அப்படி ஒரு ஆனந்தமும் அளவிடமுடியா அதிர்ச்சியுமாய் இவள்.….‘ஆமா அடுத்து அவ அப்பா உட்கார்ந்திருக்காங்களே’  மிரண்டு போனாள் பெண். ஆனால் அப்பா எதுவும் சொல்லாமல் வெகு இயல்பாய் இருக்க அடுத்துதான் உரையாடல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதே இவளுக்கு உறைத்தது….

ஓ முதல்லயே இங்லீஷ்ல பேசுனா வித்யாசமா இருகும்னு…..தமிழ்ல பேசி….அடுத்து மெடிசின் பத்தி தமிழ்ல கேள்வி கேட்டு கொஞ்சம் கொஞ்சமா இங்க்லீஷ்க்கு வந்து…இவ அப்பாக்கு வித்யாசமா படாம….இவ இன்னுமா அழுதுகிட்டு இருக்க கூடாதுன்னு விஷயத்தை சொல்லி…..

கல்யாணத்துக்கு தடை வந்துவிடக் கூடாதென எத்தனை கவனமாய் ….ஒவ்வொரு ப்ரச்சனையாய் களைந்து…..இதற்கு இடைபட்ட காலத்தில் கூட இவள் அழுது கொண்டிருக்க கூடாதென…..அதான் இன்னும் ஒன்னு ரெண்டு நாள்ல வேலைக்கு போன பிறகு அங்க வச்சு இதை சொல்லிக்கலாமே……இப்பவே இவட்ட சொல்லனும்னு இத்தனையாய் யோசித்து….

எப்படிப்பட்ட வீட்டுக்கு போகப் போகிறாள் இவள்? ஆட்டிவிக்கும் அடி முடியற்ற ஆனந்ததில் அப்பா முன்பு அழுது வைத்து மொத்தமாய் சொதப்பிவிடக் கூடாதென தன்னைக் கட்டுப் படுத்த பெரும் பாடு படுகிறாள் இவள்…..

தே நாள் அங்கு கொண்டல்புரத்தில் காலையிலேயே அதிபன் வேலை விஷயமாக கிளம்பிச் சென்றுவிட்டான் என்ற தகவல் அபயனுக்கு கிடைக்க அவனுக்கு அது வித்யாசமாக படவில்லை….இத்தனை நாள் யவி திருமணத்தில் சேர்ந்திருந்த அலுவலக வேலையைப் பார்க்க ஓடி இருப்பான்தானே அண்ணன்….என்ற நினைவில் அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவன் கண்ணில் படுகிறாள் அனு…. அபயனுக்கு காலையில் ஜாகிங் செல்வதில் விருப்பம் கிடையாது….. ஆனால் கொண்டல்புரத்துல உள்ள  அவன் செட் மற்றும் காலேஜ் பாய்ஸ் இவங்க கூட சேர்ந்து முழு மூச்சா தினமும் ஒரு மேட்ச்சாவது காலையில விளையாடியே ஆகனும் அவனுக்கு…. ஃபுட்பால் அவன் பார்ட் ஆஃப் லைஃப்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.