(Reading time: 17 - 33 minutes)

ரத்தடியில் இருவரும் காத்திருந்த போது, அந்த பக்கமாய் வந்து கொண்டிருந்த சதியை அழைத்தான் இஷான்…

அவன் அழைத்ததும், திரும்பியவள், அவனுடன் ஜெய்யும் இருப்பதை பார்த்து விரைந்து வந்தாள்…

“ஹேய்… நீ ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணுற?..”

“ஆ… ஓடி விளையாடிட்டிருக்கேன்… நீயும் வரியா சேர்ந்து விளையாட…”

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… வீட்டுல தூங்காம இங்க எதுக்கு வந்த நீ?...”

“ஏன் காலேஜில் தூங்கக்கூடாதுன்னு சட்டம் எதாவது இருக்கா என்ன?...”

“ஏய் வாயாடி… நான் என்ன சொல்லுறேன்… நீ என்ன சொல்லுற?...”

“எல்லாம் தெரிஞ்சு தான் சொல்லுறேன் மிஸ்டர் இஷான் அவர்களே…”

“கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இதென்ன சப்பக்கட்டு கட்டுற?..”

“இப்போ உனக்கென்ன நான் தூங்கணும் அவ்வளவுதான?.. அது வீட்டுல இருந்தா என்ன காலேஜில் இருந்தா என்ன?.. இன்ஃபாக்ட் வீட்டை விட இங்க தான் அதிக நேரம் தூங்குவோம் நாங்க… வேணும்னா நீ தைஜூகிட்ட கேட்டுப்பாரேன்…” என அவள் தைஜூ பெயர் எடுக்க, அவன் விழிகள் சதியை தாண்டி சென்று தைஜூவினைத் தேட, தொண்டையைச் செறுமினாள் சதி…

“கண் கீழே விழுந்துடாம அண்ணா… அவ க்ளாஸ்ல இருக்குறா… இப்போதைக்கு வரமாட்டா…”

“அவ க்ளாஸ்ல இருக்குறது இருக்கட்டும்… நீ இங்க என்ன பண்ணிட்டிருக்குற க்ளாஸ் டைம்ல அங்கயும் இங்கயும் சுத்திகிட்டு…”

“டேய்… அண்ணா… என்ன ஓவரா பேசுற?... யாரு சுத்துறா நானா?.. வந்து கேட்டுப்பாரு… என் க்ளாஸ்ல… ஒரு க்ளாஸ் கூட நான் மிஸ் பண்ணதில்லை தெரியுமா?... நான் ஒன்னும் உன்னை மாதிரி மக்கு ஸ்டூடண்ட் கிடையாது தெரிஞ்சிக்கோ…”

“அடிங்க… யாரு நான் மக்கு ஸ்டூடண்டா?...” என தங்கையை முறைத்தவன், பெஞ்சில் அமர்ந்திருந்த ஜெய்யை எழுப்பி,

“இதோ இவங்கிட்ட கேளு… இவன் மட்டும் என்னை மக்கு ஸ்டூடண்ட்டுன்னு சொல்லட்டும்… அப்போ நான் ஒத்துக்குறேன்…” என்றான் சதியிடம் சவாலாக…

ஜெய்யை தன்னெதிரே நிற்க வைத்த அண்ணனுக்கு மனதினில் மானசீகமாக நன்றி கூறிவிட்டு,

“சொல்லுங்க ஜெய்… அண்ணன் மக்குதானே….” என தலையை சரித்து குரலில் சந்தோஷத்துடன் கேட்க, அவன் அப்படியே நின்றான்…

“டேய்… சொல்லுடா உன் ஃப்ரெண்ட் புகழைப் பத்தி… அப்பதான் இந்த வானரத்துக்கு தெரியும் என் அருமை பெருமை எல்லாம்…” என இஷானும் சிலிர்த்துக்கொள்ள,

“நீங்க சொல்லுங்க ஜெய்… அவன் மக்குதான்னு….” என சிறுகுழந்தையாய் சிணுங்கினாள் சதி…

அண்ணனும் தங்கையும் மாறி மாறி விளையாட, ஜெய்க்கு அவர்களின் செய்கை சிரிப்பை தந்தாலும், சதியின் நடவடிக்கையை மனதினுள் ரசித்துக்கொண்டான்…

அவளது பேச்சு, அவளது கை அசைவு, அவளது விழி உருட்டல் என அனைத்தையுமே தனக்குள் சேமித்துக்கொண்டான் முழுவதுமாய் கொஞ்சமும் மிச்சம் இல்லாது…

“பாரு உன் ஃப்ரெண்ட் கூட பதில் சொல்ல மாட்டிக்குறாங்க… இதுல இருந்தே தெரியலை நீ மக்கு தான்னு…” என அவள் அடித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது, காலேஜ் பியூன் வந்து இஷானை பிரின்சிபால் அழைப்பதாக கூற, போட்டுக்கொண்டிருந்த சண்டையை அப்படியே விட்டுவிட்டு இஷான் கிளம்பியதும்,

“சொல்லுங்க ஜெய்…” என்றாள் சதி…

“…………..”

“உங்ககிட்ட தான் கேட்குறேன் சொல்லுங்க ஜெய்…” என அவள் கொஞ்சம் அழுத்தி கேட்டதும், வாய்திறந்தான் அவனும்…

“என்ன சொல்லணும்?.. சொல்லுறதுக்கு எதுவுமில்லை….”

“எதுவும் இல்லாததுக்கா என்னை வர சொன்னீங்க இங்க?..”

“வாட்?...”

“ஏன் இப்போ ஷாக் ஆகுறீங்க?... நான் உண்மையை தான சொன்னேன்…”

“உன்னை நான் வர சொல்லலை..”

“ஓஹோ… அப்படியா…. அப்போ நான் போகலாமா?...”

“தாராளமா…”

“ம்ம்ம்…” என்றபடி அவள் முன்னே நடந்து செல்ல ஆரம்பிக்க, அவனருகில் வந்த பியூன்,

“என்ன சார்… அதுக்குள்ள பேசிட்டீங்களா?...” எனக் கேட்டான்…

அந்த பியூன் கேட்டதும் சற்றே கேள்விக்குறியோடு அவனை பார்த்த ஜெய்யிடம்,

“இல்ல சார்… நீங்க காலேஜ் ரெப்கிட்ட பேசணும்னு சொன்னதா பிரின்சிபால் சொன்னாங்க… அதான் நான் போய், உங்களை பார்க்க சில ஆஃபீசர்ஸ் வந்திருக்காங்க… பிரின்சிபால் உங்களை அவங்ககிட்ட பேச சொன்னாங்கன்னு அந்த பொண்ணை அழைச்சிட்டு வந்தேன் இங்க…” என விளக்கமளித்தான்…

“என்ன சொல்லுறீங்க… அந்த பொண்ணுகிட்ட நீங்க ஏன்?...” என இழுத்தவன்,

“அப்போ அந்த ரெப்?....!!!!!!!!!!!!!!!” என அதிர,

“ஆமா சார்… இவங்க தான் அது…” என போய்க்கொண்டிருக்கும் சதியை கைகாட்டினான் ஜெய்…

சில நிமிடங்களில் தன்னை சுதாரித்துக்கொண்டவன், சதியை இங்கே வரசொல்லும்படி அவனிடம் சொல்லிவிட, அவனும் சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.