(Reading time: 17 - 33 minutes)

வன்… இவன்… என யோசித்தவளுக்கு சட்டென தெரிந்து போனது, நேற்றிரவு தன் கழுத்தில் கத்தி வைத்தவன் இவன் தான் என்று…

அவனிடமிருந்து பார்வையை விலக்கி மீண்டும் ஜெய்யின் மீது அவள் பார்வையை செலுத்த, அவள் இதயம் வேகமாக துடித்தது…

சுற்றியிருந்த நாலு பேரையும் சில நொடிப்பொழுதில் அடித்து துவம்சம் செய்தவன், அடுத்து சதியை நோக்கி முன்னேறினான்….

அவளை சுற்றியிருந்த கயிற்றினை அவிழ்த்தவன், அவளோடு திரும்பியபோது,

ஜெய்யின் முன் மேலும் இருவர் வந்து நின்றனர்…

அவன் அவர்களோடு சண்டையிட்டு கொண்டிருக்கும்போது, பைரவ் சதியை நோக்கி வந்தான்…

அவன் தன்னை நோக்கி வரவும், அவள் பின்னே நகர்ந்தாள்…

“ஜெய்……….” என கத்தி அழைக்க கூட திராணி இல்லாது அவள் நின்றிருக்க, அவன் அவளைப் பார்த்து சிரித்தான்…

அந்த நேரம், சட்டென துப்பாக்கி சத்தம் கேட்க, திரும்பி பார்த்த பைரவ் திகைத்தான்…

தன்னோடு சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு பேரையும் சுட்டுக்கொண்டிருந்தான் ஜெய்…

“என் ஆளுங்களையே கொல்லுற அளவுக்கு அவனுக்கு தைரியம் வந்துட்டா?... அவன் தைரியத்தை இப்போ மொத்தமா எடுக்குறேனா இல்லையான்னு பாரு?...” என சொல்லிக்கொண்டே அவளை நோக்கி, கூரான வாளை அவன் வீசிய போது, சட்டென அவனது கைகளில் சுட்டான் ஜெய்…

அப்போது கீழே கிடந்த நான்கு பேரில் ஒருவன், தள்ளாடிக்கொண்டே ஜெய்யின் கைகளில் இருந்த துப்பாக்கியை தட்டிவிட, ஜெய் அவனை தள்ளிவிட்டுவிட்டு பைரவை நோக்கி ஓடினான்…

வலியைப் பொறுத்துக்கொண்டு, வலக்கையில் இருந்த வாளை தூக்கி போட்டு இடக்கையில் பிடித்தவன், ஆங்காரத்தோடு அவளது கழுத்தை நோக்கி வீச, சட்டென அவளின் முன் வந்து அவளுக்கு பாதுகாப்பாக நின்றவனது மார்பை பதம் பாரத்திருந்தது பைரவின் வாள்…

அவளை காப்பாற்றி விட்டான் என்ற கோபம் வெறியாக மாற, மீண்டும் வாளை எடுத்து, ஜெய்யின் பின்னே இருந்த அவளை நோக்கி வீச, பைரவினை எட்டி மிதித்து கீழே தள்ளினான் ஜெய் மார்பில் ஆறென வழியும் குருதியோடு…

பைரவ் கீழே விழுந்ததும், அவனை எழுப்பி, அங்கிருந்து ஓடினர் அனைவரும்…

ஓடியவர்களை குறிபார்த்து ஜெய்யும் சுட, மூன்று பேர் அந்த இடத்திலேயே தோட்டாவினால் அடிபட்டு விழ, பைரவும், அவனுடன் மீதம் இருந்த இரண்டு பேரும் உடலில் கொண்ட காயங்களோடு தப்பித்துவிட்டனர்…

அவர்கள் தப்பித்து சென்றதும், சதியின் அருகே வேகமாக வந்தவன், அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஆராய்ந்தான்…

சிறு கீறல் கூட அவள் மேல் பட்டிருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாதிருப்பது கண்டு விழி மூடி, தன் நெஞ்சில் கைவைத்து அவன் ஆறுதல் அடைந்த போது, தனது கைகள் பிசுபிசுப்பதை உணர்ந்து கண் விழித்தவன்,

எதிரே நின்றிருந்த அவள் முகத்தினைப் பார்த்தான்…

அவள் பார்வை மொத்தமும், அவனது நெஞ்சிலேயே இருக்க, உதடுகள் படபடவென்று நடுங்க, மூச்சுக்குப் போராடிக்கொண்டிருந்தாள் அவள்…

“சதி…..” என அவன் அழைத்தும் அவள் நிமிரவில்லை…

“சதி…………….” என அவன் கத்த, இம்முறை அவளிடத்தில் ஓர் அதிர்வு….

அதிர்ந்து விழித்தவள், அவனை நேருக்கு நேராக பார்க்க, இப்போது அவனது விழிகள் தனது இமைக்கதவினை அடைத்துக்கொள்ள பார்க்க,

“ரு…………………………..த்……………………………………….” என்ற அலறலோடு அவனது நெஞ்சில் கைவைத்தாள் சதி…

அந்நேரம் அணைந்த தீபத்தினை மீண்டும் ஏற்றி, வழிபட்டுக்கொண்டிருந்தவரின் மனம் ஒருநிலையில் இல்லாது போக சட்டென கண் திறந்தார் பிரம்மரிஷி…

“ஈசனே…” என பிரம்மரிஷி வாய்விட்டுக்கூற, ஏற்றிவைத்திருந்த தீபம் மீண்டும் தன் ஒளியை நிராகரித்துவிட்டு மறைந்து மாயமாகி போக, அவர் சிலையாகி போனார் சில கணங்கள்…

Episode 12

Episode 14

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.