(Reading time: 17 - 33 minutes)

ந்த காட்டுப்பாதை பிரியும் இடத்திற்கு அவள் வந்த போது ஆள் நடமாட்டம் அங்கே அறவே இல்லை… அங்கிருந்த ரத்தக்கறையை பார்த்துவிட்டு அப்படியே மண்டியிட்டு அவள் கீழே விழுந்த கொஞ்ச நேரத்தில், தன் சுயநினைவை இழந்தாள்…

அப்போது, கமிஷனர் சோமநாதன், ஒரு கேஸ் விஷயமாக சாலை ஓரத்தில் நடைபாதை அருகில் நின்று இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் புயலென வந்த லாரி அவர் மீது மோத கொஞ்ச இடைவெளியே இருக்க, சட்டென அவரின் கைப்பிடித்து இழுத்து காப்பாற்றினான் ஜெய்…

“அப்பா…. “ என்ற குரல் அவனது இதயத்திலிருந்து வெளிவர, தகப்பனை காப்பாற்றிய நிம்மதியில், அந்த லாரியை மடக்கி பிடித்தான் அவன்…

ஒரு மரத்தின் மீது மோதி லாரி நிற்க, அந்த லாரி டிரைவரை அடித்து கசக்கியிருந்தான் ஜெய்…

“சார்… ப்ரேக் பிடிக்கலை சார் லாரிக்கு… வேற எந்த காரணமும் இல்ல சார்… இதுக்கு மேலயும் அடிச்சா நான் தாங்கமாட்டேன் சார்…” என அவன் அழ ஆரம்பித்ததும்,

“சே….” என கையை உதறி தள்ளிவிட்டு, கசங்கிய போலீஸ் உடையோடு காரின் அருகே வந்து தலைமுடியை கலைத்து அதனோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தவனது கவனத்தை கலைத்தது அவனது செல்போன்…

“புது நம்பராக இருக்கிறதே…” என்ற புருவ முடிச்சோடு அதனை அட்டெண்ட் செய்து,

“ஹலோ ஜெய் ஹியர்….” என்றான்…

“ஹாய் ஜெய்… என்ன உங்க அப்பாவை காப்பாத்திட்ட போல…”  

குரலில் இருந்த இகழ்ச்சியம் ஜெய்யின் கோபத்தை தூண்ட,

“டேய்…” என அதட்டினான் ஜெய்…

“சும்மா கத்தாத ஜெய்… அப்பாவை காப்பாத்த தெரிஞ்ச உனக்கு, உயிருக்கு உயிரா உன்னை காதலிக்குற பொண்ணை காப்பாத்த தெரியலையே…” என அந்த குமாரின் நண்பன் உச்சு கொட்ட,

“பைரவ்………..” என உறுமினான் ஜெய்….

“ஓ… சாருக்கு என் பேரெல்லாம் தெரிஞ்சிருக்கே அதுக்குள்ள… பரவாயில்லையே… நீயும் நானும் சந்திச்சு பாதி நாள் கூட ஆகலை... அதுக்குள்ள என் பேர் வரைக்கும் விசாரிச்சிட்டியா நீ… ம்ம்… கிரேட் ஜெய்…”

“சதி இப்போ எங்க இருக்குறா?...” என கேட்டவனின் குரலில் அளவுக்கு அதிகமாக ஆத்திரம் தெறித்தது…

“கூல் ஜெய்… அவ இங்க எங்கிட்ட தான் பத்திரமா இருக்குறா… நீ வந்தா அவளைப் பார்க்கலாம்…”

“வரேண்டா… அங்கேயே இரு…” என சொல்லிவிட்டு பைரவ் சொன்ன இடத்திற்கு விரைந்தான் ஜெய்…

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜெய் ஆழிப்பேரலையாய்…

“வா வா ஜெய்…. என்ன ஒரு வேகம்… போன் பண்ணின கொஞ்ச நேரத்துலயே வந்துட்டியே… ஹ்ம்ம்… அவ்வளவு ஆர்வமா அவளைப் பார்க்க?...”

“எங்கடா சதி?...”

“இதோ இங்க தான் இருக்குறா… அவளை நான் எதும் பண்ணலை… இன்ஃபாக்ட் என் விரல் நகம் கூட அவ மேல படலை…” என பைரவ் கை காட்டிய திசையில் பார்த்த ஜெய் அதிர்ந்தான்…

கணமான கயிறு உடலெங்கும் சுற்றியிருக்க, தூணோடு சேர்த்து பிணைக்கப்பட்டிருப்பதை கூட அறியாது ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் சதி…

பார்த்தவனுக்கு இதயமெங்கும் வலி பரவ, சட்டென, அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவனை தடுத்தான் பைரவ்…

“அதுக்குள்ள அவகிட்ட நெருங்க உன்னை விட்ருவேணா நான்?...” என்றவன், அவனை நோக்கி ஒரு நீண்ட கூரான போர்வாளை நீட்ட, ஜெய் மேலும் முன்னேறினான் கொஞ்சமும் கண்டுகொள்ளாது…

“எங்க அண்ணன் பேச்சை மீறி நீ போயிட்டிருக்குற?...” என்றபடி பைரவின் கீழ் வேலைப் பார்க்கும் ஒருவன் ஜெய்யின் முன் வந்து நிற்க, ஜெய் அவனை போய்விடு என்பது போல் பார்த்தான்…

“முடிஞ்சா என்னை மீறி போடா பார்ப்போம்…” என அவனும் சவால்விட, ஜெய் அவனை முறைத்துபார்த்தான்…

“சொல்லிட்டே இருக்குறேன்… என்னடா முறைக்……..” என சொல்லிக்கூட முடிக்கவில்லை, ஜெய்யின் கை அவனது முகத்தில் பதிந்தது அழுத்தமாய்…

மூக்கோடு அடித்ததில் அப்படியே மூர்ச்சையாகி போனான் அவன்…

அவன் கீழே விழுந்த சத்தத்தில் விழித்தாள் சதி… தான் இருந்த இடம், தான் கட்டப்பட்டு நிற்பது… எல்லாவற்றிற்கும் மேல் ஜெய்யை சுற்றி நின்று கொண்டிருந்த நாலு பேர்… ஜெய்யின் கீழே கிடந்த ஒருவன்… அதற்கும் அடுத்ததாக ஜெய்யின் பக்கவாட்டில் சற்று தள்ளி வாளோடு நின்று கொண்டிருந்த இன்னொருவன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.