(Reading time: 17 - 33 minutes)

சோ… இப்போ உங்க டவுட் போயிடுச்சா?.. நானே வேணும்னு வந்து உங்களைப் பார்த்து பேசலைன்னு இப்போ புரிஞ்சிடுச்சா?...” என உதட்டில் பரவிய புன்னகையுடன் அவள் கேட்க,

அவன், “சாரி… நீ தான் ரெப்னு எனக்கு தெரியாது… ஐ அம் சாரி…” என்றான் பணிவாக…

“அய்யோ… ஜெய்… என்ன இது?... எதுக்கு இந்த சாரி பூரி எல்லாம்… அதெல்லாம் எதுவும் எங்கிட்ட நீங்க சொல்லக்கூடாது…” என படபடவென அவள் பொரிய, அவன் அமைதியாக இருந்தான்…

“சரி சொல்லுங்க… இப்போ சீரியஸா பேசலாம்…” என பேச்சில் ஒரு சீரியஸ்னெஸ்ஸை அவள் கொண்டு வர, ஜெய் அவளிடம் சில கேள்விகள் கேட்டான்…

அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் அவள் பதில் சொல்ல, அவள் பேச்சினை மெச்சிக்கொண்டாள் மனதினுள்…

அவன் கேட்க கேட்க எதற்கும் தயங்காமல் அவள் பதிலளித்த விதம் அவனுக்கு பிடித்திருந்தது…

காலேஜ் ரெப்பிற்கு சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான் அவனும்…

“இப்போதைக்கு இது போதும்… இந்த கேஸ்ல இன்னும் வேற எதுவும் தெரியணும்னா நான் பிரின்சிபால் சார்கிட்ட கேட்டுட்டு, உங்கிட்ட ஹெல்ப் கேட்கலாம் தான?...”

“கண்டிப்பா… உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் காத்திட்டிருக்கேன்…” என சொல்லி முடிக்கையில் இஷானும் வந்து சேர்ந்தான்…

“என்னடா… என்ன சொல்லுறாங்க ரெப் மேடம்?... கேட்ட கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொன்னாங்களா?..”

“ம்ம்… ஆமா…”

“சரிடா… அப்போ கிளம்பலாமா?... இல்ல இன்னும் எதும் விசாரிக்க வேண்டி இருக்கா?...”

“இல்லடா சில விஷயங்கள் க்ளியர் ஆகிட்டு… இனி நாம பார்த்துக்கலாம்….”

“ஓகேடா… அப்போ போகலாம்…” என நண்பனிடம் சொல்லியவன்,

தங்கையிடம், “குட்டி பிசாசே… ஒழுங்கா போய் படி… இன்னைக்கு காலேஜும் ஹாஃப் டே போல… பிரின்சிபால் எங்கிட்ட சொன்னார்… சோ இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கு காலேஜ் முடிய…” என சொன்னதும்,

“ஹே… மக்கு அண்ணா… எனக்கு இது ஃபைனல் இயர்… சோ  இரண்டே க்ளாஸ் தான் இன்னைக்கு… அப்புறம் ஃப்ரீதான்… அதுமில்லாம இரண்டு க்ளாஸும் அப்பவே முடிஞ்சிடுச்சு…” என அவள் சிரிக்க,

“சரி… சரி… சீக்கிரம் வீட்டுக்கு பார்த்து போங்க…” என அறிவுரை கூறிவிட்டு, திரும்பி திரும்பி பார்த்துச் சென்றான் தைஜூ வருகிறாளா என…

அவர்கள் இருவரும் சென்றதும், சதி புன்னகை முகத்தோடு க்ளாசிற்குள் நுழைய, தைஜூ அவளையும் அவள் சந்தோஷத்தினையும் கவனித்துவிட்டு, என்ன ஏது என்று கேட்க, அவள் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெதுவாக சொல்ல, தைஜூவிற்கு சிரிப்பும், லேசான கவலையும் வந்தது…

“என்னடி ஏன் டல்லாகுற?... அண்ணாவ பார்க்க முடியலைன்னா?...”

“சே… அதெல்லாம் இல்லடி… அவர்கிட்ட எப்படி நைட் பேசுறதுன்னு தான் பயமா இருக்கு…”

“அட என் தைஜூ பேபி… நான் தான் சொன்னேல… நான் பார்த்துக்குறேன்… நீ வொரி பண்ணாத சரியா…” என தோழியை அணைத்துக்கொள்ள, அவளும் புன்னகைத்தாள்…

அந்த புன்னகையைக் கண்டு அங்கே ஒருத்தி கொந்தளித்துக்கொண்டிருந்தது பாவம் அவர்கள் இருவருக்குமே தெரியாது…. எந்த விஷயத்தை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெதுவாக சொன்னாளோ, அது அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியின் காதுகளிலும் விழுந்தது விதியன்றி வேறென்ன?..

சதி, தைஜூவிற்காக பைக் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருந்த போது, இரு பெண்கள் பேசிக்கொள்ளும் உரையாடல் அவளுக்கு கேட்டது…

“என்னடி சொல்லுற?... நிஜமாவா?... நம்பவே முடியலைடி… அவருக்கா இப்படி ஒரு நிலைமை?...”

“ஆமாடி… எல்லாம் விதிதான்… வேறென்ன சொல்லுறது…”

“இந்த சின்ன வயசில அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டாம் தான்…”

“என்ன பண்ண அல்பாயிசில போகணும்னு விதி இருக்கும்போது யார் தான் என்ன செய்ய முடியும்?...”

“யங்க் போலீஸ் ஆஃபீசர்… இப்படி நடுரோட்டுல… சே… கேட்கவே உடம்பு நடங்குதுடி…”

“எனக்கும்தான்… இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் நம்ம காலேஜூக்கு வந்துட்டு போயிருக்குறார்.. பாவம் போற வழியில நம்ம காலேஜுக்கு கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற அந்த காட்டுப்பாதை பிரியுற இடத்துல இருக்குற கடையில எதையோ வாங்க இறங்கியிருக்குறார்… அந்த நேரம் பார்த்து எதிர்பாராத விதமா வந்த லாரி மோதி அந்த இடமே ரத்தக்களறி ஆகிடுச்சாம்…”

“அய்யய்யோ… இன்னொருதடவை அதை சொல்லாதடி… கேட்கவே கஷ்டமா இருக்கு…”

“ம்ம்… ஃப்ரெண்டோட உடம்பை மடியில போட்டுகிட்டு எந்திடா ஜெய்ன்னு, இன்னொரு போலீஸ் ஆஃபீசர் இஷான் கத்தினது அங்க இருந்த எல்லாரையுமே அழ வச்சிட்டாம்…”

தன் காதுபட கேட்ட வார்த்தைகளை நம்பமுடியாது சிலையென நின்றாள் சதி…

உதடு துடிக்க, கைகால் நடுங்க, உடம்பே தூக்கிப்போட, அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.