(Reading time: 23 - 45 minutes)

வள் பின்னால் வந்து நின்று அதைப் பார்த்த யவ்வன் பதற்றமாய் படபடவென பால்கனிக்கு சென்று பார்க்கும் போது…. அதி எதற்கு இப்படி ஓடுகிறான் என இவனுக்கு தெரியாதே….. அங்கு அதிக்காய் கதவை திறந்திருந்தாள் அனு….

“என்னாச்சு யவிப்பா…?” என்றபடி நிலவினி பால்கனி வந்து சேரும் போது…..தூரத்தில் பார்வையில் பாதியாய் கிடைக்கிறது அனு அதியின் மார்பில் சாய்வது…..

சிறு  புன்னகையுடன் திரும்பிப் பாராமல் இருவருமே அறைக்குள் வந்துவிட்டனர்…. இப்போது இவளை இழுத்து அணைத்திருந்தான் யவ்வன்….

“அடுத்த மேரேஜுக்கும் சேர்த்து ப்ளான் செய்ய வேண்டியதுதான்…” வெடித்துக் கிளறும் நிம்மதியுடன் யவி இதை இங்கு வினியிடம் சொன்னானாகில்….

அடுத்து சற்று நேரம் கழித்து திரும்பி வந்த அதிபன்…..தன் போர்ஷன் முன்பாக படிகளில் தனக்காக நின்றிருந்த யவ்வனையும் வினியையும் பார்க்கவும்…… இத்தனை மணிக்கு இவனுக்காய் எழுந்து வந்து நிக்காங்களே…..

“ அது அனு மாடிலயே தூங்கிட்டா….கீழ விழுந்துடக் கூடாதுல்லையா…..” என சொல்ல வேண்டியவற்றின் சம்மரி சொல்ல…..

”அடுத்த மேரேஜுக்கும் சேர்த்து ப்ளான் செய்ய வேண்டியதுதான்…” என்று கிண்டலாகவும் நிதர்சனமாகவும் அண்ணனிடம் சொன்னான் யவ்வன்.

அத்தனை மணி வரை சாப்பிடாமல் வந்திருந்த அதிபனுக்கு அப்போது இவர்களது போர்ஷனிலயே வினி சாப்பாடு எடுத்து வந்து பரிமாற…..பொதுவாகவே தன் அண்ணங்கள் வீடு வந்துவிட்டார்களா என ஒரு கவனம் வைத்திருக்கும் அபயனும் இப்போது இங்கு வந்து சேர்ந்து கொள்ள…..

நடு இரவில் அத்தனை மணிக்கு இவர்கள் வீட்டு டைனிங் டேபிள் களை கட்டியது…..கல்யாண களை…..

என்னதான் அதி….”டேய் அவ வெளிப்படையா சரின்னு சொல்லிகிடட்டும்டா” என தடை போட்டாலும்…. அதிக்குதான் தெரியுமே அனுவிற்கு மனதில் சம்மதம் இருக்கிறது என….. அவன் முகத்தில் அது தந்த  பூரிப்பே தம்பிகளுக்கு காட்டிக் கொடுக்குமே இருவருக்குமான உறவின் நிலை என்ன என….

இதில்  “இப்பவே சொல்லிட்டேன்…..இவன் மேரேஜுக்குப் பிறகுதான் எங்க மேரேஜ்…..” என அபயன் அவன் பக்க முடிவை அறிவிக்க……அப்போது பவியின் வீட்டிலிருந்து குண்டு எப்படியாய் விழும் என இவர்களுக்கு தெரியாதே…… மணி பெரியப்பா மூலம் எல்லாம் சரியாகி விடும் என ஒரு நம்பிக்கை…

அதைப் பற்றி அவர்கள் கலந்து கலந்து பேச….. ரெண்டு பொண்ணு மேரேஜ்னா ஒரே இடத்தில்  ஒரே நாளில் சேர்த்தே வச்சுடலாம்…..ஏன்னா கல்யாணம் பொண்னு வீட்டு சைடு நடக்கும்……. ஆனா அதே இது ரெண்டு  பையன் மேரேஜ்னா எப்டி செய்யலாம்…? ஒரு கல்யாணம் தூத்துகுடியிலும் ஒன்னு உள்ளூரிலும் நடக்குமே…. இதில் யோசிச்சு பேசி தானே முடிவுக்கு வர முடியும்?

அதோடு அதிக்காக வீட்டில் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் உடைந்து போய் இருந்திருக்க…...இதில் கடுகளவு விஷயம் கிடைத்தாலும் கொண்டாடி தீர்க்க சொல்லுமே உளம்….அப்படி இருக்க இப்போது இப்படி ஒரு செய்தி என்றால்….

உச்சத்தில் தான்  ஓடிக் கொண்டிருந்தது உற்சாக மீட்டர்…..

மறுநாள் பொழுது புலரத் தொடங்கிய காலையிலும் அது கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது அவர்கள் மத்தியில்….

அதியின் அனு மீதான விருப்பம் வீட்டில் அனைவருக்குமே  இதற்குள் இலை மறை காயாக புரிந்திருந்தாலும்……தம்பிகளிடம் இன்றுதானே அவன் வெளிப்படையாய் இதை வெளியிட்டிறுக்கிறான்….

 இளைய தலைமுறை தங்களுக்குள் இதை முதலில் களித்து களித்து பேச……

இப்படி இவர்களாய் கூடி கூடிப் பேசிக் கொண்டாலே போதுமே விஷயம் என்னதாய் இருக்கும் என அதிபனின் பெற்றோருக்கு யூகிக்க முடியாதாமா?…..

“என்னப்பா சின்னவன் கல்யாணம் கூடவே சேர்த்தே ஏற்பாடு செய்துடலாமா? அப்ப நாங்க கனிமொழிட்ட பேசிடுறோம்….” என அது இவர்களது அம்மா மரகதத்தை இவர்களிடம் கேட்க வைத்தது…..

அதிபனுக்கு இது கல்யாண பேச்சை தொடங்க சரியான காலமாக படவில்லைதான்…..என்ன இருந்தாலும் அனு இன்னும் வாயை திறந்து தன் சம்மத்ததை சொல்லி இருக்கவில்லையே…..அவளுக்கு சிந்தித்து நிதானப் பட சற்று நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தான் இவன்….

“இல்லமா…அது……அனுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும்………ஒரு ஒன் ஆர் டூ வீக்ஸாவது.” அம்மாவின் மனம் இவனுக்காய் தவிப்பதும் இவனுக்கு புரியும்தான்….ஆக இந்த சஸ்பென்ஃஸ் காலத்தை நீட்டி வைக்க இவனுக்கும் விருப்பம் இல்லை…அதோடு அதில் யாருக்கும் பெரிதாய் நன்மை இருப்பதாயும் அவனுக்கு தெரியவில்லை…. ஆக வாரக் கணக்கில் இவன் காலம் சொல்ல…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.