(Reading time: 23 - 45 minutes)

துக்கென்ன…..அனு சொல்றப்ப சொல்லட்டும்…..ஆனா கனிமொழிக்கு என்ன இருந்தாலும் இது எப்டி இருக்கும்னு யோசி….மருமகள  பொண்னு கேட்டு போறோம் நாம….. சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு பேச முடியாதுல்ல…..இப்ப நம்ம பக்கம் இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு வெளிப்படையா சொல்லி வச்சோம்னா அடுத்து கொஞ்சம் கொஞ்சமா வேலைய ஆரம்பிக்கலாம்……” என பொற்பரன் பேச்சை முடித்துவிட்டார்….

அதில் யாருக்கும் மறுப்பும் தோன்றவில்லை…… பவி வீட்டில் சென்று பெண் கேட்பதைவிடவும் இது மிகவும் டெலிகேட்டான விஷயம்தானே….

ஆக அன்றே கனிமொழியிடம் மரகதம் இதைக் குறித்து கவனமாய் கண்ணியமாய்  பேசி வைத்தார்….. அதற்காக காத்திருந்தவர்தானே கனிமொழியும்….”அவ வாழ்றதை பார்க்கிறதுலதான் என் நிம்மதி இருக்கு….எனக்காக அவ அழிஞ்சு போறதுல எனக்கு என்ன சந்தோஷம் இருக்கும்? நீங்க நான் என்ன நினச்சுபனோன்னு யோசிக்காம சந்தோஷமாவே ஏற்பாடு செய்ங்க…. நான் இந்த விஷயத்துல அனுவுக்கு அம்மா வீடு….என் பக்கம் என்னலாம் செய்ய முடியுமோ அதை நான் செய்றேன்….” என இவர்களுக்கு இருந்த தயக்கம் முழுவதையும் துடைத்துப் போட்டார்….

இந்த வகையில் இந்த ஏற்பாடு இளையவர்கள் எதிர்பார்த்ததையும்விட ஏகமாய் ஃஸ்பீடெடுத்துக் கிளம்ப…..

இந்நிலையில்தான்……..அனுவின் கலக்கத்தை கவனித்திருந்த கனிமொழி அன்றே அவளிடம் ஆறுதலும் தேறுதலும் சொல்லப் போனது…..

ஆனால் அது அனுவிடம்  வேறு வகையில் வீபரீதமாய் வேலை செய்து வைத்தது…… அனுவுக்கு நீராவின் மரணம் பற்றிய விளக்கம் வேதனை தந்தது என்றால்…. இந்த நிகழ்வில் அதியின் மீது அவளுக்கு அக்கறை தான் வந்தது….. எதையும் சட்டென மனம்விட்டு யாரிடமும் பகிர்ந்து கொள்ளா அவன் சுபாவம் அவளறிந்ததே…..அதற்கு காரணமும் கூட அவளாகவே புரிந்தும் வைத்திருந்தாள்….

 வெகு சிறு வயதில் ஹாஃஸ்டலில் தங்கி படிக்கப் போனவன் அதிபன்….கூடவே அவன் தம்பி யவ்வனும்…..என்னதான் அதியின் வயது 10 தான் எனினும்….தன் தம்பியும் தன்னைப் போல் குடும்பத்தைப் பிரிந்து இவனோடு இதுவரை அறியாத ஒரு இடம்  வர நேரிடும் போது தம்பியைக் கவனித்துக் கொள்ளும் ஒரு தாய்மை நிறைந்த அக்கறை வரத்தானே செய்யும்….

ஆக யவ்வன் முன் இவனே அழுது வடிந்தால்….சுகமாயில்லை என சோகம் பகிர்ந்தால்….. அம்மாவ தேடுதுடா  என சொல்லி அலைந்தால்…..சின்னவன் அவன் இன்னுமாய் ஏங்கமாட்டானா? என எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பழகிய பழக்கம் பின் அதுவே அவனது இயல்பாகிப் போனது அதிக்கு என்பது இவளது புரிதல்….

இதில் அவன் நீராவின் இழப்பை எப்படி கையாண்டிருப்பான்…..கண்டிப்பா யார்டயும் வாய்விட்டு முழுசா சொல்லி இருக்க கூட மாட்டான்….

இதெல்லாம் இப்போது அனுவுக்கு அதி மீது இன்னுமாய் அக்கறையையும், அவன் அருகிலிருந்து அவனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வித ஈர சிந்தனையையும் கிளறினாலும்….

அவளுக்குள்  பயம் தந்து பதற செய்தது வேறு ஒரு எண்ணம்….

நீராவின் மரணம் நிகழ்ந்தது வெளிநாட்டில்……அதுவும் எல்லோரும் இவளைப் போல வெள்ளை நிறக்கார்கள் நாட்டில்….. என்னதான் ரஷ்யர்களும் இவர்களும் வெவ்வேறு race என இவள் நினைத்துக் கொண்டாலும் இங்கு எல்லோருக்கும் எல்லா நாட்டுகாரங்களும் ஒன்னாதானே தெரியுறாங்க….

இதில் நீராவின் மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் காரணம் இன பாகுபாடு என்றானால்…..அதிக்கு எத்தனை கோபமும் வெறுப்பும் இருக்கும் whites மீது..…. முதலிலெல்லாம் இவளைப் பார்க்கவும் எத்தனையாய் காய்ச்சி எடுத்தான் அவன்….எப்படியெல்லாம் கோபப்பபட்டான்…..இத்தனைக்கும் அவன் பெண்களிடம்  எத்தனை தன்மையாய் நடந்து கொள்பவன் என இப்போது வரை பார்த்திருக்கிறாள் தானே….. ஆனால் இவளிடம் மட்டும் எது அவனை இயல்பு மீற் நடக்க வைத்ததாம்….. இந்த இவளது வெள்ளைநிறமா????

 கோபத்தில் அவன் எப்போதோ வெள்ளைக் கோழி என சொன்னது இப்போது சம்பந்தமில்லாமல் வந்து போகிறது மனதில்…. திட்றப்ப என் நிறத்த சொல்லிதான திட்டி இருக்கான்…..?

ஆனா அடுத்து அவனால எனக்கு அடிபட்டுட்டுன்ற அந்த நிலைமைக்கு பிறகு…..அதுவும் நான் விடோன்னு தெரிஞ்சதால…..அதையும் விட அவனாலதான் ஜேசன இன்டியா கொண்டு வர முடியலைன்றதால…அந்த குற்ற உணர்ச்சியில…. அதிபனுக்கு என் மேல இரக்கம்….

அதனாலதான் அதுக்கு பிறகு அவன் என்ட்ட ஒழுங்கா பழக ஆரம்பிச்சது…..அதில இருந்துதான் அவன் என்னை ஒழுங்கா அனுனு பேர் சொல்லி கூப்டுறதே கூட…..

ஆனா அந்த இரக்கதை நம்பி எப்படி நான் அதிபனை கல்யாணம் செய்ய…? எத்தனை நாள் இருக்கும் இந்த இரக்கத்தின் ஆயுள்…? அதன் பின் என் நிலை??????

இப்போ நான் தனியா…பேச கூட ஆள் இல்லாம……இழப்போட வலியில்….இத்தனை கஷ்டத்துல இருக்றதால இந்த இரக்கம் தொடருது….. ஆனா அதிபன் கூட எனக்கு மேரேஜ் ஆன பிறகு….???

நிச்சயமாய் முழு மனதாய் நான் தீபனை விரும்புறேன்…..அவனோட வீட்ல உள்ள எல்லோரையும் கூட எனக்கு பிடிக்கும்…… நாள் போக போக நான் என்னோட பழைய இயல்பான சந்தோஷ மனநிலைக்கு திரும்பிடுவேன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.