(Reading time: 23 - 45 minutes)

க அவர் அடுத்து அவள் அதைப் பற்றி பேச முனையும் போதெல்லாம் அந்த பேச்சை தவிர்த்தார்……எல்லாம் இரண்டு நாள்தான்….. இதற்குள் அனுவுக்குள் ஆயிரம் அடுத்த அழுத்தங்கள்…..

வேறென்ன அறிவு ஆயிரம்தான் வேண்டாம் என்றாலும்…..மனம் அவனை தேடித்தானே போகிறது…..இதில் இந்த மன நிலையில் அவள் கனி ஆன்டியிடம் என்ன சொல்லி வைக்க முடியும்……ஆக அவளும் அடுத்து அதிபனைப் பற்றி பேச முயலவில்லை….

இந்த நிலையில்தான் வந்து நின்றார் மரகதம்….

இந்த நொடி அவர் மரகதாமாயெல்லாம் அவளுக்கு தெரியவில்லை……அதிபனின் அம்மாவாக மட்டுமே அவர் தெரிந்தார்….. அதிபனை தேடத் தொடங்கி இருந்த  மனமல்லவா…..தினமும் அவனோடு பேசிவிட்டு….அவன் இவளோடு என்றென்றும் இணைந்திருக்க விரும்புகிறான் என அறிந்துவிட்டு….அதன் பின் இனி எந்த காலத்திலும் அவனைப் பார்வைக்குள் கூட கொண்டு வரக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டால்…?? அவள் மனமும் தான் என்ன செய்யும்…???

வழக்கமாய் அவரை மிகவுமே அக்கறையுடன்தான் அணுகுவாள்..அவர் வயது குணம் மற்றும் உடல் நிலை காரணம்…. இன்று அவரை அதையும் தாண்டி ஒரு வித கனிவுடன் வரவேற்றாள் உபசரித்தாள் என்றால்….கண்களிலோ ஒரு வித ஏக்கத்தை சுமந்தலைந்தாள்…..

அவை அனைத்தையும் கவனத்துடன் கவனித்துக் கொண்டது  மரகதத்தின் மனதும் உடன் வந்திருந்த வினியின் விழிகளும்…..     

இதன் விளைவுதான் வித்யாசமாய் போனது….. அனுவை பிறந்தது முதல் வளர்த்தவர் கனிமொழி….அவருக்கு அனுவின் மனவோட்டம் காரண காரியத்துடன் புரிகிறது…. அவளுடன் மனதளவில் நெருங்கி இருந்தவன் அதிபன்…அவனுக்கும் அவளைப் புரிகிறது…..

ஆனால் மரகத்திற்கோ அனுவின் கண்களில் தெரிந்த அந்த  ஏக்கமும்….. அதிட்ட அவ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அன்னைக்கு இவர் அவளைப் பார்த்திருக்கலையே….. அதியின் குரலில் வந்த இதுக்கு மேல யாரும் எதுவும்  இதப் பத்தி பேசாதீங்க என்ற வார்த்தையும் சேர்ந்து…. திருமணத்திற்கு தயங்குவது அதியோ என்று தோன்றிவிட்டது….. அவன் சற்று முன் வரை திருமணம் வேண்டாம் என ஒற்றைக் காலில் நின்றவனும்  கூட….

இந்த நிலையில் வந்து சேர்கிறது பவிஷ்யாவின் வீட்டிலிருந்து பொண்ணுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லை என்ற அழைப்பு…..

அடுத்து பவிஷ்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதோடு….அவள் அன்றிலிருந்து வேலைக்கும் வரவில்லை எந்த தகவலும் தராமலே…..

அலைகழிந்து போனது மரகதத்தின் மனம்….

விஷ்யாவிற்கு அபயன்தானே அவர்கள் திருமண நிச்சயத்தையே சொன்னது…..துள்ளலும் துடிப்புமாக அடுத்து அவனைக் காணும் நொடிக்காக காத்திருந்தாள் அவள்….. ஹாஃஸ்பிட்டல் போக முடியாது…..அப்ப எப்போ பார்க்கலாம்….??

நேரே எங்கேஜ்மென்ட்லதான் பார்க்க முடியுமா?  இல்ல அதுக்கு இடையில் பொண்னு பார்க்கதுக்குன்னு வருவாங்க தான….? வெறும் 23 நாள்….இதுல ஏற்கனவே பார்த்த பொண்ணு…..பொண்ணு பார்க்க நிஜமா வருவாங்களா…?? குறஞ்சபட்சம் இந்த எங்கேஞ்ச்மென்ட்டயாவது சீக்கிரம் வச்சா நல்லா இருக்கும்…..வீட்டு வழக்கபடின்னு கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட் வச்சா போச்சு….அதுவ…………ரைக்கும் வெயிட் பண்ணனும்….

இப்படித்தான் எதோ உலகில் சஞ்சரித்தபடி கற்பனையும் கணக்கிடலுமாக நேரம் தள்ளிக் கொண்டிருந்தாள் அவள்….

இதே எண்ணத்தில்…. அன்று இரவு நேரத்தில் வாயில் வந்த பாட்டை முனுமுனுத்தபடி….. அவள்  அறை பாத்ரூமில்  வந்து விழும் போர் வாட்டரில் குளிக்காமல் அவர்கள் தோட்ட கிணற்றத் தேடிப் போனாள்…..

ஹி ஹி…. போனது குளிக்கன்னு சொன்னது சும்மா….அப்டி கிணத்து பக்கதுல வச்சுதான….முதல் முதல்லா இவங்க ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசிகிட்டாங்க…அத நினச்சுப் பார்க்கதான்….

போனவள் வழக்கமாக கப்பியில் தொங்கும் வாளிக் கயிறைப் பார்த்தாள்…..ப்ச்….அதக் காணோம்…. அத எங்க தேட….?? சுற்று முற்றும் பார்த்தாள்…..நோ யூஃஸ்…..

இப்போது முன்பு அவன் கிணற்று கைபிடி சுவரில் ஏறி உட்கார்ந்தது ஞாபகம் வர…அட்ட காபி…. அவனை மாதிரியே  ஜம்ப் பண்ணி ஏறி உட்காந்தாச்சு பொண்னு…

அன்னைக்கு எப்டி பேசினான்..? வாயில் ஆட் காட்டி விரல் நகம் கடித்து மனதுக்குள் அந்த காட்சியை ஓட்டிப் பார்த்தாள்….

‘சாக்லேட் பையா….ஆனாலும் உனக்கு கட்ஸ் ஜாஸ்திதான்… அண்ணி வீட்ல வந்து அவங்க ஃப்ரெண்டுக்கு ரூட் விடுற நீ…’ மனம் பறந்து கொண்டிருந்த வேகத்தில்  தோணியதை தனக்குள் சொல்லிக் கொண்டவள்…

அடுத்து அவன் அந்த சந்திப்பில் சற்று சுற்று முற்றுமாய் பார்த்த நியாபகத்தில்….. ‘சோ ஜல்லிக்கட்டு காளைக்கு கொஞ்சம் பயமும் இருந்திருக்கு என்ன….அது.. ராஜப்பா பொண்னுனா சும்மாவா…’ என்றபடி அவனைப் போலவே சுற்றுமுற்றும் பார்த்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.