(Reading time: 23 - 45 minutes)

ன்னை சுத்தி பேசிப் பழக அப்படி ஒரு குடும்பம்…..கூடவே தீபன்….அதோட கண்டிப்பாய் இப்போதிருக்கும் பொருளாதார ப்ரச்சனை வேறு அப்போது இருக்காது……

அப்ப அதிபன் எதுக்காக இவளைப் பார்த்து இரக்கப்படுவானாம்?  ஆக கண்டிப்பா அப்போ அவனோட இரக்கம் போய்டும்….

என்னதான் நான் தமிழ் பேசி தமிழ் கலாசாரம் சொல்லி வளர்க்கப் பட்டிருந்தாலும்……நான் எல்லா வகையிலும் இங்க இருக்கவங்க மாதிரிலாம் கிடையாது……கண்டிப்பா ஒன்றிரண்டுலயாவது வித்யாசம் இருக்கும்…..

அப்போ அதிக்கு நான் ஒரு white ன்றதுதான விஷயமா தெரியும்….? அடிப்படையில அவனுக்கு அந்த இனம் மேல இருக்ற கோபம் அடுத்து எங்க லைஃபை என்ன செய்யும்????

பலவீனமே இல்லாத மனிதர்கள் யாருமில்லைதான்….அதுவும் மற்ற எந்த வகையிலும் தீபனிடம் குறை காணவும் முடியாது….ஆனால் அவனது இந்த பலவீனம்???? நான் இந்த நாட்டுப் பொண்ணா இருந்தா இப்பவே அவன மேரேஜ் செய்துக்க சரின்னுடுவேன்….. ஆனா நான் நானா இருக்றதால கண்டிப்பா அவன மேரேஜ் செய்யக் கூடாது…அது ரெண்டு பேர் லைஃபையும் நரகமாக்கிடும்…..கூடவே சுத்தி இருக்கிற ரெண்டு பேர் குடும்பத்து சந்தோஷத்தையும் கூட கெடுத்துடும்….

இப்படித்தான் அவளால் முடிவுக்கு வர முடிந்தது…..

அன்று இரவு வரையும் அவள் இதை எத்தனையோ முறை எப்படியெல்லாமோ யோசித்துவிட்டாள்…..ஆனால் வேறு எந்த முடிவும் அவளுக்கு சரியாய் படவில்லை….. ஆக இரவு அழைத்து அவனுக்கு தன் முடிவை சொல்லி வைத்தாள்….

ஏன் தேவையில்லாத நம்பிக்கையை இவர்களது நலம் விரும்பும் அத்தனை பேர் இதயத்திலும் வளர விட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு…..

உணர்ச்சி வசப்பட்டெல்லாம் அவள் பொரிந்து தள்ளவில்லை…வெகு நிதானமாகவே முடிவைச் சொன்னாள்…. ஆனால் முடிவிற்கான காரணத்தை மட்டும் அவள் விளக்கவில்லை…

ஏற்கனவே ஒரு முறை அவனிடம் கிட்தட்ட இதைப்  போல ஒரு காரணம் சொல்லி முன்பு  கோபட்டிருக்கிறாள்…. அது இவளது தவறான புரிதல்தான்…. அதனால் அதன் பின்பும் அவனோடு நட்பு பாராட்டி இருக்கிறாள்….

இதில் திரும்பவுமாய் இப்போது இதைப் போய் சொன்னால்….மீண்டுமாய் மனம் மாறி இவள் வரக் கூடும் என அவன் நினைக்க கூடும்…. No more false hopes….

அதனால் எந்த விளக்கமும் சொல்லாமல் தன் முடிவை மட்டுமாய் சொல்லிவிட்டு விலகினாள் அனு…

திபன் அவள் இவனிடம் இதைச் சொன்ன போது காரணம் ஒரு முறைக்கு பலமுறை கேட்டுப் பார்த்தான் தான்….. ஆனால்  அவள் பிடிவாதமாய் அதை சொல்ல மறுத்த போது அவன் அடுத்து அவளை கட்டாய படுத்தவில்லை….

அவனுக்கு ஒரு புரிதல் இருந்தது….. அனு இயல்பில் மென்மையான மனோபாவம் கொண்டவள்…. ஆக அவளுக்கு தனக்கு இவன் மீது விருப்பம் இருக்கிறது….. தன்னால் இரண்டாம் திருமணத்திற்கு இயல்பாய் சம்மதிக்க முடிகிறது என்பதே ஒரு வகையில் தவிப்பாய் இருக்கும்…..

அதனால் அவள்  உள்மன முடிவை அவளே ஏற்க இப்படி ஒரு  தடுமாற்றம் இயல்பே…. அதனால் தான் நேற்று மௌனமாய் மறுப்பின்றி சம்மதம் சொன்னவள்….இன்று  மறுவகையில் ஏதோ ஒரு காரணம் கண்டு மறுப்பை காண்பிக்கிறாள்…… இங்கு காரணம் பெரிய விஷயமில்லை….தடுமாற்றாம்தான் விஷயம்…அது சமனப் படும் போது அவள் இயல்பிற்கு வந்துவிடுவாள்….இவனோடு விரும்பியே இணைவாள்…..என்று புரிந்து வைத்திருந்தான் அவன்….

ஆக ஓரளவு அவன் இதை எதிர்பார்க்கவும் செய்தான்தான்…..அதனால்தான் அவன் சில வாரங்கள் போகட்டும் என வீட்டில் சொல்லி வைத்ததும்….

இந்த விஷயத்தில் அவள் விருப்பத்தை அவளே விரும்பி அதை இறுதி முடிவாக்கும் வரை அவள் மனம் அதிலேயே உழலும் என்பதால் சில வாரங்களுக்கு மேல் அவளை இப்படி இழுபட விடவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

அதிர்ச்சியின் அதிர்வு குறைந்தபின்பு அவளிடம் இதைப் பற்றி பேசும் போது எளிதாய் எல்லாம் சுபமாய் துவங்கும் என்றும் நம்பினான்…

ஆக அவளது இந்த முடிவுக்கு அவன் ஆடியெல்லாம் போகவில்லை….அதோடு மேலுமாய் அவளிடம் அதைப் பற்றி அவன் கிளறவும் இல்லை….அவளுக்கு சமனப் பட நேரம் கொடுத்தான் அவ்வளவே….

அதனால் அடுத்து வந்த நாட்களில் அவள் இவனை தவிர்த்த போது இவன் அவளை அழைத்துப் பேசக் கூட முயலவில்லை….. இவன் வீட்டைவிட்டு விலகிப் போகவே அவ்ளவு தவித்தாள் தானே நேத்து…..அந்த அன்பு இன்னமும் அவளுக்குள்ளதான இருக்கும்…..அது தன் வேலையைப் பார்க்கும்….பொறுத்துப் போனான்….

அதே நேரம் அவன் அனு இப்படியாய் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என தன் வீட்டில் சொல்லி எல்லோரையும், குறிப்பாக அவனது அம்மாவை  கொந்தளிக்க விடவும் அவன் விரும்பவில்லை…..எப்படியும் நடக்கப் போகும் திருமணம்….இதில் இவன் அம்மா இருக்கும் உடல் நிலையில் எதற்கு இந்த தேவையில்லா தவிப்புகளை அம்மாவிற்கு தரவேண்டுமாம்??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.