(Reading time: 23 - 45 minutes)

க அவன் இதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை….

இதில் இவன் எதிர்பாராமல் நடந்த விஷயம் என்னவென்றால்….. பவியின் வீட்டிலிருந்து திருமணத்திற்கு சம்மதம் வரும் போது கூடவே இன்னும் 23 நாட்களில் திருமணம் என தேதியும் வந்ததுதான்…..

பொதுவாக திருமணம் என்றால் நிச்சயத்திற்கு பின் மூன்று மாதமாவது நேரம் எடுத்துக் கொள்வது இயல்பு….

யவி திருமணம் வேகமாக நடந்தது என்றால் நிலவினி அக்கா ஊருக்கு செல்லும் முன்னால் நடந்தா நல்லா இருக்கும் என பெண் வீட்டில் குறிப்பிட்டதும்…அப்பதான் ஹாஃஸ்பிட்டல்ல இருந்து வந்திருந்த உடல் நிலையும் தான் காரணம்….

இப்போது எல்லாம் இயல்பா இருக்றதால இயல்பாய் 3 மாத காலத்தில் நடக்கும் என இவன் எண்ணி இருந்தான்….. ஆக அதற்குள் அனுவும் சமனப்பட்டிருப்பாள்….அபயன்  பவி திருமணத்திற்கு ஒன்று இரண்டு நாள் முன்பு இவர்களது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என இவன் நினைத்திருக்க….

 இப்படி மூன்று வார டைம்மிற்குள் இவன் திருமணம் முடிந்தாக வேண்டும் என்று வந்து நின்றது சூழல்….

இப்போது இவனால் வீட்டில் பேசாமல் முடியாது…..

பவி வீட்டில் பல பல சூழலுக்கு மத்தியில் இப்படி சம்மதம் வந்திருக்க….அதை தள்ளிப் போட சொல்ல இவனுக்கு விருப்பம் இல்லை….வேற எதுவும் ப்ரச்சனையாகிடக் கூடாதே….ஆனால் அதற்காக இந்த சூழலில் அனுவை கட்டாயப் படுத்தவும் இவன் விரும்பவில்லை….. அவள் தன் மனம் உணர்ந்து இவனோடு சேர்வதுதான் எல்லா வகையிலும் சரியாக இருக்கும்….

ஆம் அனுவிடம் இவனது அம்மாவோ கனி ஆன்டியோ இந்த திருமணத்திற்காக அழுதுவிட்டால் கூட இவன் மீது விருப்புற்றிருக்கும் அவள் மனம் அதைக் காரணமாக காட்டி இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டு….பின்பு அதனாலேயே இவனோடு திருமணத்திற்குப் பின் மனம் குமைவாள் என எண்ணினான் இவன்…..

ஆக அபயனின் திருமணத்தை முதலில் நடத்த சொன்னான் இவன்…. வீட்டினர் கனவில் முதல் திரை விழுந்தது அப்போது….

ஏன் என்னாச்சு என கேள்வி வரும்தானே அனைவரிடமிருந்தும்….. அது வந்தது…..

“பெருசா  ஒன்னுமில்ல…..கொஞ்ச நாள் போகட்டும்….” என்பதைத் தவிர இவன் என்ன காரணம் சொல்லிவிட முடியும்?

அதைத்தான் சொல்லி வைத்தான்…. அதுவும் அழுத்தம் திருத்தமாக…. இதுக்கு மேல இப்போதைக்கு இதைப் பத்தி பேச வேண்டாம் என்பது அதன் பொருள்….

அவன் எப்போதும் அப்படித்தான் அவன் சொல்ல நினைப்பதை மட்டுமே வெளியே சொல்பவன்…. அதற்கு மேல் அவனை பெரிதாக துருவி யாரும் எதையும் தெரிந்து கொள்ளவெல்லாம் முடியாது….

ஆக அவனது இந்த தொனியில் யாரும் அதற்கு மேல் விஷயத்தை இவனிடம் பேச முடியவில்லை என்பதோடு……

கூடவே “இங்க இருந்து யாரும் அங்க போய் அனுட்ட இதைப் பத்தி எதுவும் கேட்டுட்டு இருக்காதீங்க….”  என அவன் இட்ட அடுத்த கட்டளையில்

திருமணத்தை தள்ளிப் போடுவது இவனா அனுவா யார் முடிவு என்று வேறு குழம்ப வேண்டியதானது….

ஏற்கனவே எத்தனை கனவுகளுக்குப் பின் கை கூடாமல் போயிருக்கிறதாம் இவன் திருமணம்…..அதில் இவனுக்கு முன்பாக தன் பிடிவாதத்தால் இளையவனுக்கு வேறு திருமணம் செய்து வைத்திருந்த தாய் மனம் இப்போது இந்த பதிலில் என்னவெல்லாம் நினைக்குமாம்….? பதறிப் போனார் மரகதம்….

‘திரும்பவும் இவன் கல்யாணம் நிக்க போகுதோ?’

“அது என்ன….கொஞ்ச நாள் கழிச்சு அவள கல்யாணம் செய்றதுக்கு இப்பவே செய்தா என்ன…?” குமுறலும் இயலாமையும் கோபமும் ஏமாற்றமுமாயும் இவர்…..

அடுத்து அவர் சென்று நின்றது கனிமொழியிடம்….. என் பையன் என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன்கிறான்…. அதனால உன்ட்ட கேட்க வந்தேன் என அனுவிடம்  போய் நிற்க அவரால் முடியாது…..

அது மகனை அவமதிக்கும் ஒரு செயல் அவரைப் பொறுத்தவரை….

அனுவோ விஷயத்தை அதிபனிடம் சொல்லி விட்டதால் எப்படியும் இதற்குள் மரகத்திற்கு தெரிந்திருக்கும் என நினைத்திருந்தாள்….. அதோடு கனிமொழியிடம் ஏனோ இன்னும் இதைக் குறித்து பேசும் சூழல் அவளுக்கு அமையவில்லை… ஆக  இவள் இன்னும் தன் முடிவை அவரிடம் சொல்லி இருக்கவில்லை….

உண்மையில் கனிமொழி அனு மனம் குழப்பத்தில் இருக்கிறது….அதிபனை எதற்காகவோ அவள் தவிர்க்கிறாள் என்பதை அன்று நீரா விஷயம் பேசி முடிக்கவுமே புரிந்து கொண்டார்…. இந்த விஷயத்தில் அவர்  எண்ணமும் அதிபனை ஒத்தே இருந்தது……அவளாக சமனப் படும் போது அவள் தன் மனதை புரிந்து கொள்வாள்… அதன் விருப்பத்தை ஏற்றும் கொள்வாள் என நினைத்தார்…. இப்போது இவளது ஒவ்வொரு குழப்பத்திற்கும் இவர் பதில் சொல்லிக் கொண்டே போனால்……இறுதியில் இவர் வார்த்தைக்காக அவள் இந்த திருமணத்திற்குள் நுழைந்தது போல் இருக்கும்….அது நல்ல மணவாழ்க்கைக்கு அடிப்படையாய் அமையாது என நம்பினார் அவர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.