(Reading time: 15 - 30 minutes)

!!!! வலிக்குதே!!! “ ஷணு அலற, “ அச்சோ, என்னச்சு? எங்க வலிக்குது அக்கா? “ பதறினாள் மகி.

“ நீ விட்டியே ஒரு அனல் பறக்கும் அம்பு, அது இந்த பக்கம் ரிசீவ் ஆகி, காதை குத்திடிச்சு, ஸ்ஸ்.. அதான் வலிக்குது “ சிரிப்புடன் ஷணு சொல்ல,

“ தூரமா இருக்கீங்கனு தைரியமா பேசுரீங்களா!!! எஃக்ஸாம் முடியட்டும், வந்து அந்த காதைக் கடிக்குறேன் பாருங்க.. ”

“ ஏன்டீ என்னாச்சு? வாய்ஸ் வழக்கத்தை விட ரொம்ப சுடுற மாதிரி இருக்கு? “

“ அப்படியெல்லாம் இல்லையே. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? “

“ இப்போவாவது கேட்டியே!! ஆல் ஆர் ஃபைன் டா. இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல அவரும் வந்திடுவார். வேயிட்.. “

“ இல்லக்கா டைமாச்சு. நான் சீக்கிரம் கிளம்பி ஸ்கூல்க்கு போகலைன்னா. எங்க அம்மாக்கு பி‌பி எகிறிடும். இப்பவே அவங்க அலார்ம் வச்ச மொபைல்ல காணோம்னு தேடிட்டு இருப்பாங்க. ஹீஹீ,..உங்க அவர்ட்ட அப்பறம் பேசுறேன். பைக்கா “

“ ஹா..ஹா..கே‌டி வாலு. பை டேக் கேர் “

ஷணுவிடம் பேசியது நல்ல ஒரு மறுதலாக இருக்க, அன்றைய நாளை உற்சாகத்துடன் ஆரம்பிதாள் மகதி.

ஆனால், பாவம் ஷணுவோ இங்கு கண்ணனை ஆஃபிஸிற்கு கிளப்ப போராடிக்கொண்டு இருந்தாள். சும்மாவே அவளை விட்டு நகர மறுக்கும் அவன், இன்று அவளின் தாய்மை உறுதி செய்யபட போகிற பூரிப்பில் நிலைக்கொள்ளாது அலைந்தான். பின் அவள் தான், ஈவினிங் தான் அப்பாய்ன்மெண்ட் அது இது என சொல்லி கஷ்டப்பட்டு அனுப்பி வைத்தாள்.

அப்பொழுது தான் காலையில் இருந்து கிச்சன் சைட் போகாததே நினைவில் வர, மகேஷ்வரியைப் பார்க்க கிளம்பிவிட்டாள்.

“ குட் மார்னிங் அத்த!! “

“ வாவ்.. செம்ம பாஸ்ட் மதிமா,  இன்னும் 1 ஹவர் கழிச்சு மொத்தமா குட் நூன் சொல்லிருக்கலாம் “ என்று சிரித்தார்.

“ நான் என்ன செய்ய அத்த, குழந்தைய ஆஃபிஸ் கிளப்ப நேரம் ஆகிடுச்சு.. “

“ ஹா ஹா, அவனே குழந்தையா? “

“ ஆமா, உங்க குழந்தை தானே “ என்று கண்ணடித்தாள்.

அவள் தலையில் லைட்டாக ஒரு குட்டு வைத்த மகேஷ்வரி, “ அப்ப, இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு குழந்தை வர போறாங்ளே, அவங்கள எப்படி சமாளிக்க போற ? என்றார்.

“ சிம்பில் அத்தை. உங்க குழந்தைய வச்சு என் குழந்தைய சமாளிச்சுட்ட போச்சு “

“ ம்‌ம்‌ம்‌ம்‌ம்.. நீ கெட்டிக்காரி... ரொம்ப சந்தோஷமா இருக்குடா. இன்னைக்கு ஈவினிங் செக்-அப் முடிச்சுட்டு வா. உனக்கு திருஷ்டி எடுக்கனும் “

“ சரிங்கத்த... அப்புறம் மகி கால் பண்ணியிருந்தாள். இப்போ ப்ரக்டிக்கல் எக்ஸாம்ஸ் வரபோகுதாம். எல்லாத்தையும் முடிச்சுகிட்டு, டூ மன்த்ஸ்ல வராலாம் “

“ ஓ!! மேடத்தை சீக்கிரம் வர சொல்லு. அவள பார்க்காம ரொம்ப போர் அடிக்குது “

“ பட், அவளுக்கு தான் இங்க வந்தால் ரொம்ப போர் அடிக்கும்னு ஃபீல் பண்றா “

“ யாரு மகியா? அவ அப்படி சொல்லி இருக்க மாட்டாளே! “

“ நிஜமா தான் அத்தை. அவளுக்கு ஹரி இல்லாம போர் அடிக்குமாம். சண்ட போட ஆள் கேக்குறா “ ஒரு மர்ம புன்னைகையுடன் உரைத்தாள் ஷண்மதி.

“ அவளுக்கு ஹரி இல்லாம போர் அடிக்கும, உண்மை தான். ஆனால் சண்டை போடணும்னு கேட்டு இருக்க மாட்டாள். நீ விளையாடுறேனு இதுலயே தெரியுது “

“ ஓவர் கான்ஃபிடன்ஸ், உடம்புக்கு ஆகாது அத்த. அவங்க ரெண்டு பேரும் சண்ட போடாமல், ஹைட் அண்ட் சீக்-ஆ விளையாடுறாங்க. எப்ப பாரு சண்டைதான். நான் வேற அவங்க முன்ன நிகழ்த்திய சாகசங்கள் எல்லாம் கேட்டு, இந்த தடவை லைவ்ல பார்க்கலாம்னு நினைச்சேன் “

எப்பொழுதும் தன்னிடம் வாதிடாத மருமகள் இன்று இப்படி விடாபிடியாக பேசுவதை வைத்தே அவருக்கு புரிந்துவிட்டது, அவள் தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறாளென்று. அவளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்பவராக பதிலுரைக்க ஆரம்பித்திருந்தார் மகேஷ்வரி.

“ அவங்க ரெண்டு பேரும் எப்போவும் சண்ட போடுறாங்கணு யார் சொன்னா? அவங்களை நீ பார்த்த சூழ்நிலை, ஒரு சில விஷயங்களால அப்படி மைண்ட் செட் பண்ணிட்ட போல. முதல்ல பார்கிற எல்லாருக்கும் அப்படி தான் தோணும். எங்களுக்கே ஆரம்பத்துல கொஞ்சம் பயமா தான் இருந்தது. என்னடா இந்த ஹரி பையன் எப்ப பாரு மகி கூட சண்டை போட்டுட்டே இருக்கானேனு இருக்கும். அதேபோல இவளும் சளைச்சவள் இல்லனு காமிக்க, அவன் ‘ம்’‌ னு சொல்றதுக்கு முன்னாடி சண்டைக்கு நிற்பாள். ஆனால் நீயே கவனிச்சு பாரு, அவங்களுக்குள்ள என்ன சண்டைனு நம்மகிட்ட காமிச்சுகவே மாட்டாங்க. நம்ம போய் பஞ்சயத்து பண்ணவும் விடமாட்டாங்க. மகி கண்ணனுக்கு பெட், ஆனால் ஹரி போல நடந்துக்க ட்ரை பண்ணுவாள். இது போக போக தான் புரிஞ்சுது. அதேபோல கண்ணனை விட ஹரிக்கு தான் மகி மேல அன்பு ஜாஸ்தி. அவள யாரும் எதுவும் சொல்ல விட மாட்டான். மகியும் அப்படி தான். ஆனால் பிரச்சனை என்னனா, இதை ரெண்டுபேரும் ஒத்துக்கவே மாட்டாங்க...... நாங்க என்ன நினைக்குறோம்னா.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.