(Reading time: 15 - 30 minutes)

ப்போ நான் அவள போர்ஸ் பண்றேனு சொல்றீங்களா? “ என்று மோட் -ஐ மாற்றி கணவனிடம் சண்டைக்கு ரெடி ஆனவரைத் தடுத்தாள் அனன்யா.

“ பெரியம்மா, அக்கா என்னைக்கு பேசிக்குதுனு கேட்டிருக்கா! அவளுக்கும் சேர்த்து நானே சப்டுகுறேன். அக்காக்கு ஏதோ பேக் பண்ணிருக்கேனு சொன்னிங்களே, அத எங்க வச்சு இருக்கீங்க? ப்ரேக்ல பசிக்கும்போது சப்டுகுறேன். எடுத்து தாங்க.. ”

“ அடிப்பாவி!!!!!! எனக்கா பசிக்காது..??? உங்க பெரியம்மாக்கு சப்போர்ட் பண்றேனு என் இமேஜை ஏன்டி டேமேஜ் பண்ற எருமை. இன்னும் டென் டேஸ்ல உனக்கும் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகும்ல. அப்போ சித்திகிட்ட உனக்கு எவ்ளோ அட்வைஸ் மழை பொழியுதுணு நானும் பார்க்குறேன் “

“ நாங்கல்லாம் விவரமுங்கோ யக்கோ!! மொழி பட பிரித்திவ்ராஜ் மாதிரி காதுல ஒரு பண்டல் பஞ்சு வச்சு, கேப் போட்டுட்டு மண்டைய மட்டும் ஆட்டிக்கிட்டே இருப்பேன்.. பாத்துக்கோ யக்கக்கோ!!!! “

“ அதையும் பாக்கலாம்டி ” பெர்பெக்ட் என்ரி கொடுத்த விஜயலக்ஷ்மி சௌண்ட் விட,

“ ஹி ஹி... சும்ம்‌ம்‌ம்‌ம்‌ம்மா சொன்னேன்மா..” நழுவினாள் அனு.

“ அதானே என் சித்திய பார்த்தா அவ்ளோ டெரர்ராவ தெரியுது..... !! சித்தி இவள நம்பாதீங்க, கண்டிபா, இவ எதாதும் பிளான் வச்சிருப்பா. பிடிங்க.. ” விடாமல் போட்டுக் கொடுத்த மகதியை, ‘நீ வெளில வாடி, வச்சுருக்கேன் உனக்கு’ என்று பார்வையால் வார்ன் செய்தாள்  அனன்யா.  

“ விட்டால் பேசிட்டே இருப்பீங்க, மகி கிளம்பலாமா? “ என்று வேகப்படுத்தினார் சங்கரன். அவருக்கு தெரியும், இந்த பேச்சு வட்டம் மாதிரி.. எங்கு சுத்தி எங்கு போகுமென்று.

“ சரி, சரி கிளம்பு!! “ என்று அனைவரும் ஒருவாறு மகிக்கு விடை கொடுத்த சமயம், சரியாக அடித்தது சங்கரனின் அலைபேசி.

“ ஹூ இஸ் தி டிஸ்டர்பன்ஸ்? “ எதோ ஒரு பட்சி மகதிக்குள் அலார்ம் அடிக்க, டிஸ்டர்பன்ஸை ப்ரெடிக்ட் செய்தே கேட்டாளவள்.

“ ஹரி பேசுறான்டா.. ஒன் செகண்ட் “ என்று சங்கரன் நகர்ந்து, சில நொடிகளில் திரும்ப வந்தார்.

“ இந்த அம்மு உன்கிட்ட தான் பேசனுமாம் “ என்று மகியிடம் மொபைலைக் கொடுத்தார்.

நம்மிடம் ஆயிரம் சண்டை போட்டாலும், அரை நொடி கூட பேசாமல் இருக்க முடியாத உறவைத்தான் நம்மில் பலர் ஈகோக்கு பலி கொடுத்து மீண்டும் அதனைத் தேடி தோற்கிறோம். ஆனால், இங்கு இவர்களின் சண்டைகளுக்குள் இருக்கும் இவர்களின் ஈகோ தான் இவர்கள் உறவுக்கு அழகுசேர்க்கிறதோ.. ‘அவளிடம் சண்டைப் போட்டு என்ன சாதிக்க போறோம்?’ என்று அவன் இறங்கி வந்தாலும், ‘அவள் வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏறுவாள்’ என்ற பயதிலும் அவள் படிப்பின் மேல் உள்ள அக்கறையிலும் எல்லோரிடமும் பேசும்பொழுது அத்தி பூத்தாற்போல அவன் அவளிடம் எப்போதாவதாவது ஓரிரு வார்த்தைகள் பேசுவது உண்டு. சுருக்கமாய் சொல்ல போனால் ஒரு ஸ்வீட் கியூட்  இரிடேடிங்க் லவ்வபில் ஃப்ரெண்ட்ஷிப். ஆனால் இன்று ‘உன்னிடம் தான் பேச வேண்டும்’ என்று கூப்பிட்டு இருப்பவனிடம் அவ்வளவு எளிதில் பேசிவிடுவாளா என்ன?   

“ ஹலோ “

“ ஹலோ.. “

“ ஹல் ஹல் ஹல்லோ “

என்டயேவா.. இருடா மகனே...,  “ ஹல் ஹல் ஹல்லோலோலோ.......... ”. 

“ கேட்கலைனா தள்ளி போய் பேச வேண்டி தானே! ஏன் ‘லோ லோ’னு கத்துற.. அங்கிட்டு போக்கா “

‘அவன் வைப்ரேஷன் இங்க வர வருது! அவன் பெட் இல்லையா நீ.. இருடி உன்ன வந்து கவனிச்சுக்கிறேன்’ என்று  எண்ணிக்கொண்டு மொபைலை தூக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி வந்தவள், பேசாமல் சில நொடிகளை கடத்த…..

“ எதாதும் பேசுடி, பில்லு எகுருது “ ஹரி சீண்டினான்.

“ கஞ்ச பிசுனாரி, இவ்ளோ நாளா போனையே காணோம். இன்னைக்கு என்ன அதிசயமா கால் பண்ணிருக்கீங்க? “

“ எல்லாம் மாமா பொண்ணு மேல உள்ள பாசத்துல தான் “

“ பிராடு! யாரை ஏமாத்துறீங்க ? “

“ படிக்கிற பிள்ளைய எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு ஒரு நல்ல எண்ணத்துல கால் பண்ணாமா இருந்தால், அதுக்குள்ள கஞ்ச பிசுனாரினு டைட்டில் கொடுத்துருவீங்களே..      என்ன உலகமடா இது!! நல்லதுக்கே காலமில்லடா ஹரி!! “

“ ஓஹோ!!! அப்ப இப்போ எதுக்கு கால் பண்ணீங்கலாம்? “

“ எக்ஸாம்க்கு போற பொண்ணுக்கு ‘அல் தி பெஸ்ட்’ சொல்லதான் “

“ ஏன்.. அதை இன்னும் நாலு அஞ்சு மணி நேரம் கழிச்சு சொல்லவேண்டி தானே!! “

“ அடிப்பாவி, உனக்காக அலார்ம் வச்சு நடுராத்திரில பேய் மாதிரி எழுந்து பேசிட்டு இருக்க ஒரு நல்ல நல்லவனை பார்த்து கேக்குற கேள்வியா இது? “

“ ஆமா ரொம்ம்‌ம்‌ம்‌ம்ப நல்லவர் தான் “

“ ஒத்துக்கிட்டால் ஓகே தான்..... எப்படி இருக்க? “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.