(Reading time: 15 - 30 minutes)

ம்‌ம்‌ம்‌ம்.. நல்லா இருக்கேன் “

“ சரி எக்ஸாம்க்கு நல்லா ப்ரிப்பேர் பண்ணி இருக்கியா? என்னனாலும் ரிலாக்ஸா எழுது. ஓகே வா? “

“ சரிங்க நல்லவரே...... அப்புறம் ஸார் எப்படி இருக்கீங்க?

“ எனக்கென்ன ராஜா மாதிரி என்ஜாய் பண்றேன் “

“ ஆமா ஆமா.. அத்தை சொன்னாங்க, யாரோ ஒரு பையன் லாஸ்ட் மன்த் ஹோம் சிக் ஆகி.. அத்தைகிட்ட ரொம்ப பீல் பண்ணாராம். ‘மம்மி உங்களைப் பார்க்கனும்’னு..பட் நீங்க யாரு! எவ்ளோ பெரிய ஆளு! “

“ ஹேய், எக்ஸாம் போற பொண்ணு.. எதுக்கு டைம் வேஸ்ட் பண்ற! சீக்கிரம் ஓடு போ போ.. “

“ அந்த பயம் இருக்கணும் “

“ நானும் ரௌடி தான். இங்க பப்.. பார்னு எவ்ளோ என்ஜாய் பண்றேன் தெரியுமா? நம்பு மா நம்பு.. “

“ யாரு நீங்க தானே! மழை கலத்துலயே  காஃபிய கூட ஆறவச்சு குடிக்கிற கேஸ். அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க.. போயா யோவ்.. “

“ உண்மையா தான். எனக்கு இங்க எத்தனை கேர்ள் ஃபிரண்ட்ஸ்.. தெரியுமா? “

“ ஷப்பா...... முடியல.... துரத்தி துரத்தி லவ் சொன்ன நிஷாவையே அட்வைஸ் பண்ணி துரத்திவிட்ட ஆள் நீங்க. இதுல அங்க உங்களுக்கு  ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸாம்.. அதை நாங்க நம்பனுமாம்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ஸார். போங்க... போய் ரீமைனிங்க் தூக்கத்த கண்டினியூ பண்ணுங்க “

“ நிஷா விஷயம் உனக்கு யார் சொன்னா? எப்ப தெரியும் உனக்கு? “ என்று அவன் சரியாக பாயிண்ட்டை பிடிக்க,

இவளோ ‘ஆகா! மகி வாய விட்டுடியே.. எப்படியாவது எஸ் ஆகிருடி’ என்று மைண்ட்வாய்ஸ் விட்டு கொண்டிருந்த சமயம், அந்த வாய்ஸ்ஸை அவன் ‘ஹலோ ஹலோ’ என்று  கலைக்க..

“ அப்பா கூப்பிடுறாங்க அத்தான். எக்ஸாம்க்கு டைமாச்சு. நான் ‌அப்பறம் பேசவா? “ என்று அந்த டாப்பிகிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

எந்த விஷயத்திலும் அவள் இறங்கி போனாலே உருகும் இவன், அவளின் அத்தான் என்ற அழைப்பில்,

“ சரி சரி, நல்லா பண்ணு.. அல் தி வெரி பெஸ்ட் “

“ ஓகே ஓகே டாட்டா “

“ பைடா, டேக் கேர் “

“ யு டூ டேக் கேர்டா கருவாயா “

“ ஓகே குண்டு “

“ போடா பை “

“ பை பை “

இருவரின் மனநிலையும் இனிமைகளைச் சுமந்து தனது வேலைகளைப் பார்க்க சென்றது.

உண்மையில் ஹரி மகி உறவு தான் என்ன? நட்பா? காதலா? ஈர்ப்பா? நேசமா? இதில் எதில் இருக்கிறோம் என்று அவர்களே அறியவில்லை. நட்புக்கும் காதலுக்குமான இடைவேளியில் நிற்கும் இந்த உறவில், அதை முதலில் கடக்க போவது அவளா?? அவனா ?????????

     Love Is A Language Spoken By Everyone But Understood Only By Heart

சண்டைகள் தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.