(Reading time: 15 - 30 minutes)

ன்ன என்ன நினைக்குறீங்க??? “ ஆர்வதுடன் கண்கள் மின்ன கேட்கும் மருமகளை ரசித்தவாறே,

“ ம்ம்ம்... ஒன்னுமில்ல..பாப்போம், ஹரிக்கு வரபோகிறவளும் உன்னை மாதிரி தங்கமா அமஞ்சுட்டால் சந்தோஷம் தான் “ என்றார்.

“ அத்த, எனக்கு கிட்னி பெருசு. உங்க எல்லார் ஆசையும் என்னவா இருக்கும்னு லைட்டா டவுட் இருந்துச்சு. இப்போ இந்த ஸ்டேட்மெண்ட் தெளிவா சொல்லிருச்சு “

“ நீ பிழைச்சுக்குவடா “

“ மிக்க நன்றி “

“ அப்புறம் நெக்ஸ்ட் டைம் அத்தைட்ட இப்படி போட்டு வாங்காம, என்னனாலும் டைரக்ட்டா கேட்கலாம் “

“ அத்தை!!!!!!!!!! “

“ ஷாக்க குற.. ஷாக்க குற.. “

“ க க க போங்கள்............ “

“ மருமகளே, எனக்கு ஒரு டவுட் “

“ என்னங்க அத்தை? “

“ நாம ரெண்டு பேரும், சிலபஸ் படி நடக்க மாட்டேங்குறோமே. ஐ மீன் மாமியார் மருமகள் டிஷ்யும் டிஷுயும்... ஒன்னுமில்லயே “

“ அத்த, அவுட் ஒப் சிலபஸ் ஃபாலோ பண்ணாதான் ஃபுல் மார்க் கிடைக்கும். இப்படி எதாவது நினச்சு மனசைத் தேத்திக்கோங்க “

“ ஹா ஹா..... அப்ப ஓகே. போய் ரெஸ்ட் எடு “

“ எதாதும் ஹெல்ப் அத்த? “

“ வேணாம்மா, நானே இப்போ முடிச்சுடுவேன். நீ ரெஸ்ட் எடு, போ “

“ சரிங்க அத்தை “

ஷண்மதி எல்லோர் மனதில் இருப்பதையும் எளிதில் கண்டுபிடிக்கும் பெண்ணாக தான் அவருக்கு தோன்றினாள். இது நாள்வரை ஹரி மகி பற்றி யாரிடமும் சொல்லாமல் தன் மனதில் வைத்திருந்ததை கண்டுபிடித்துவிட்டாள் என்று தோன்ற ஆரம்பித்தது மகேஷ்வரிக்கு.

ஆனால் அவரின் ஆசை நிராசையாய் போகலாம் என்று அவர் உணரும் நொடி, அவர் நிலை  என்னாகுமோ????????

அன்று மாலை ஷண்மதியின் தாய்மை உறுதிசெய்யப்பட, சந்தோஷ சூழல் அனைவரையும் சுற்றிக்கொள்ள என்று வாழ்க்கை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல துவங்கியது.

கதியும் இப்பொழுது பீர்பால் டெக்னிக்கை ஃபாலோ பண்ணுவதால், ஹரியுடன் உள்ள பிரச்சனையை யோசிக்க கூட நேரம் கிடைக்கவில்லை. அதாங்க ஒரு கோட்டை அழிக்காமலே அந்த கோட்டை சின்னதாக்க பக்கதுலயே ஒரு பெரிய கோடு வரையுறது. ஸோ, பொண்ணு இப்ப படிப்புல கவனம் செலுத்துறதால, ஹரி பற்றி எப்பவாச்சும் தான் எதாதும் தோணுதாம்.

இதோ இன்று அவள் பொது தேர்வை எதிர்க்கொள்ள சென்றுகொண்டு இருக்கிறாள்.

“ அம்மு ஹால்-டிக்கெட் பென் பென்சில் ஸ்கேல் எரேசர் எல்லாம் எடுத்து வச்சுகிட்டியா? டென்ஷன் இல்லயே? டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா எழுதுடா. நல்லா பண்ணனுமென்ன! எக்ஸாம் டென்க்கு தானே ஆரம்பிக்கும், அம்மா டிஃபன் ஸ்நாக்ஸ் எதாதும் பேக் பண்ணித் தரவா? எக்ஸாம் போறதுக்கு முன்ன சாப்டு போலாம்ல “ குடும்பம் மொத்ததிற்குமாய் சேர்த்து ஒருவராய், டென்ஷனின் முழு உருவமாய் நின்றிருந்தார் பார்வதி.

“ அம்மா, ரிலாக்ஸ். காலைல இருந்து எதுக்கு இவ்ளோ டென்ஷன். ஜில் மா “ என்று தன்னால் முடிந்த அளவு தனது அன்னையை கூல் பண்ண முயன்றாள் மகள்.    

“ ஏன்மா அவ என்ன பிக்னிக்-ஆ போற! சாப்பாடு கட்டி தரவானு கேக்குற.. விட்டா நீயே போய் அவளுக்கு பதிலா எக்ஸாம் எழுதிடுவ போல... விடு பாரு. இப்போ எதுக்கு நீயும் டென்ஷனாகி அவளையும் டென்ஷனாக்குற. அவள் எல்லாம் கரெக்ட்டா பண்ணுவா நீ சும்மா இரு “

“ நீங்க சும்மா இருங்க. அவளுக்கு சப்போர்ட் பண்றேனு செல்லம் கொடுத்து கெடுக்குறதே நீங்க தான். எனக்கும் ஆசை இருக்காதா! நம்ம பொண்ணும் நல்ல மார்க் வாங்கணும், நான் அத நாலு பேர்கிட்ட சொல்லி பெருமை படணும்னு.. “ சலித்துக் கொண்டார் பார்வதி.

“ எதுக்கு இந்த வெட்டி பெருமைகுறேன்..... ஊருல இருக்கவங்க, வீட்டுல இருக்க பிள்ள எக்ஸாம் போறதுக்கு முன்ன ஒரு கத பேசுவாங்க.. ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம் இன்னொன்னு.. எல்லாம் கொஞ்சம் நாளுக்கு தான்.. அப்புறம் அதையும் மறந்துடுவாங்க. .ஊருக்காக வாழக்கூடாதுமா “

“ ஏன் என்னால் பண்ண முடியாததை, என் பொண்ணு பண்ணணும்னு ஆசை படக்கூடாதா? “

“ கூடாதுனு இல்ல. அவ அவளுக்கு பிடிச்சதை செய்தா தானே அவ லைஃப் நல்லா இருக்கும். முக்கியமா நம்ம ஆசைகளை பிள்ளைங்க மேல என்னைக்கும் திணிக்ககூடாது “

சங்கரன் இப்படி தான். மகளின் படிப்பில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் அவளுக்கு வேண்டிய அளவு சுதந்திரம் கொடுப்பவர். மகியோ, எந்த முடிவு எடுத்தாலும், அவரின் ஃபீட்பேக் இல்லாமல் அதனை மூவ் பண்ணமாட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.