(Reading time: 9 - 17 minutes)

ரே கேள்வியில் ஒட்டுமொத்த தன் ஆணாதிக்கத்தையும் அடக்கியது போல் உணர்ந்தான் திலீப்….

இந்த கேள்வியை அவள் கேட்க இதுநாள்வரை காத்திருக்கவேண்டிய அவசியம் தான் என்ன?... கேட்க வாயில்லையா என்ன?...

அவள் மௌனம் சாதித்தது எதற்காக?... கணவனை எதிர்த்து பேச தைரியமில்லாத காரணமா?... இல்லை எதிர்த்து பேசிவிட்டால் கணவனின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுமே என்ற பயமா?...

இரண்டுமே இல்லை… அவனின் மேல் அவள் கொண்ட காதல் அவளைக் கட்டிப்போட்டது…. அவன் கொண்ட காயம் அவனை இப்படி நடக்க வைத்திருக்கிறது என்றெண்ணி அவள் பொறுமையாய் போனாள்…

அவன் நடவடிக்கை மாற ஆரம்பித்தபோதே அவள் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்… பாழாய்ப்போன பெண் மனம், கணவனுக்காக பரிந்து, படிந்து போனதுதான் அவள் செய்த தீங்கா?...

இப்போதும் அந்த கேள்வியை கேட்டுவிட்டு அவள் நிம்மதியற்றவளாய்தான் அழுது கொண்டிருக்கிறாள் சமையலறையில் யாருக்கும் தெரியாமல்….

பூஜாவும் பிரேமியும், திலீப் அவளுக்கு கொடுத்த உயிரல்லவா?...!!!

அந்த உயிரை முன்வைத்து கணவனை காயப்படுத்த எந்த மனைவிக்குத்தான் எண்ணம் வரும்?...

இப்போதும் இந்த கேள்வியை கேட்க, மனமில்லை அவளுக்கு… இருந்தும் அவன் தனது தன்னிலை உணர்ந்திட அவள் இக்கேள்வியை கேட்டிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் நேர்ந்தது அவளின் குற்றமென்று சொன்னால், அவள் அதற்காக எதிர்த்து வாதிடமாட்டாள்… மாறாக விரக்தி புன்னகையே சிந்துவாள்…

ஆணே என்றாலும் அவன் சார்ந்திருப்பதும் பெண்ணைத்தான்… பிறந்து சில வருடம் பெற்றவளின் அணைப்பில்…. வளரும் சில வருடம் சகோதரியின் கைகளில்… பக்குவம் அடைந்தும் அடையாத சில வருடங்கள் தோழியில் அருகில்…

இது அனைத்திற்கும் சேர்த்தாற்போல் அவனை தாங்க வருபவள் தான் மனைவி… அதன் ஆயுட்காலம் மட்டும் அவன் காலத்திற்கும் அவனுடன் நிற்கும்… ஆம் உயிர் பிரியும் வரை மனைவியின் மடியில்….

அடுத்து அவனுக்கு கிடைக்கும் வரம் தான் மகள்… தாயிடம் வாங்காத அடியும், தங்கையிடம் கெஞ்சாத கெஞ்சலும், மகளென்ற வடிவில் கிடைக்கும்போது அதை மறுத்திடும் தகப்பன் உலகத்திலேயே இல்லை…

இவ்வளவு ஏன்?... மனைவியிடம் காட்டிடாத காதலை கூட மகளிடம் ஒட்டுமொத்தமாய் வெளிப்படுத்திடுவார்கள்…. கேட்டால், தன் பிள்ளையாம்… எனில் உன்னை நம்பி வந்தவளும் இன்னொருத்தருக்கு பெண் தானே…

உன் மகளை நீ வளர்ப்பது போல் தானே… அவளையும் அவள் தகப்பன் மார் மீதும் தோள் மீதும் போட்டு வளர்த்திருப்பார்…

மனைவிக்கு நீ இழைக்கும் கொடுமை, நாளை உன் மகளுக்கு நேர்ந்தால் நீ தாங்குவாயா?... இல்லை நடந்திடத்தான் சம்மதிப்பாயா?... மாட்டாய் தானே!!!!…

நீ துடிப்பது போல தானே, உன்னை நம்பி வந்தவளைப் பெற்றவரும் துடிப்பார்… வந்தவள் தானே என்றெண்ணி நீ அடக்க நினைத்தால், நாளை நீ செய்த பாவங்கள் யார் தலையில் விடியும்?...

உன் ரத்தம் என்றால் துடிக்கும்… அடுத்தவர் ரத்தம் என்றால் அடக்குமா?...

அநியாயமாய் இல்லையா?... சிந்திக்கவும் வெட்கமாக இருந்திடாதா?...

மனைவி என்பவள் வெறும் உடல் கொண்ட கூடா?... அடிக்க அடிக்க தாங்க அவள் என்ன உணர்ச்சியற்ற பிறவியா?... இல்லை சபிக்கப்பட்ட ஜீவனா?...

பெண் என்பவள் போகப்பொருளா?... அவளுக்குள்ளும் உணர்வுகள் இருந்திடாதா?... அதில் தன் கணவனுக்கு தன் மேல் காதல் பிறந்திடாதா என்ற ஏக்கமும் துளிர்த்திடாதா?...

காதலித்தால் பரவாயில்லை… காதல் என்ற பெயரில் சித்திரவதை அளித்தால் எப்படி தாங்குவாள் அவள்?...

ஆயினும் சரயூ தாங்கினாளே… அவள் மட்டுமா?... இன்னும் எத்தனை எத்தனையோ பெண்கள் வெளியே சொல்ல முடியாது மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருப்பது வேதனைக்கும் வலி கொடுக்கும் உண்மைகள்…

அன்னைக்கு அன்னையாய், தமக்கைக்கு தமக்கையாய், தோழிக்கு தோழியாய், மனைவி என்ற பெயரில் கணவனின் உயிருக்கு உயிராய், உடன் வாழும் பெண்மையின் மதிப்பு ஏன்  தன் கணவனுக்கு புரிந்திடவில்லை என்ற வருத்தம் இன்றளவும் பல பெண்களின் மனதில் நீங்காமல் வீற்றிருக்கும் தீயின் தழும்புகள்…

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.