(Reading time: 28 - 56 minutes)

ஜெ.என்.யு (ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டி) போறியா”

“இல்ல இங்க எய்ம்ஸ் தான்”

“அப்போ ஓகே…நான் சோனாலி நீரஜ் மூணு பேரும் பார்ட்டி அரேஞ்மண்ட்ஸ் பண்ண ரவுண்டு டேபிள் கான்பரன்ஸ் போட போறோம்"

"உங்க ஐ ஐ டி ல இருக்க அந்த கணபதி பாபா மோரியா ஆலமரத்தடியில தானே"

“அங்கேயே தான்" சித்தார்த் சொல்ல இருவரும் மீண்டும் சிரித்துக் கொண்டனர்.

சித்தார்த் ஐ.ஐ.டியில் படித்துக் கொண்டிருக்கும் போது அபூர்வாவை அடிக்கடி அழைத்துச் செல்வதுண்டு. கேம்பஸ் சுத்தி காமிடா என்றால் அந்த ஆலமரத்தை சுற்ற வைத்து காம்பஸ் சுத்தியாச்சு என்று சொல்லி அவளை சீண்டிக் கொண்டிருப்பான். “அம்மையப்பனை சுற்றினால் உலகம் சுற்றியது போல என உன் கணபதி பாபா மோரியா மட்டும் சொல்லலாம் நான் சொல்லக் கூடாதா” என்பான். அன்றிலிருந்து அந்த ஆலமரத்துக்கு “கணபதி பாபா மோரியா ஆலமரம்” என்று பெயர் வைத்தும் விட்டான்.

“ரெண்டு பேரும் இங்க தான் அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா... போங்க போய் குளிச்சிட்டு வாங்க...இன்னிக்கு சேர்ந்தே டிபன் சாப்பிடலாம்" செய்தித்தாளை விரித்தபடியே போர்டிகோவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

"சரி மாமா” என்றவள், “போடா போய் ஆன்டி டாண்ட்ராஃப் ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வா" சித்துவிடம் ரகசியமாய் சொல்லி கண்ணடித்து விட்டு வீட்டினுள் சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

“அத்தை,  மாமா இன்னிக்கு நைட் நாங்க பார்ட்டிக்கு போறோம். அங்கேயே டின்னர் சாப்பிட்டு வர லேட் ஆகும்" இரவு சாப்பிடாமல் விட்டுப் போன பால்கோவாவை சுவைத்துக் கொண்டே கூறினாள் அபூர்வா.

"எனக்கு கொஞ்சூண்டு குடேன்" கெஞ்சி கூத்தாடி ஒரே ஒரு ஸ்பூன் பால்கோவாவை வெற்றிகரமாய் அவளிடம் இருந்து கைப்பற்றிய சித்து தனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சாப்பிடுவதில் மும்மரமானான்.

"என்னமா பார்ட்டி" கிருஷ்ணமூர்த்தி கேட்க

"சித்து சொல்லலையா மாமா...புது ப்ராஜெக்ட் சைன் ஆகிருக்கு. அதான் ஐயா தாராளமா பார்ட்டி குடுக்கறாரு. என்ன மாமா நீங்க!! வயசுப் பையனை கண்டிச்சு வைக்க வேண்டாமா. பார்ட்டி கீர்ட்டின்னு சுத்திகிட்டு இருக்கான் " நமுட்டு சிரிப்புடன் சித்தார்த்தின் ரியாக்சனை  ஒரக் கண்ணால் பார்த்தபடியே கிருஷ்ணமூர்த்தியிடம் கோள் மூட்டிக் கொண்டிருந்தாள்.

"யாரும்மா அது கீர்த்தி" சிரிப்புடன் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி. பின்னே  சித்துவுக்கே தந்தை ஆயிற்றே...

சித்தார்த் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

"மாமா நீங்களும் என்ன கேலி பண்றீங்க" சிணுங்கினாள் அவள்.

"இவ ஜெனீவா போகப் போறா …சொன்னாளா!! அத மொதல்ல கேளுங்க" அவளது காதைப் பிடித்து திருகியபடியே அவனும் போட்டுக் கொடுத்தான்.

"நான் கான்பிரன்ஸ்க்கு போறேன். அப்ஸ்ட்ரேக்ட் கூட இன்னும் அனுப்பல..அனுப்பிட்டு சொல்லலாம்னு இருந்தேன் தெரியுமா" பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்லவும்

"ரெண்டும் ரெண்டு அகப்பைங்க...கோள் மூட்டிக் குடுக்கறாங்களாம். மொதல்ல ஒழுங்கா  சாப்பிடுங்க. சாப்பிடுற நேரத்துல தொண தொணன்னு பேசிகிட்டு...உங்களையும் தான் " சுசீலா கணவருக்கும் சேர்த்து ஒரு அதட்டல் போட கப்சிப் என அமைதியாக உணவை உண்டனர்.

"ஒரு கிலோ பால்கோவாவையும் ஒரேடியா மொக்குறத பாரு...ஈவ்னிங் பார்ட்டி இருக்கு. வயிறு கடாமுடான்னு சொல்லி கால வாரி விட்டுடாத  தாயே" தன் தாய் தந்தை சாப்பிட்டு எழுந்ததுமே அவளிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டான் சித்தார்த்.

"அதெல்லாம் நாங்க டாக்டராக்கும். அப்படியே கடா முடா ஆச்சுனாலும் நாங்க சைலன்ட் பண்ணிருவோம்"

"நல்ல வேளை நீ ரிசர்ச் பக்கம் போயிட்ட. கோடானு கோடி மக்கள் பிழைச்சாங்க"

"ஹலோ...நாங்க பண்ற ரிசர்ச் மக்களை மட்டும் இல்ல எல்லா உயிரையும் காப்பாத்த போகுது தெரியும்ல"

"அப்படியா அபி...என்ன ரிசர்ச் மா...அத்தைக்கு புரியுற மாதிரி சொல்றியா" கணவரை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு அபூர்வா அருகினில் வந்தமர்ந்தார் சுசீலா.

"அம்மா அதெல்லாம் அப்புறமா சொல்லுவா. இவ சுயபுராணம் ஆரம்பிச்சா ராமாயணம் மஹாபாரதம் தோத்து போய்டும்" தன் அன்னையிடம் சொன்னவன்," தட்ட குடு..போ போய் சீக்கிரம் கிளம்பு. உன்ன டிராப் பண்ணிட்டு நான் அப்படியே ஐ ஐ டி போறேன்" அவள் சாப்பிட்ட தட்டையும் சுத்தம் செய்ய எடுக்க போனவனை தடுத்தவள்

"எல்லாம் நாங்களே எங்க வேலைய செஞ்சுப்போம்" அவளே தன் தட்டை கழுவி வைக்கவும் கை நிறைய தண்ணீரை அவள் மேல் வாரி இரைந்தான் சித்தார்த்.

"பாருங்க அத்தை...சட்டை பூரா நனைஞ்சு போச்சு" அத்தையை  நடுவராக்க அவள் முயல சுசீலாவோ ‘உங்க விளையாட்டுக்கே நான் வரல’ என்று தப்பித்துக் கொண்டார்.

தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தவள்,"அத்தை நான் கிளம்பறேன்...உங்களுக்கு நாளைக்கு விவரமா என் ரிசர்ச் பத்தி சொல்றேன்...உங்க உத்தமபுத்திரன எங்கயாச்சும் பத்தி விட்ருங்க" கண்ணடித்துச் சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.