(Reading time: 28 - 56 minutes)

"பில்லி  கொசுவத்தி சுருள் அணைஞ்சு போய் ரொம்ப நேரமாச்சு" சித்தார்த் நடப்புக்கு அவளை இழுத்து வந்தான்.

"காபி ஆறி போச்சு...வேற வேணுமா" அவள் கூறவும்," அம்மா தாயே இன்னொரு மலரும் நினைவுகளுக்கு என்கிட்டே டைம் இல்ல...அல்ரெடி சோனுவும் நீரஜும் எங்க இருக்கனு வாட்ஸப் பண்ணிட்டே இருக்காங்க..நீ போய் படிக்கிற வேலைய பாரு" அவன் அவளிடம் இருந்து விடை பெற்று சென்றான்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவளை வந்து அழைத்துக் கொண்டான். பச்சை நிறத்தில் கோடுகள் போட்ட இளம் நீல நிற முழுக்கை சட்டை மற்றும் கருநீல பேண்ட்ஸ், கையில் தங்க நிற ஸ்ட்ராப்  வாட்ச் என முழு கார்ப்பரேட் கெட் அப்பில் இருந்தான் சித்தார்த்.

எப்போதும் அலுவலகம் ஆகட்டும் இது போன்ற அலுவல் சார்ந்த பார்ட்டி ஆகட்டும் பார்மல்ஸ் தான் அவன் அணிவது... ஆனால் அணிந்திருக்கும் அனைத்தும் யார் தேர்வு என்று சொல்லவும் வேண்டுமோ!!

தனது ஆடியை ஒட்டிக் கொண்டே "பில்லி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்றான்.

"எனக்கா சர்ப்ரைஸா என்ன"

"சர்ப்ரைஸ்ன்னு சொல்றேன் என்னனு கேக்குற"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

"ஏதாச்சும் மொக்கையா இருக்கும்"

"சர்ப்ரைஸ்ஸே என்னே உனக்கு வந்த சோதனை.  உன்னை மொக்கை ஆக்கிவிட்டாளே இந்த அபூர்வா பாவை" சித்தார்த் மனதில் அந்த சர்ப்ரைஸ் நினைத்து சிரித்துக் கொண்டான். இன்னிக்கு ஒரு பெரிய பூகம்பம் எதிர்பார்க்கலாம் என்பது அவன் யூகம். 

தே நாள் அந்த மலை கிராமத்தில்

ந்த சமேலி கிராமம் பசும் புல்வெளிகளுடன் ஆங்காங்கே வண்ண மலர்கள் சொரிந்து ஓர் அழகிய பட்டாடை போல காட்சியளித்தது... அங்கிருந்த சுமார் 20 , 30  குடும்பங்களின் வாழ்வாதாரமே ஆடு மேய்ப்பதும் அதன் ரோமத்தில் இருந்து குளிர் கால ஆடைகளைப் பின்னுவதும் தான்.

குளிர் காலத்தில் அந்த கிராமம் முழுவதுமே அடர்த்தியான வெண்பனி படர்ந்து விடும் ஆகையால்  அங்கிருக்கும் குடும்பங்கள் குளிர் காலத்தில் அடிவாரத்தில் இருக்கும் சம்பல் கிராமத்திற்கு இடம் பெயர்ந்து விடுவார்கள்.

அதனாலேயே அங்கிருந்த வீடுகள் எளிமையாக மரத்தினால் செய்யப்பட்டவையாக இருந்து வந்தன. மின்சாரம், தொலை தொடர்பு போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் சமேலி கிராமம் இருந்து வந்தது.

சமீரின் தந்தை அடிக்கடி சம்பல் கிராமம் சென்று வருவார். வியாபார நிமித்தம், வெளியுலக தொடர்பு நிமித்தம் என சில நேரம் அவர் அங்கேயே தங்கி விடுவதும் உண்டு.

காலைக் கதிரவன் மிக மிக மென்மையாக தனது கதிர் கரங்கள் கொண்டு அங்கு சோம்பலாய் நித்திரையில் இருந்த சிருஷ்டியை  வருடிக் கொடுத்தான். அந்த மென்மையான சூரிய ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டார் அவர்.

"மாமா எழுந்தாச்சா....கேவா" அங்கு ஓடி வந்த சமீர் அவரது கைகளில் சூடான "கேவா" பானத்தைக் கொடுத்து விட்டு சென்றான். ( கேவா கஷ்மீர் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பானம். நமது தேனீர் காபி போல அவர்கள் அதை பருகுவர்)

அந்தக் கோப்பையை கையில் பிடித்தபடி அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர்.

அருகில் ஒரு பெரிய பாத்திரம் தரையில் விழும் சப்தம் அந்த இடத்தையே அதிர செய்ய அந்த மனிதரோ எந்த வித அசைவும் இன்றி அந்த பானத்தை மெல்ல பருகிக் கொண்டிருந்தார்.

"நான் சொல்றேன் நம்ப மாட்டேங்கிறீங்க" சமீரின் தாய் கூறிக் கொண்டிருந்தாள்.

வைகறைப் பொழுதினிலே மலை அடிவார "சம்பல்" கிராமத்திற்குச் சென்றிருந்த சமீரின் தந்தை வீடு திரும்பினார். கணவரிடம் நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சமீரின் தாய் கூறவும் சமீரின் தந்தையோ சந்தேகம் கொண்டு மனைவியை கடிந்து கொண்டார்.

"நம்ம சமீர் உயிரை காப்பாத்திருக்கார். அவருக்கு காதும் கேக்கல வாய் பேசவும் முடில...சாப்பிட்டும் பல நாள் ஆச்சு போல...நேத்து மழையும் வந்திரவும் ஆட்டுக் கொட்டகையில் தானே தங்க வச்சேன்"  சமீரின் தாய் கணவரை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்.

தானே நேரில் சோதித்து பார்க்கவே சமீரின் தந்தை பலத்த சப்தத்தை எழுப்ப அவ்வாறு பாத்திரத்தை கல் தரையில் போடவும் அந்த மனிதரின் உணர்ச்சியற்ற பாவம் சமீரின் தந்தையின் சந்தேகத்தைப் போக்கியது.

"பாபா...நான் இந்த மாமாவையும் ஆடு மேய்க்க போகும் போது அழைச்சுட்டு போகவா" சமீர் கேட்கவும் அந்த மனிதரை சமீருக்கு பிடித்துப் போனதை அறிந்து கொண்ட அவனின் தந்தை சம்மதம் தெரிவித்தார்.

பல பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த மகன் என்பதில் அந்த தந்தைக்கு சமீரின் மேல் பிரியம் அதிகமாக இருந்தது...

சமீர் வீட்டு ஆடுகளையும் அவனது பெரியப்பா சிற்றப்பா மகன்கள் தான் வழக்கமாக ஓட்டிச் செல்வர். மிகவும் சிறுவனான சமீரை உடன் அழைத்துச் செல்வர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.