(Reading time: 28 - 56 minutes)

கில இந்திய அளவில் அறிவியல் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலில் தியரில் மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி சமர்ப்பிக்க அதில் இருந்து சிறந்த 20 மட்டும் இறுதி போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. சித்தார்த்தின் நவரச பாவை “The Navarasa Doll” அதில் ஒன்று. (இன்றைய talking tom க்கு எல்லாம் தாத்தா இந்த பொம்மை என்று சொல்லலாம்)

சிறு வயதில் இருந்தே வீட்டில் இருக்கும் பழைய எலக்ட்ரானிக் சாதனங்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருப்பான் சித்தார்த். ரேடியோ எப்படி பாடுகிறது, டிவியில் எப்படி படம் தெரிகிறது, டெலிபோனில் எங்கோ இருக்கும் ஒருவர் குரலை எப்படி கேட்க முடிகிறது, ஒளி, ஒலி எப்படி பயணிக்கிறது என்று அவனுக்குள் நிறைய கேள்விகள் எழும்.

அவன்  எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுத்து அதில் முழு ஈடுபாட்டுடன் தன் அறிவை வளர்த்துக் கொண்டான்.

அபூர்வாவிற்கு இதில் அவ்வளவு நாட்டம் இல்லாத போதும் சித்தார்த் புதிது புதிதாக ஏதேனும் முயற்சிக்கும் போதெல்லாம் அவனுடனேயே  அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பாள்.

"பில்லி... முடிச்சுட்டேன்...இப்போ குரங்கு டான்ஸ் ஆடும் பாரேன்" பத்தாம் வகுப்பு முடித்து விடுமுறையில் நிலாவிற்காக குரங்கு பொம்மை ஒன்றை இவனே மாற்றம் செய்து நடனம் ஆடும் குரங்காக செய்திருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

அவள் பெரிதாக உதவி என்று எதுவும் புரியவில்லை தான் என்றாலும் அவள் அருகில் அமர்ந்திருப்பதே அவனுக்குப் பெரும் ஷக்தி அல்லவா. மேலும் தனது ஆற்றலால் உருவாக்கிய சாதனங்களை முதன் முதலில் அபூர்வா தான் பார்க்க வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருந்தது.

"பில்லி...அந்த சோக போஸ் இன்னொரு தடவ குடு" சொல்லிக்கொண்டே தனது பொம்மையின் பேஸ் சென்சாரில் அந்த பாவத்தை இன்ஸ்டால் செய்து கொண்டிருந்தான்.

"எப்படிடா இதெல்லாம் செய்யுற" அபூர்வா ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாகத் தான் கேட்பாள்.

"நீ தான் இன்ஸ்பிரஷன் பில்லி...நிலா பேபிக்கு செஞ்சு குடுத்த குரங்கு பொம்மையிலிருந்து இந்த நவரச பாவை வரை"

"என்ன குரங்குன்னு சொல்றியா அப்போ"

" சரி சரி குரங்கு இல்ல நீ பில்லி தான்"

அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

"சரி வா முடிஞ்சது...டெஸ்ட் பண்ணலாமா"

"சரி சரி" உற்சாகமானாள்.

"இப்போ பாரு நவரசத்தில் நான் என்ன எக்ஸ்பிரஷன் குடுக்கிறேனோ இந்த பொம்மையும் அதே எக்ஸ்பிரஷன் குடுக்கும்...வித் சவுண்ட்"

"சவுண்ட் எங்கிருந்து வந்துச்சு"

"ஹ்ம்ம் பில்லி தொண்டையில் இருந்து வந்துச்சு" அவள் முகவாயை பிடித்து ஆட்டியபடியே கூறியவன்," சரி சொல்லு என்ன எக்ஸ்பிரஷன் கொடுக்கட்டும்"

"வெட்கம்" சொல்லிவிட்டு "ஹாஹஹாஹ்" என்று சிரித்தாள்.

"ஐயே ஒன்பது ரசத்துல இது தான் கிடைச்சுதா"

"லெமன் ரசம் குடு அப்போ" அவளுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டால் இப்படி தான் அவனிடம் கன்னாபின்னாவென்று உளரிக் கொண்டே இருப்பாள்.

"சரி சரி வெட்கம் டிரை பண்ணுவோம்" என்றவன் லேசாக வெட்கப்படுவது போல தன் முகத்தை பொம்மையின் முகத்திற்கு முன் வைக்க அந்த பொம்மை அழகாய் வெட்கப்பட்டு சிரிப்பை வேறு உதிர்த்தது.

"வாவ்..சித்து...என்ன மாதிரியே வெட்கப்பட்டு சிரிக்குதுடா" அவள் குட்டிக் கண்களை விரித்து வாயை பிளந்து ஆச்சரியமானாள்.

"நீ தானேடா அந்த பொம்மை" தன் முயற்சி வெற்றி அடைந்ததில் அவனுள்ளும் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

"வா...எல்லோர்கிட்டேயும் காட்டலாம்" அபூர்வா தங்கள் மொத்த குடும்பத்தையும் அமர வைத்து எல்லோரையும் ஒரு பாவம் காட்ட சொல்லி அவனது பொம்மைக்கு டெமோ கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் அமைதியாக கைகளை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ப்ளிக் வோட்ஸ் ஆல்சோ கவுண்ட்ஸ்" நடுவர்கள் மாணவர்களிடம் சொல்லிச் சென்றார்கள்.

ப்ரகதி மைதானில் வார இறுதியில் நடந்த அந்த அறிவியல் கண்காட்சியைக் காண ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் ஸ்டால் இருந்தது.

சித்தார்த்துடன் சோனாலியும் நீரஜும் இருந்தனர்.

"நீ இப்போ வர வேண்டாம் பில்லி" வீட்டிலேயே சித்தார்த் அவளிடம் சொல்லிவிட்டிருந்தான்.

சரி என்று தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.