(Reading time: 28 - 56 minutes)

வள் எப்போதும் இப்படித் தான். சித்தார்த் ஒன்று சொன்னான் எனில் ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டாள். அவன் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அதில் ஏதேனும் காரணம் இருக்கும் என்று அறிவாள். ஏதேனும் ஆலோசனை தேவை என்றாலோ முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வந்தாலோ முதலில் அபூர்வாவிடம் தான் அதைப் பற்றி விவாதிப்பான் சித்தார்த். அவர்களுக்குள் சொல்லாமலே அந்த புரிதல் சிறு வயது முதலே இருந்து வந்தது.

 "ப்ரைஸ் எப்போ குடுப்பாங்க" ஆவலுடன் கேட்டாள்.

"சண்டே மார்னிங் வரை தான் எங்க ப்ராஜெக்ட்ஸ் ஸ்டால். ஈவினிங் பங்ஷன் இருக்கு. யாரு வர்றாங்கன்னு தெரியும்ல"

"யாரு வராங்க"

"நம்ம ப்ரஸிடண்ட் சார் வராரு"

"ஹே நிஜமாவா" அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

"லூசு...நீ டாக்டருக்கு படிக்க ஆரம்பிச்சதில் இருந்து எல்லாமே மழுங்கி போயிருச்சு... ரெண்டு நாளா நியூஸ் பேப்பர்ல கொட்டை எழுத்தில் போட்டு வருது "

"போடா... எனக்கு பார்ம் டெஸ்ட் வேறே இருக்கு..மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கு."

"ஏண்டா  ரொம்ப கஷ்டமா இருக்கா சப்ஜெக்ட்ஸ். உனக்கு பிடிச்சு தானே ஜாயின் பண்ண..பர்ஸ்ட் இயர்ல டிஸ்டின்க்ஷன் வாங்கிருக்கியேடா" அபூர்வாவை இவ்வாறு பார்த்ததில்லை அவன். கொஞ்சம் தவித்து  தான் போய்விட்டான்.

"ஐயோ சித்து...நீ ஏன் டென்சன் ஆகுற... அவ்ளோ கஷ்டம் எல்லாம் இல்லை...கொஞ்சம் மனப்பாடம் பண்ற மாதிரியான சப்ஜெக்ட் இது...அதான் கடுப்பா இருக்கு...நமக்கு புரிஞ்சு படிக்கிறது தானே பிடிக்கும்" அவசர அவசரமாக அவனை சமாதானம் செய்தாள்.

"நாளைக்கு ஈவினிங் பங்க்ஷனுக்கும் நான் வர வேண்டாமா " அவன் தோளில் சாய்ந்து கொண்டு பேச்சை மாற்றினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

"எல்லோரும் தான் போறோம். நான் முன்னாடியே போய்டுவேன். ப்ரஸிடண்ட் சார் ப்ராஜெக்ட்ஸ் பார்க்க வந்தாலும் வரலாம்"

"அவருக்கு தான் ஸ்டுடண்ஸ் பிடிக்கும் ஆச்சே...கண்டிப்பா வருவாரு"

“ உன்ன நான் என்கூட கூட்டிட்டு போறேன். அப்பா எல்லோரையும் அழைச்சுட்டு வந்திருவார்"

"சோனாலி நீரஜ் நம்ம கூட இருப்பாங்களா"

"இல்ல அவங்க எங்க காலேஜ் மக்களோட ஐக்கியம் ஆகிருவங்க....எங்க ஹோல் ஐ ஐ டி யும் அங்க தான் இருக்க போகுது... எங்களது மட்டும் 3 ப்ராஜெக்ட்ஸ்" பெருமையாக சொன்னான்.

"அப்போ நீ பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கும் போது சூப்பரா இருக்கும்ல" அவனுக்கு தான் முதல் பரிசு என்று முடிவே செய்து விட்டாள்.

"இட்ஸ் நாட் அபவுட் வின்னிங் பில்லி...எனக்கு இந்த பொம்மை செஞ்சது ரொம்ப ஸ்பெஷல்...என்னோட அபூர்வா பொம்மையாச்சே"

அவன் எத்தனையோ இது போல செய்து கொண்டிருப்பது தான். ஆனால் இப்படி தேசிய அளவில் முறையான ப்ராஜெக்ட் என்று பங்குபெறுவது இதுவே முதல் முறை. அதனாலேயே அபூர்வா மிகுந்த ஆர்வம் காட்டினாள். அவன் வெற்றி பெற்று புகழ் பெற வேண்டும் என மனதார விரும்பினாள்.

முதல் நாள் கண்காட்சியில் குழந்தைகள் எல்லோரும் சித்தார்த் ஸ்டாலில் தான் கும்பலாக குவிந்திருந்தனர். அபூர்வா எப்போதும் நடனத்தின் போது அணியும் பச்சை வண்ண நாட்டிய பாணி உடையை பொம்மைக்கு அணிவித்திருந்தான்.

சாதரணமாக பார்க்கும் போது நாட்டிய உடை அணிந்த ஒரு பார்பி பொம்மையைப் போல காட்சி அளித்தது சித்துவின் “தி நவரசா டால்”. அதன் நெற்றியில் பேஸ் சென்சரை பொருத்தியிருந்தான். அந்த பொம்மை முன் நின்று ஒருவர் காட்டும் முக பாவத்தை அந்த சென்சர் உணர்ந்து ஏற்கனவே ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கும் நவரசங்களில் உரியதை தேர்ந்தெடுத்து அந்த பொம்மையில் அதை வெளிப்படுத்தும். பாவத்துடன் வெளிப்படுத்தும் பொம்மையை சற்று கூர்ந்து கவனித்தால் அது அபூர்வா முகம் போல காட்சியளிப்பது தெரியும்.

"பாபா ஏ டால் முஜே சாஹியே"(அப்பா இந்த பொம்மை எனக்கு வேணும்)

"பையா ஏ டால் முஜே தே தோ" (அண்ணா எனக்கு இந்த பொம்மையைக் கொடு)

பல குழந்தைகள் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகளும் கவரப்பட்டு பொம்மை வேண்டும் என்று அழுது அடம் செய்தனர்.  

விலைக்கு கிடைக்குமா என்று நிறைய பெற்றோர் கேட்க வேறு செய்தனர்.

"வெற்றி பெற்றால் இந்த பொம்மையை பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்...அப்போது மார்க்கெட்டில் கிடைக்கும்" ஒருங்கிணைப்பாளர் உதவிக்கு வரவே பெற்றோரும் குழந்தைகளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

ரவு அவனது வீட்டிலேயே நிலாவோடு காத்துக் கொண்டிருந்தாள் அபூர்வா. சோனாலி நீரஜ் சகிதம் வந்த சித்தார்த்தை ஆவலுடன் எதிர்கொண்டாள்.

சித்தார்த் அவளை கொஞ்சம் சீண்டி பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் சோனாலி ஓடிச் சென்று கதை கதையாக அபூர்வாவிடம் ஒப்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.