(Reading time: 28 - 56 minutes)

ல்ல வேளை அபி நீ வரல... அப்புறம் அந்த குழந்தைகள் எல்லாம் இந்த ‘தீதி’(அக்கா) தான் வேணும்னு அடம் பிடிச்சுருப்பாங்க" நீரஜ் சொல்லவும் அங்கே அனைவரும் சந்தோஷமாக மகிழ்ந்து சிரித்தனர்.

"அது என் பொம்மை" ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலா வந்து பொம்மையை கையில் எடுத்துக் கொண்டாள்.

"போச்சு இவ முன்னாடி போய் எல்லாக் கதையையும் சொல்லியாச்சா" அபூர்வா சொல்லிக் கொண்டே "நிலா  பொம்மையை சித்து கிட்ட குடுத்துட்டு வா வீட்டுக்குப் போகலாம்" அபூர்வா அதட்டினாள்.

"அபி ஏன் என் செல்லத்தை அதட்டுற . நிலா பேபி இந்த பொம்மை உனக்கே உனக்கு தான். நாளைக்கு ஒரு நாள் மட்டும்  எக்ஷிபிஷன்ல வச்சுட்டு அப்புறம் நான் கொண்டு வந்து தருவேன். சரியா" நிலாவை அணைத்து அன்பாய் சித்தார்த் சொல்லவும் உடனே பொம்மையை அவனிடம் கொடுத்து விட்டாள் நிலா. 

“யு நோ அபி. நான் பர்ஸ்ட் டைம் சித் வீட்டுக்கு வந்த போது ஐ தாட் நிலா ஸ் சித்ஸ் சிஸ்" நீரஜ் சொல்லவும் சித்தார்த்தும் அபூர்வாவும் ஒரு அர்த்தத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

."ஸ்டுடண்ட்ஸ் தி ஹானரபில் ப்ரஸிடண்ட் விஷ் டு சி ஆல் தி ப்ராஜெக்ட்ஸ்...பி ரெடி" ஒருங்கிணைப்பாளர் சொல்லி விட்டு சென்றார். எக்ஷிபிஷன் முடிந்து விட்ட நிலையில் அபூர்வாவை அங்கே அழைத்து வந்திருந்தான் சித்தார்த்.

ஒவ்வொரு மாணவரிடமும் ப்ராஜெக்ட் பற்றி கேட்டு அறிந்து உற்சாகப்படுத்திய குடியரசு தலைவர் இறுதியாக சித்தார்த்தின் ஸ்டாலுக்கு வருகை புரிந்தார்.

"உங்கள் பொம்மைக்கு குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பு என்று கேள்வியுற்றேன் .மிக்க மகிழ்ச்சி" வந்ததுமே அவனின் கை குலுக்கி தன் பாராட்டினை ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிறகு செயல் விளக்கங்களை கேட்டு கொண்டே அருகில் நின்றிருந்த அபூர்வாவை பார்த்தவர் சித்தார்த் கூறிய நுணுக்கங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். பொம்மையை ஒரு முறை உற்று பார்த்தவர் மீண்டும் அபூர்வாவை பார்க்க அவரின் அனுபவமிக்க கண்கள் கண்டு கொண்டன.

"சோ தி யங் லேடி ஐஸ் தி இன்ஸ்பிரஷன்" புன்னகைத்தவர்," ஆர் யு எ டான்சர் மை சைல்டு" என்று அபூர்வாவிடம் கேட்டார்.

"ஆம்" என்று அவள் அடக்கமாக கூற இன்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவல்லில் பங்கேற்க அவள் தேர்வு செய்ய பெற்றிருக்கிறாள் என்று சித்தார்த் கூறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

"ன் தி ஸ்டுடண்ஸ் ப்ராஜெக்ட் கேட்டகரி, தி பர்ஸ்ட் ப்ரைஸ் கோஸ் டு" இந்த இடத்தில் அறிவிப்பாளர் சற்று நிறுத்தவும் மைதானத்தில் பெருத்த அமைதி. ஏற்கனவே மூன்றாம் மற்றும் இரண்டாம் இடம் பிட்ஸ் பிலானியும், சென்னை அண்ணா பல்கலை கழகமும் தட்டிச் சென்றிருந்தன.

ஆகையால் முதல் பரிசு எந்த ஐஐடிக்கு கிடைத்தாலும் பெருமையும் மகிழ்ச்சியுமே என அங்கு குழுமியிருந்த மொத்த ஐஐடி மாணவர்கள் வேண்டினர்.

"பில்லி...டென்ஷான இருக்கா" அந்த சிறு இடைவெளியில் அபூர்வாவிடம் சித்தார்த் கேட்க

"உன் பேரை பார்த்து பேய் அறைஞ்சு போய் நிக்கிறாரோ" அவள் மிக நம்பிக்கையாக உற்சாகமாக இருந்தாள்

"எஸ் யுவர் கெஸ் ஐஸ் ரைட்" அறிவிப்பாளர் சொல்ல அபூர்வா "பார்த்தியா என் கெஸ் ரைட்டாம்" என சொல்லி முடிப்பதற்குள்

"சித்தார்த் .எஸ். கிருஷ்ணமூர்த்தி பார் தி நவரசா டால்" என அறிவிப்பாளர் சொல்லவும் கரகோஷம் கைதட்டல் சப்தம் தில்லியையே அதிர செய்தது.

பரிசு வாங்கவென மேடை ஏறியவன் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளரிடம் ஏதோ காதில் சொல்ல அவர் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று ஓகே சொல்லவும் அபூர்வாவை மேடைக்கு வருமாறு சைகை செய்தான்.

திடீரென அவன் அவ்வாறு அழைக்கவும் ஒரு கணம் திகைத்தவள் மேடை ஏற, அவள் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

அறிவிப்பாளர் "தி டால் இன் ரியல்" என்று அபூர்வாவிற்கு அறிமுகம் தர ஏற்கனவே சித்தார்த் பரிசு பெற்றதில் பெருமிதம் அடைந்திருந்த குடும்பம் இப்போது இன்னும் மகிழ்ச்சி அடைத்தனர்.

சித்தார்த் பரிசு பெற்றதில் விஜயகுமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் அவன் தன் ஒவ்வொரு செயலிலும் அபூர்வாவை முன்னிறுத்துவதைக் கண்டு பேரானந்தம் கொண்டார்.

அந்தப் பரிசுத் தொகையோடு  இருவரின் சேமிப்பினையும் போட்டு வாங்கிய பைக் தான் இது. அபூர்வாவிற்கு அப்போது 18 வயது முடிந்திருக்கவில்லை. அதனால் இந்த பைக் மட்டும் சித்தார்த் தன் பெயரில் வாங்கியிருந்தான்.  அதனாலேயே இந்த பைக் அவளுக்கு மிகவும் பிடித்தம். மற்றபடி சித்தார்த் தான் சுயமாக உருவாக்கிய, சம்பாதித்த அனைத்தையுமே தன் காட்டஸ் ஏஞ்சலுக்கே காணிக்கையாக சமர்பித்திருந்தானே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.