(Reading time: 28 - 56 minutes)

06. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

தொலைத்த அடையாளங்களின் முகவரி நீ!!!

Marbil oorum uyire

திகாலை நேரம்

தோட்டத்துப் பூக்கள் எல்லாம் புன்னைகையுடன் விரிந்து மணம் வீச மரங்களின் கிளைகளில் இருந்து பறவைகள் கிரீச்சிட அந்த ரம்மியமான பொழுதினை ரசித்தபடியே அத்தை போட்டுக் கொடுத்த பில்டர் காபியை ஒவ்வொரு சொட்டாய் ருசித்து ருசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் அபூர்வா.

ஜாகிங் முடித்து திரும்பிய சித்தார்த் அவள் கையில் இருந்த கோப்பையை சட்டென பிடுங்கி ஒரே மடக்காக குடித்து விட்டான்.

திடீரென அவன் பிடுங்கவே அவள் திகைத்து நின்ற ஒரு கணமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

"டேய் மங்கி டாங்கி எருமை" வேறு என்ன சொல்லி அவனை திட்டுவது என தனது மெமரி பெட்டியில் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.

"அடடா ஏன் பில்லி நிறுத்தி விட்டாய்...காலை வேளையில் மந்த மாருதம் வீசும் இந்த மனோகர சூழலில் உன் செம்பருத்தி இதழ்கள் தேனாய் உதிர்க்கும் இனிய மொழிகள் என் பெருமை பாட அதில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே பில்லி ஏமாற்றாதே"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அய்யய்யோ சித்து உடம்புல பாகவதர் ஆவி பூந்திருச்சே. இந்த வேப்பமரம் எங்க போச்சு  காணோம்" அவனுக்கு வேப்பிலை அடிக்க அவள் வேப்பமரத்தைத் தேடுவது போல இங்கும் அங்கும் நடைபயின்றாள்.

"காயாத கானகத்தே ஆஆ ஆஆ காயாத கானகத்தே ஆஆ ஆஆ நின்றுலாவும் காரிகையே ஆஆஆ" சித்து பாட அடக்க மாட்டாமல் சிரித்தாள் அபூர்வா. அவனோ பாகவதர் பாணியில்  ராகம் இழுத்துக் கொண்டே இருந்தான்

"சித்து ப்ளீஸ் போதும் வயிறு வலிக்குது" குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே அவன் தோளில் அடித்தாள்.

"என்ன ஐயா ஒரே குஷி மூட்ல இருக்கீங்க"

"சொல்ல மாட்டேனே"

"நீ சொல்லாட்டி எங்களுக்கு தெரியாதோ"

"நான் சொல்லலைனா எப்படி தெரிஞ்சுப்பீங்களோ"

"சொன்னது சொல்லாதது, கூறியது கூறாதது, உரைத்தது உரைக்காதது, செப்பியது செப்பாதது மொழிந்தது மொழியாதது அனைத்தும் அறிவோம் யாம். 

"தேவியே!! தாங்கள் அனைத்தும் அறிந்த ஞானி. ஒத்துக்கொள்கிறேன். இப்படி காலங்கார்த்தாலேயே திருவிளையாடல் பட ட்ரைலர் ஓட்டி இம்சிக்க வேண்டாம் என்பது அடியனின் வேண்டுகோள்" அவள் முன் இரு கைகளையும் கூப்பி இடை வரை குனிந்து வணங்கினான்.

"அஃது….அந்த மரியாதையும் பணிவும் இருக்கட்டும். ஏதோ புதிய கண்டுபிடிப்பு செய்திருக்கிறாய் சித்தார்த்தா. நவரசத்தில் நீ பரவசத்தை கொண்டிருப்பது அதனால் தானே" அவனுக்கு ஆசி வழங்குவது போல போஸ் கொடுத்து நின்றாள்.

"ராட்சசி...எல்லாத்தையும் கண்டுபிடிச்சுடறா" ஆசி வழங்கி கொண்டிருந்த கையைப் பிடித்து மடக்கி அருகில் இழுத்து அவள் தலையோடு தன் தலையை முட்டினான்.

"ஐயே… இது பெரிய கொலம்பஸ் கண்டுபிடிப்பு பாரு. நேத்து ப்ரோக்ரேம் நடுவில நீ வீட்டுக்கு போலாம் பில்லி  வீட்டுக்கு போலாம் பில்லின்னு சப்பாணி மாதிரி தலையை சொறிஞ்சிட்டு இருந்தியே அப்போவே நினச்சேன் இன்னிக்கு சித்துவுக்கு ஆன்டி டாண்ட்ராஃப் ஷாம்பூ வாங்கி கொடுக்கணும்னு"

இருவருக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முந்தைய நாள் இரவு அவள் அழுததற்கு இன்று சேர்த்து வைத்து அவளை சந்தோஷத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தான் சித்தார்த். தனது கண்ணீரில் துடித்து நின்றவனை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தாள் அபூர்வா.

"பில்லி...நியூ ப்ராஜெக்ட் சைன் ஆச்சுல்ல அதுக்கு இன்னிக்கு நைட் பார்ட்டி கொடுக்குறோம்"

"இன்னிக்கா" அவள் ரகாமாய் இழுத்தாள்.

"ஏன் பில்லி. மண்டேல இருந்து ஒர்க் ஸ்டார்ட் ஆகிரும். நியூ டீம் வேற ரெக்ரூட் பண்ணிருக்கு. அவங்க எல்லோருக்கும் வெல்கம் பார்ட்டி குடுக்கணும்ல"

தனது ஐ.ஐ.டி நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை  வெற்றிகரமாக நடத்தி வருகிறான் சித்தார்த்.

எம்.ஐ.டி யில் மாஸ்டர்ஸ் படித்துகொண்டிருக்கும் போதே அங்கேயே நல்ல வாய்ப்புகள் தேடி வர சிறிது காலம் யு .எஸ்ஸிலேயே பணி புரிந்தவன் விரைவிலேயே நண்பர்களோடு ஆலோசித்து இந்த நிறுவனத்தை ஒரு வருடம் முன்பு தான் தொடங்கி இருந்தான். முதலீடு முழுவதும் சித்தார்த்தே செய்திருந்த போதும் லாபத்தை தன் ஒர்கிங் பார்ட்னர்ஸ் சோனாலி மற்றும் நீரஜுடன் பங்கிட்டுக் கொண்டான்.

"ஜெனீவா கான்பிரான்ஸ்க்கு அப்ஸ்ட்ரேக்ட் (ABSTRACT ) அனுப்பனும்டா. நான் லைப்ரேரில கொஞ்சம் ரெஃபர் பண்ணனும். ஒன்னு செய் .பார்ட்டிக்கு போகும் போது என்ன லைப்ல இருந்து பிக் அப் பண்ணிக்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.